மா சாகுபடியில் தத்துப்பூச்சி, பழ ஈ, சாம்பல் நோய், கூன் வண்டு தடுப்பு

தத்துப்பூச்சிகள்: 3 வகையான தத்துப் பூச்சிகள் மற்றும் அதன் குஞ்சுகள் மா பூக்கும் தருணத்தில் பூங்கொத்துகளின் சாற்றை உறிஞ்சுவதால் வாடிவிடும். சேதம் அதிகரிக்கும் நிலையில் மொட்டுகளும், பூக்களும் கருகி உதிர்ந்து விடும். குஞ்சுகள் தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால் இலை மற்றும் பூங்கொத்துகளில் இத் தேன் துளிகளை காணலாம். தேன் சொட்டுவதால் கேப்னோடியம் என்ற பூசணம் இலைகளைத் தாக்கி கருமையாக மாறி உதிரச் செய்துவிடும்.

mango

இத் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூங்காம்பு உருவாகும் தருணத்திலும், இரு வாரங்கள் கழித்தும் மருந்தடிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பரில் 50 சதவீத நனையும் தூள் மற்றும் 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளிக்க வேண்டும்.

மறுமுறை 1 லிட்டர் நீருக்கு ஒன்றரை மிலி பாசலோன் கலந்து தெளிக்க வேண்டும்.

இலை பிணைக்கும் புழு: புழுக்கள் மெல்லிய நூல் இழையால் அடுத்தடுத்த இலைகளைப் பிணைத்துக் கொண்டு உள்ளிருந்து சுரண்டி உண்ணும். தாக்குதல் அதிகமிருப்பின் நரம்புகள் மட்டுமே மிஞ்சும். இதற்கு ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி என்ற அளவில் பாசலோன் 35 ஈ.சி. கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

பழ ஈ: முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியைத் தின்று அழிக்கும். இதனால் தோலில் பழுப்புநிறத் திட்டுகள் உருவாகி அழுகி கீழே விழுந்துவிடும்.

Mango_pazhaee_crop_prot_crop_iage002_0004

எனவே, இடை உழவு செய்வதன் மூலம் மரத்தைச் சுற்றி மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்கலாம். மிதைல் யூஜினால் கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 10 எண்கள் வைத்து தாய்ப் பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். வெம்பி விழுந்த பழங்களைச் சேகரித்து அழிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மிலி பென்தியான் அல்லது 2 மிலி மாலத்தியான் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

mango_pazha_ee2

மா தண்டுப்புழு: பெண் வண்டு தனது முட்டைகளை மரப்பட்டை அடியில் இடும். புழுக்கள் உருவாகி மரத்தை குடைந்துச் சென்று சேதம் உண்டாக்கும். மரத்தைச் சுற்றிலும் மரத்தின் தூள்களும், புழுவின் கழிவுகளும் இறைந்து கிடக்கும்.

இதற்கு கம்பியால் குத்தி புழுவை எடுத்து அழிக்கலாம். துளையில் 5 கிராம் கார்போபியூரான் 3 சதவீத குருணையை இட்டு களிமண்ணால் பூசலாம். 5 செ.மீ-க்கு 5 செ.மீ என்ற அளவில் சதுர வடிவ மரப்பட்டையை நீக்கி 10 மிலி மானோ குரோட்டோபாûஸ பஞ்சில் நனைத்து வைத்து மரப்பட்டை வைத்து களிமண்ணால் பூசலாம். காய்க்காத பருவத்தில் இதை மேற்கொள்ள வேண்டும்.

சாம்பல் நோய்: வெண்மை அல்லது சாம்பல் நிறப் பூசண வளர்ச்சி மலர் கொத்துகளில் காணப்படும். மலர்கள் பெருமளவில் உதிர்ந்து விடுகின்றன. இதற்கு ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் நனையும் கந்தகம் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

பறவைக் கண் நோய்: இலைகளில் வட்ட வடிவப் புள்ளிகள் தோன்றும். சிறுகிளைகள் நுனியில் இருந்து பின்னோக்கி காய்ந்துவிடும்.

எனவே ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மாங்கோசெப் அல்லது ஒரு கிராம் கார்பண்டசிம் அல்லது 2 கிராம் குளோரோதலானில் மருந்துகளில் ஏதாவது ஒன்றை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.

அறுவடை
ஆலோசகர்
இணையதளம்
உயிர் உரம்
உரம்
கறவை எந்திரம்
கலப்பை
கால்நடை
கொள்முதல்
சமூக வலைப் பதிவு
சாக்கு – பை
சூரிய விளக்கு
டிராக்டர் – பவர்டில்லர்
தானியம் அறவை
தார்பாய் – விரிப்பு – கூடாரம்
தீவனம்
தூளாக்கும் எந்திரம்
தேனி வளர்ப்பு
நடவு எந்திரம்
பயிற்சி
பாசனம்
பூச்சிக் கொல்லி
பூமி அகழ்வு
மற்றவை
மோட்டார் பம்ப்
ரம்பம்
வலை – வேலி
வளர்ச்சி ஊக்கி
விசைத்தெளிப்பான்
விதை – நாற்றங்கால்
வீடர் – பவர் வீடர்
வேளாண் கருவிகள்

கூன் வண்டு: மாங்கொட்டை கூன் வண்டைக் கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொதுவாக வண்டு தாக்கிய பழமானது சுவையாக இருக்கும் என்பது மக்களிடையே உள்ள பரவலான கருத்து. ஆனால், கூன் வண்டானது அதிக சுவை கொண்ட பழங்களையே தேர்ந்தெடுத்து, அதன் மேல் முட்டையிட்டு பின்னர் புழுவாக மாறி உண்ண தொடங்கும்.

இவ் வண்டானது தமிழ்நாட்டில் நீலகிரி தவிர மா பயிரிடப்படும் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படும். இவை அதிக இனிப்பு சுவை கொண்ட ரகங்களான நீலம், பெங்களூரா மற்றும் அல்போன்ஸா போன்ற ரகங்களைத் தாக்கக் கூடியது.

பாதிக்கப்பட்ட பழங்களானது தரம் குறைந்து காணப்படும். கூன் வண்டு தாக்கப்பட்ட பழங்களை ஏற்றுமதி செய்ய இயலாது. இதன் தாக்குதலால் 70 முதல் 90 சதவீதம் வரை வருமான இழப்பு ஏற்படுகிறது.

சேத அறிகுறிகள்: இவ்வண்டின் புழுவானது பிஞ்சு காய்களின் சதைப் பகுதியைக் குடைந்து சென்று மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை உண்ணும். மேலும், இதன் தாக்குதலால் பிஞ்சுகள் உதிர்ந்து விடும். உதிர்ந்த பிஞ்சுகள் மற்றும் காய்களை பிளந்து பார்த்தால் உள்ளே புழு இருப்பது தெரியும். ஒரு மாங்கொட்டையினுள் ஒரே ஒரு புழு காணப்படும்.

வாழ்க்கை பருவம் : தாய் வண்டானது முட்டையை கோலி குண்டு அளவுள்ள சிறிய பிஞ்சுகளில் தன்னுடைய மூக்குப் பகுதியினால் பிஞ்சின் மேல்பகுதியை சுரண்டி, முட்டைகளை தனித்தனியாக இட்டு அதை ஒருவித திரவத்தினால் மூடிவிடும். முட்டையில் இருந்து ஐந்து நாள்களில் வெளிவரும் புழுவானது இளம் மஞ்சள்

நிறத்தில், கால்கள் இல்லாமல் இருக்கும். புழு மாங்கொட்டையின் உள்ளே கூட்டுப் புழுவாக மாறிவிடும். இவ்வண்டானது கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

மேலாண்மை முறைகள்: மரப்பட்டைகளின் இடுக்குகள் மற்றும் வெடிப்புகளில் உறக்க நிலையில் உள்ள வண்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

கீழே உதிர்ந்து கிடக்கும் பூ மற்றும் பிஞ்சுகளைச் சேகரித்து அழிப்பதன் மூலம் வண்டுகளை குறைக்கலாம். பென்தியான் 100 இசி 1 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கோலிகுண்டு அளவுள்ள பிஞ்சுகளில் தெளித்து இவ்வண்டின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.

பொதுவாக வண்டு தாக்கிய பழமானது சுவையாக இருக்கும் என்பது மக்களிடையே உள்ள பரவலான கருத்து. ஆனால், கூன்வண்டானது அதிக சுவை கொண்ட பழங்களையே தேர்ந்தெடுத்து, அதன் மேல் முட்டையிட்டு பின்னர் புழுவாக மாறி உண்ணத் தொடங்கும்.

விரிவான தகவலுக்குப் பார்க்கவும் –

தவேபக பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன்

logo.png

Leave a comment