சூரிய சக்தி விளக்கு – ஆயுத பூஜை & கரண்ட் கட் சிறப்புப் பதிவு

நெடுநாள் நினைத்துக்கொண்டு இருந்தாலும் தமிழ்பயணியார் மற்றும் திரு ஐயப்பன் அவர்களின் மாரல் சப்போர்டுடன் இந்த சோலார் விளக்கு வைபவம் நேற்று இனிதே நடந்தது.

தேவையான பொருட்கள்

எண் கருவி எண்ணம் விலை
1 12 V 7 AH பாட்டரி 1 800
2 12 V 30 W சோலார் செல் 1 2150
3 சார்ஜர் – இன்வர்டர் 1 1550
4 ஒயர்- இரட்டை வடம் 12 மீட்டர் 96
5 ஒயரை இன்வர்டருடன் இணைக்கும் பின் 2 4
6 CFL விளக்கு 1 30
ஆக மொத்தம் 4630

2 மற்றும் 3ஆம் பொருட்கள் ebay மூலமாக சந்தித்த விற்பனையாளர் மூலம் கிடைத்தது.

செய்முறை

சோலார் பேனல்

சோலார் பேனல்

இன்றைக்கு இருட்டிக்கொண்டு வருகிறது. இருக்கும் வெளிச்சத்திற்கு ஏன் மொட்டை மாடிக்குப் போவானேன். வராண்டாவிலேயே பேனல் வைக்கப்படுகிறது. அந்த பேனலை தெற்கு வடக்காக 15 டிகிரி சாய்வில் வைக்கச் சொல்கிறார்கள். அதாவது காலை முதல் மாலை வரை நிழல் வராமல் வெளிச்சம் படுவதற்காக.


Spec

Spec

ஸ்பெக் வேண்டுவோருக்காக


முணையம்

முணையம்

ஒயர் சீவப்பட்டு பேனலின் முணையத்துடன் முறுக்கப்பட்டுள்ளது


இன்வர்டர் சார்ஜர்

இன்வர்டர் சார்ஜர்

இது நமது சார்ஜர் மற்றும் இன்வர்டர் பொட்டி. இந்த வேலைக்கு ரெடிமேட் சர்க்யூட்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி இணைத்தால் இன்னும் விலை குறையும். ஆனால் அதற்குத் தகுந்த கூடு (cabinet) தேடிப்பிடிக்க வேண்டும். இந்தப் பெட்டியில் 4 LED விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. இரவு விளக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். CFL விளக்குப் பொறுத்த ஒரு holder பொறுத்தப்பட்டுள்ளது. இதற்குள் ஏற்கனவே நாம் வாங்கிய பாட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


இன்வர்டர் சைடு

இன்வர்டர் சைடு

இதில் இடது புறத்தின் மேலே சோலார் பாட்டரி இணைக்க பின்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே 3 பிளக்குகளில் லோடு இணைத்துக்கொள்ளலாம். அதாவது CFL விளக்கு – மொபைல் சார்ஜர் – DCயில் இயங்கும் ஃபேன்


சோலார் இணைப்பு

சோலார் இணைப்பு

முணையத்திலிருந்து வரும் ஒயர் செருகப்படுகிறது. +ve -ve சரியாகப் பார்த்து இணைக்கவேண்டும்.


சார்ஜ் ஆகிறது

சார்ஜ் ஆகிறது

பாட்டரியை இணைத்த அடுத்த நொடி வெளிப்புர சார்ஜர் விளக்கு ஒளிர்கிறது.


LED விளக்குகள்

LED விளக்குகள்

இந்த LED விளக்குகள் நிறைய நேரம் எரிய பயன்படுத்திக்கொள்ளலாம்


CFL இணைக்கப்படுகிறது

CFL இணைக்கப்படுகிறது

தலையில் உள்ள holderல் CFL இணைக்கிறோம்.


UPS ON - CFL ஒளிர்கிறது

UPS ON – CFL ஒளிர்கிறது

50 வாட் அளவுள்ள இந்த கருவியின் மூலமாக 3 CFL விளக்குகளை 2 மணிநேரம் எரிக்கலாம். அல்லது 1 CFLஐ 5 மணிநேரம் வரையில் இயக்கலாம். CFLன் பவர் கூடக் கூட அது ஒளிரும் நேரம் குறையும்