மரவள்ளியை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது எப்படி?

புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படும் மரவள்ளிகளை தற்போதைய சூழ்நிலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன.

இவற்றை முறையான உயிர்ரக மருந்துகளை உபயோகித்து கட்டுப்படுத்தலாம். மரவள்ளியை பொறுத்தவரை, பொதுவாக விவசாயிகள் முள்ளுவாடி மற்றும் கேரளா ரோஸ் வகைகளையே பயிர் செய்கின்றனர். இந்த மரவள்ளி கிழங்கு வகைகள் சமைப்பதற்கு மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் ஜவ்வரிசி மற்றும் சேமியா தயாரிக்கவும் பயன்படுகிறது.

மரவள்ளிப் பயிர்களில், தற்போது சாறு உறுஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, மாவுப் பூச்சி மற்றும் செஞ்சிலந்திகளின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.

இந்தப் பூச்சிகள், இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் உள்ள சாற்றினை உறிஞ்சுவதால் இலையின் நிறம் மஞ்சள் நிறமாக மாறுவதோடு இலைகளில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனால் மகசூல் குறையும் நிலை ஏற்படுகிறது.

வெள்ளை ஈ:

மரவள்ளி செடிகளில் பொதுவாக முதல் நான்கு இலைகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காணப்படும்.வெள்ளை ஈ, வெள்ளை நிறத்தில் சிறிய ஈ போன்று இருக்கும். இந்த பூச்சிகளுக்கு இறக்கை இருப்பதால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பறந்து சென்று “மொசைக்’ என்ற வைரஸ் நச்சுயிரி நோயினைப் பரப்பும். இதனால் இலைகளில் உள்ள பச்சையம் குறைந்து மஞ்சள் நிறமாக மாறுகிறது.கட்டுப்படுத்தும் முறைகள்:

  • இந் நோய் தாக்கிய மரவள்ளிச் செடிகளை பிடுங்கி எடுத்துவிட வேண்டும்.
  • துத்தி செடிகளையும், மற்ற களைச் செடிகளையும் வரப்பு மற்றும் வயல்வெளிகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

வெள்ளை ஈ தாக்குதல் உள்ள வயல்களில் மணத்தக்காளி செடிகளை ஆங்காங்கே பயிர் செய்வதால், மணத்தக்காளி செடிகளில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை ஏற்படுத்தும். மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகளை, ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் மரவள்ளிச் செடிகளை நோக்கி இருக்குமாறு காலை 4 மணி முதல் 6 மணி வரை அமைப்பதால் மஞ்சள் வண்ணத்தை நோக்கி வெள்ளை ஈக்கள் கவரப்படும்.

அதிகமான தழைச்சத்து உரங்களையும், தேவைக்கு அதிகமான நீர் பாசனங்களையும் பயிர்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மாவுப்பூச்சி:

மாவுப் பூச்சியானது வெள்ளை ஈ போல் ஒரு இடம் விட்டு ஒரு இடம் நகராமல் இலையின் கீழ்ப்பரப்பில் அடைபோல் வெண்மை நிற படலமாக ஒட்டிக்கொண்டு இலையின் சாற்றினை உறிஞ்சும். மரவள்ளி செடியில் பொதுவாக ஐந்தாவது இலைகளிலிருந்து மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

மாவுப்பூச்சி தாக்குதல் உள்ள இலைகளையும், செடியின் கீழ் பாகத்தில் உள்ள இலைகளையும் ஒடித்து விட வேண்டும்.

பொதுவாக 33 சதம் ஸ்டார்ச் உள்ள மரங்களில் உள்ள விதை கரணைகளையே பயன்படுத்த வேண்டும். சாய்வு முறையில் நடவுச் செய்வதால் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

முசுக்கொட்டை செடிகள் (மல்பெரி செடிகள்), நெய்வேலி காட்டாமணக்கு போன்ற செடிகளை வரப்பு ஓரங்களில் பயிர் செய்து இதன் தாக்குதலை குறைக்கலாம்.

திறன்மிகு ஒட்டுண்ணியான “அசிரோபேகஸ் பப்பையே’ என்ற ஒட்டுண்ணியை செடிகளில் ஏவி விட வேண்டும். இரை விழுங்கிகளான “கிரிப்டோலீமஸ் மான்ட்ரோசூரி’ என்ற ஆஸ்திரேலிய பொறி வண்டுகளை ஒரு ஏக்கருக்கு 500 என்ற எண்ணிக்கையில் ஏவி விட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் என்ற அளவில் “வெர்டிசிலியம் லீக்கானி’ என்ற உயிரக பூஞ்சாணத்தை தெளிப்பதால் மாவுப்பூச்சியின் மீது நோய் உருவாகி அதனை இறக்கச் செய்யும்.

தாக்குதல் மத்திமமாக இருப்பின் 3 சத வேப்ப எண்ணெய்யை ஒரு லிட்டர் நீருக்கு 25 மி.லி. அல்லது மீன் எண்ணை சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 40 கிராம் கலந்து இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருப்பின் ரசாயண பூச்சிக்கொல்லியான “புரபனோபாஸ்’ ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. கலந்து இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

செஞ்சிலந்தி:

செஞ்சிலந்திகள் மஞ்சள் வண்ணத்தில் மிகவும் சிறியதாகவும் கூட்டமாகவும் மரவள்ளி இலைப்பரப்பின் மத்தியில் இருந்துகொண்டு சாற்றினை உறிஞ்சும். இதனால் மரவள்ளி இலைகளில் வரிக்கோடுகள் காணப்படும்.

செஞ்சிலந்திகளை பொதுவாக நம் கண்களால் காண இயலாது. உருப்பெருக்கி அல்லது நுண்ணோக்கி மூலம் இவைகளை காண முடியும். இதனால் இலைகளில் பச்சையம் குறைந்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

தாக்குதல் மத்திமமாக இருப்பின் ஒரு சத புங்கம் எண்ணெய் ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து இலைகளின் நடுப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருப்பின் ரசாயன பூச்சிக்கொல்லிகளான “டெகாசஸ் 3.5 இசி’ ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி. அல்லது “புராப்பர்கைட் 5 இசி’ ஒரு லிட்டருக்கு நீருக்கு 1.5 கிராம் என்ற அளவிலும், கார்பன்டஸிம் ஒரு லிட்டருக்கு நீருக்கு 2 கிராம் என்ற அளவிலும் கலந்து இலைகளின் நடுப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி தகவல் – புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் அறிவியல் வேளாண்மை நிலையத்தின் பூச்சியியல் துறை வல்லுநர் நி.விஜயகுமார்

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

நவீன தொழில்நுட்பம் – செலவில்லாத தீவன சாகுபடி

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன் பசுந்தீவனத்துக்காக தனித் தோட்டத்தையே பராமரித்து வருகிறார். பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாப்பாநாடு அருகிலுள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தில்தான் இருக்கிறது அந்த தீவனத்தோட்டம். மல்பெரி, வேலிமசால், சவுண்டல் (சூபாபுல்) போன்ற பலவித தீவனப் பயிர்களை வளர்த்து வருகிறார். 230 சென்டில் மல்பெரி, ஊடுபயிராக வேலி மசால், முயல்மசால், கலப்பக்கோணியம் சாகுபடி செய்துள்ளார் விவசாயி. 5 அடி இடைவெளியில் 3 அடி அகலம், அரை அடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை அமைக்க வேண்டும். வாய்க்கால் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை இரு வாய்க்கால்களுக்கு இடையில் போட்டு மேட்டுப்பாத்தி அமைத்த, வாய்க்கால்களின் வெளிப்புற இரு ஓரங்களிலும் கரணைக்குக் கரணை 3 அடி இடைவெளிவிட்டு மல்பெரி விதைக் கரணைகளை நடவேண்டும். கரணையில் 2 பருக்கள் மண்ணுக்குள் புதையுமாறு இருக்க வேண்டும். 230 சென்ட் நிலத்திற்கு 13 ஆயிரம் விதைக்கரணைகள் தேவைப்படும்.

மேட்டுப்பாத்திகளின் மையத்தில் அரை அங்குல ஆழத்திற்கு நீளமான கோடு இழுத்து ஒரு பாத்தியில் முயல் மசால், அடுத்த பாத்தியில் கலப்பக்கோணியம், அடுத்த பாத்தியில் வேலிமசால் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையும் தலா 2 கிலோ தேவைப்படும். விதைப்பதற்கு முன் ஒவ்வொரு வகை விதைகளுடன் 6 கிலோ மணல் கலந்து சிறிது நேரம் வைத்திருந்து பின் விதைத்து, உயிர்த்தண்ணீர் விட வேண்டும். 3 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நிலத்தின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும். 200 லிட்டர் நீரில் 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ மாட்டுக்கொட்டகைக் கோமிய சகதி ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து பாசனநீர் கலந்து விடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்ய வேண்டும். 90 நாட்களில் அனைத்துமே அறுவடைக்குத் தயாராகிவிடும். முயல்மசால், வேலிமசால் ஆகியவற்றை அறுவடை செய்யும்போது தரையில் இருந்து ஒரு அடி உயரம் விட்டு அறுக்க வேண்டும். இவற்றை 40 நாள் இடைவெளி விட்டு மீண்டும் அறுக்கலாம். மல்பெரி மூலம் ஒரு ஏக்கரில் ஒரு ஆண்டில் சுமார் 30 முதல் 35 டன் தீவனம் கிடைக்கும். 100 அடி நீளம் கொண்ட பாத்தியில் ஒரு வருடத்தில் வேலிமசால் 400 கிலோவும் முயல்மசால் 300 கிலோவும் கலப்பக் கோணியம் 400 கிலோவும் கிடைக்கும். உயிர்வேலியாக சவுண்டல்: வேலி ஓரங்களில் 5 அடி இடைவெளியில் ஒரு சவுண்டல் விதையைப் போட்டு 3வது நாள் தண்ணீர் பாய்ச்சினால்போதும். அதன் பிறகு தண்ணீர், சாணம் எதுவுமே தேவை யில்லை. தானாகவே வளர்ந்துவிடும். 3 மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஒரு மாதத்திலிருந்து ஆண்டுக்கு 15 கிலோ தீவனம் கிடைக்கும். பட்டுப்புழுவுக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் மல்பெரி: பட்டுப்புழு வளர்ப்பதற்கு மட்டும்தான் மல்பெரி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது நல்ல கால்நடைத் தீவனமாகிறது என்ற விபரம் நிறைய விவசாயிகளுக்கு தெரியவில்லை என்கிறார் விவசாயி. இது மாதிரியான பசுந்தீவனத்தை கால்நடைகள் விரும்பி உண்ணும். சீக்கிரம் செரிமானம் ஆகிறது. கால்நடைகளுக்கு வெறும் அடர்தீவனத்தையும் புல்லையும் மட்டம் கொடுத்தால் கண்டிப்பாக ஆராக்கியமாக இருக்காது. விவசாயிகளுக்கு இலவச பயிற்சியும் கொடுத்து, விதைகளையும், விதைக் கரணைகளையும் இலவசமாக கொடுத்து வருகிறேன்.

தொடர்புக்கு: ஆதிநாராயணன், 98656 13616. (தகவல்: பசுமை விகடன், ஜனவரி 2010)

பொரி வண்டுகளை (கிரிப்டோலோமஸ்) உற்பத்தி செய்தல்

சாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிர்களின் இளம்பருவம் முதல் அறுவடை வரை சேதத்தினை ஏற்படுத்துகின்றன. இவற்றால் மாவுப்பூச்சி மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இப்பூச்சியினைச் சுற்றி வெளிப்புறத்தில் வெண்மைநிற பஞ்சு போன்ற அமைப்பு காணப்படும். இப்பூச்சியினை போர்வை போன்று சுற்றி இருந்து பாதுகாக்கிறது. இதனால் இப்பூச்சியினை எவ்வளவு ரசாயன மருந்து அடித்தாலும் மல்பெரி, பப்பாளி போன்றவற்றில் இதன் தாக்குதல் அதிகம் காணப் படுகிறது. குறிப்பாக மல்பெரி இலைகள் பட்டுப்புழுக்களுக்கு உணவாக இடப்படுவதால் அதிக அளவு தொடர்ந்து மழையின்றி நீண்ட நாட்களுக்கு நிலவுவதால் இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக உள்ளது.

இச்சூழ்நிலையில் இயற்கையில் இப்பூச்சியினை பொரிவண்டுகள் உண்ணும். இதன் அடிப்படையில் தற்போது பொரி வண்டுகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்த அதனை வளர்த்து வயலில் விடும் தொழில்நுட்பம் உருவானது. இத்தொழில் நுட்பத்தினை பரவலாக ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே அவற்றின் ஆய்வகங்களில் வைத்து குறுகிய அளவில் உற்பத்தி செய்து வருகிறது. அதனால் விவசாயிகள் இதன் பயனை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. விவசாயிகள் இந்த தொழில்நுட்பத்தினைப் பின்பற்ற இவ்வித உயிர்ப்பூச்சிக் கொல்லிகள் அவர்களுக்கு எளிதாகவும், தரமாகவும் குறைந்த விலையில் தேவையான நேரத்தில் கிடைக்க வேண்டும்.

பொரிவண்டு உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள் / வசதிகள்

1. 20 து 10 அடி பரப்பளவு அறை (2) இரும்பு வளையம் (3) பூசணிக்காய் (4) பவிஸ்டின் மருந்து (5) சுண்ணாம்பு பவுடர் (6) அடுப்பு (7) சல்லடை (8) பிரஷ் (9) தேன் (10) மெழுகு (11) மேடை. டப்பாக்கள் (மூடி காற்றுப்போகும் வண்ணம் சிறு துளைகளுடன் இருக்க வேண்டும்). இவற்றுடன் தினமும் இரண்டு நபர்கள் வேலைசெய்ய தேவைப்படும்.

பொரி வண்டுகளை உற்பத்தி செய்யும் முறை: அரை அடி விட்டமுள்ள டப்பாவினை எடுத்து அதில் 2 கிராம் மாவுப்பூச்சியினை பிரஷ்சால் தொட்டுவிட வேண்டும். இதில் 10 நாட்கள் வயதான 10 ஜோடி கிரிப்டோலோமஸ் பொரிவண்டு அல்லது 20 ஜோடி ஸ்கிம்னஸ் என்ற பொரிவண்டினை விட்டு மூடிவைக்க வேண்டும். இந்த பொரிவண்டுகள் மாவுப்பூச்சியினை உண்டு முட்டைகளை தனித்தனியாகவோ அல்லது 4 முதல் 12 முட்டைகள் சேர்ந்த குவியலாகவோ இடும். அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்களில் சின்ன புழுக்கள் வெளிவந்து மாவுப்பூச்சியினை உண்ண ஆரம்பிக்கும். 10வது நாளில் முட்டை இடுவதற்கு விட்ட பொரிவண்டுகளை தனியாக பிரித்து வேறு டப்பாவில் விட வேண்டும். இந்த இளம்புழுக்களுக்கு 1 முதல் 2 கிராம் மாவுப்பூச்சியினை தினமும் தொடர்ந்து 5 நாட்களுக்கு கொடுக்க வேண்டும் (15 நாட்கள்). பின்வரும் 10 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் 3 கிராம் மாவுப்பூச்சியினை தீனியாக விட வேண்டும் (25 நாட்கள் வரை). 25வது நாளில் புழுக்கள் கூட்டுப் புழுவாக மாறத் துவங்கும். இந்த நிலையிலும் தொடர்ந்து மாவுப்பூச்சியினை உணவாகக் கொடுக்க வேண்டும். இப்போது ஒரு நாள் விட்டு ஒரு நாளைக்கு 1 கிராம் மாவுப்பூச்சி போதுமானது.

கூட்டுப்புழு பருவம் அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் (32-35 நாட்கள் வரை). பின் 32 முதல் 35 நாளில் வளர்ந்த பொரிவண்டுகள் கூட்டுப்புழுவில் இருந்து வெளிவரும். இதுவரை 20 வண்டுகளுக்கு 35 கிராம் மாவுப்பூச்சி இரை தேவைப்படும். இந்த பொரிவண்டுகளை ஒரு டப்பாவில் 15 வண்டு வீதம் போட்டு தேனினை உணவாக வழங்க வேண்டும். இவ்வாறு தேன் கொடுத்து அடுத்த 10-15 நாட்கள் இவற்றை வளர்க்க வேண்டும். இச்சமயத்தில் ஆண் மற்றும் பெண் பூச்சிகள் இணைந்து பெண்பூச்சி முட்டையிடும் பருவத்தினை அடையும். இந்த 10 முதல் 15 நாட்களுக்கு தேனினை உணவாக விழுங்கும்போது ஒரு பங்கு தேனுடன் இரண்டு பங்குநீர் சேர்த்து பஞ்சில் நனைத்து அதனை பிழிந்து டப்பாவின் பகுதியில் நட்டுவிட வேண்டும். இந்த பஞ்சினை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அல்லது புளிப்பாகி பூச்சிகள் அதனை சாப்பிடாது.

தொடர்புக்கு: செல்வமுகிலன், கன்னிவாடி, திண்டுக்கல். 94861 65088. -கே.சத்தியபிரபா, 94865 85997