சென்னை அக்ரி எக்ஸ்போ

கடந்த மூன்று நாட்களாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்ரி எக்ஸ்போ என்கிற பெயரில் விவசாய கண்காட்சி நடந்து வருகிறது. திருச்சி மற்றும் திண்டுக்கல் கண்காட்சிகளைத் தவறவிட்டதால் இதனைத் தவற விடுதல் ஆகாது என்று கடைசி நாளான இன்று சென்று வந்தேன்

image

ஏற்கனவே சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம் என்று தமிழக அரசு அறவித்துள்ள நிலையில் இந்த கண்காட்சி முக்கியமாகப்பட்டது. விபரங்கள் அறிய வியாபாரிகள் உதவுவார்கள் அல்லவா.

image
துரதிர்ஷடவசமாக எதிர்பார்த்த அளவிற்கு விவசாய கடைகள் ஒதுக்கப்பட இல்லை. பெரும்பாலும் ஆரோக்கியம் என்ற தலைப்பின் கீழ் சர்க்கரை நோய்க்கான மருந்து, உணவுப்பொருட்கள் நிறைந்திருந்தன.

image

image

image

image

image

image

image

image

image

விவசாய அரங்குகளைப் பொருத்தமட்டில் டிராக்டர்கள், கை மற்றும் விசைத் தெளிப்பான்கள், பவர் டில்லர்கள், களை கருவிகள், நடவுஎந்திரம் மற்றும் அதற்கான தட்டுக்கள், மண்புழு மற்றும் உயிர் உரங்கள் அரங்குகளை ஆக்கிரமித்திருந்தன. சிறப்பான செய்திகள் ஏதும்சிக்கவில்லை. சில படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு.