மானிய விலையில் நெல் விதை

2010-11-ம் ஆண்டுக்கு விவசாயிகளுக்குச் சான்று பெற்ற விதைநெல், கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படும். 10 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடியைக் குழுக்களாகச் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள, உழவர் வயல்வெளிப் பயிற்சிப் பள்ளிகள் நடத்தி ஒரு உழவருக்கு மானியம் ரூ.17 ஆயிரம் வழங்கப்படும். 30 விவசாயிகளுக்கு வயல்வெளிகளில் பூச்சிநோய் கண்காணிப்பு முறைகள் மேற்கொள்ளவும், பூச்சி மற்றும் நோய்த் தன்மை அறிந்து இயற்கை எதிரிகளை வயல்வெளிகளில் அழிக்காமல் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் சிக்கனமான செம்மைநெல் சாகுபடி முறைகளை விவசாயிகள் கையாண்டு, அதிக மகசூல் பெறுவதே நோக்கம் ஆகும்.

விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி அரசு வழங்கும் மானியங்களையும் பயிற்சிகளையும் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி தகவல் : திரு. ச.இளங்கோவன், வேளாண் இணை இயக்குநர், கடலூர்

செம்மை நெல் சாகுபடி விழிப்புணர்வுக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 42 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதில், இந்தாண்டு 20 ஆயிரம் ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு, அரசிராமணி குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகன் இந்த முறை சாகுபடியில் மாநில அளவில் அதிக மகசூல் எடுத்துள்ளார்.

செம்மை நெல் சாகுபடியில் குறைந்த விதையைக் கொண்டு, இளவயது நாற்றுகளை  உற்பத்தி செய்து, 25 செ.மீ இடைவெளியில் மார்க்கர் கருவி அல்லது கயிறு மூலம் ஒரு குத்துக்கு ஒரு பயிரை மட்டும் நடவு செய்ய வேண்டும். உருளும் களைக்கருவியைப் பயன்படுத்தி களையெடுத்து, முறையாக நீர் நிர்வாகம், மேலுரம் பிரித்து இடுதல் மற்றும் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து ஏக்கருக்கு 70 முதல் 75 மூட்டைகள் வரை மகசூல் எடுக்கலாம்.

மண்புழு எருவினை பிரித்தெடுக்கும் முறை

மண்புழு உற்பத்தி முறைகள் – தொட்டிமுறை, குழி முறை, படுக்கை முறை. நன்கு மக்கிய பயிர்க்கழிவுகள் மற்றும் சாணத்தை மண்புழுவிற்கு உரமாக தருவதால் ஒரு மாதத்திலேயே மண்புழு எருவினை எடுத்து பயன்படுத்தலாம். அதே சமயம் பாதியளவு மக்கிய, சரியாக மக்காதநிலையில் உள்ள பொருட்களை உணவாக்கி கொடுத்தால் 2 மாதங்கள் கழித்துத்தான் மண்புழு எருவினைப் பெறமுடியும்.

மண்புழு எருவினை சேகரிக்க முடிவு செய்தவுடன் தொட்டியில் நீர் தெளிப்பதை 2, 3, நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும். மண்புழுக்கள் ஈரம் மிகுந்த அடிப்பகுதிக்குச் சென்றுவிடும். இச்சமயத்தில் நாம் மேலே பரப்பியுள்ள சிறுசிறு செங்கற்களின் இடையிடையே காணப்படும் மண்புழுவின் குருணை வடிவ கழிவுகளை சேகரிக்க வேண்டும். இக்கழிவுகளின் மீது நீர் தெளித்து ஈரத்தன்மையை பராமரிக்க வேண்டும். இக்கழிவுகளை நேரடியாக விளைநிலங்களில் இட்டு பயன்படுத்தலாம். மண்புழு எருவினை பைகளில் அடைத்து ஈரம் உலராமல் பாதுகாத்து 6 முதல் 8 மாத காலம் வரை பயன்படுத்தலாம். ஒரு கிலோ எடைக்கு சுமார் 1000 மண்புழுக்கள் இருக்கும். இவை ஒரு நாளில் பயிர்க்கழிவுகளை உண்டு 5-6 கிலோ எருவினைத் தருகின்றன. நன்கு புழுக்களை பராமரித்தால் ஒரு மாதத்திற்கு 150 கிலோ வரை எருவினை பெறலாம். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் சுமார் 200 கிலோ வரை எரு கிடைக்கும். கிலோ 6 முதல் 8 ரூபாய் வரை விலை போகும்.

நெல்லுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைத்து அசத்திக் கொண்டிருப்பவர் சேலம் மாவட்டம், நாகியம்பட்டி அப்புத்தோட்டம் கே.கருப்பணன் என்ற விவசாயி. ஏற்கனவே விவசாயி தன்னிடம் இருந்த சொட்டுநீர்க் குழாய்களை வைத்து 70 சென்ட் நிலத்தில் ஏ.டி.டி.45 ரக நெல்லுக்குதானே சொட்டுநீர் அமைத்துள்ளார். நிலத்தில் பல பயிர் சாகுபடி செய்து அவையெல்லாம் பூத்து வந்ததும் மடக்கி உழவு செய்துவிட்டு பின்னர் தொழு உரம் போட்டு பரம்படித்து நிலத்தை சமன்செய்து, நாற்றங்கால் மூலம் நாற்று தயாரித்து ஒற்றை நாற்று முறையில் ஒரு அடி இடைவெளியில் கயிறு பிடித்து நாற்று நட்டுள்ளார்.

பின்னர் 4 அடி இடைவெளிக்கு ஒரு குழாய் (லேட்ரல்) வருவதுபோல் 18 மி.மீ. குழாயை அமைத்து அதில் இரண்டரை அடி இடைவெளியில் ஒரு துளையிட்டு சிறிய குழாயை (மைக்ரோ டியூப்) சொருகிவைக்க வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்தில் தலா 2 லிட்டர் சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி உயிரி பூஞ்சாணத்தை சொட்டுநீரில் கலந்து நிலத்துக்கு கொடுக்க வேண்டும். இதுதவிர வேறு எந்த இடுபொருளும் கொடுக்கவில்லை. கோனோவீடரை கிழக்கு மேற்காக மட்டும் உருட்டி களை எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால் சொட்டுநீர் குழாய்க்கு எந்த பாதிப்பும் வராது. விதை முளைத்ததிலிருந்து சுமார் 50 நாட்களில் பூ கரு உருவாகும். அதிலிருந்து 30 நாட்களில் பூ பூக்கும். அதிலிருந்து கதிர் முதிர்ச்சி அடைய 30 நாட்கள் ஆகும்.

வேர் பிடிக்கும் தருணம், பூக்கரு உண்டாகும் சமயம், பூக்கும் தருணம் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மகசூலில் பெரிய பாதிப்பு இருக்கும். மற்ற சமயங்களில் காய்ச்சலும் பாய்ச்சலும் இருந்தாலே போதுமானது. அரை மணி நேரம் பாய்ந்தாலே நிலம் ஈரமாகிவிடும். வழக்கமான முறையில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு தேவைப்படும் தண்ணீரை வைத்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 3 ஏக்கர் சாகுபடி செய்யலாம். வழக்கமான முறையில் 70 சென்டில் 20 மூடை (70 கிலோ) மகசூல் எடுப்பார். சொட்டுநீர் பாசனம் மூலம் கூடுதலாக 9 மூடை நெல் கிடைத்துள்ளது.

அறுவடைக்கு அடுத்த நாளே குழாய்களை சுருட்டி வைத்துவிட்டு உழவு ஓட்டிவிடலாம் என்கிறார் விவசாயி. தொடர்புக்கு: கே.கருப்பண்ணன், 97869 81299 (தகவல்: பசுமை விகடன், 25.6.10)

செம்மை நெல் சாகுபடி: விழிப்புணர்வு ஏற்படுமா?

குறைந்த செலவும், குறைவான நீர்த் தேவையும்  கொண்ட செம்மை நெல் சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் பெற வேண்டுமென வேளாண் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும்.

பருவ நிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக மழை அளவு குறைந்து, லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகின. விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் நிலை உருவானது.

பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை என்ற நிலையில், வரும் ஆண்டுகளில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்பதை அரசிடம் வேளாண் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வேளாண் துறையினர் நெல் பயிர் சாகுபடியில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் அறிமுகம் செய்யத் தலைப்பட்டனர்.

அதில், குறைந்த செலவும், குறைவான நீர்த் தேவையும் கொண்ட புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செம்மை நெல் சாகுபடி முறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதை, விவசாயிகளின் வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

கடந்த 1960-களில் மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஹென்றி டி லலானோ எஸ்.ஆர்.ஐ.  என்ற செம்மை நெல் சாகுபடி முறையைக் கண்டுபிடித்தார்.

நடைமுறை நெல் சாகுபடி முறையிலிருந்து மாறுபட்ட உழவியல் முறைகள் இதில் கடைப்பிடிக்கப்படுகின்றன. நாற்று தயாரித்தல், நடுதல், களைக் கட்டுப்பாடு, நீர்ப் பாசனம் போன்ற பொதுவான வழிமுறைகள் இதில் இருந்தாலும், ஒவ்வொரு முறையிலும் முற்றிலும் மாறுபட்ட நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்தச் சாகுபடி குறித்த கோட்பாடுகள் கடந்த 2001 முதல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழக விவசாயிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது.

மாநில அளவில் கடந்த ஆண்டு 7.5 லட்சம் ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி செய்யப்பட்டது, நிகழாண்டில் 8.5 லட்சம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

இதில், குறைந்த நீராதாரம் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை, ஏறத்தாழ 90 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி பரப்பு உள்ள நிலையில், அதில் ஏறத்தாழ 25 ஆயிரம் ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி முறையை விவசாயிகள் மேற்கொள்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பரப்பளவை மேலும் அதிகரிப்பது என்பது விவசாயிகள் இதுகுறித்த விழிப்புணர்வைப் பெறுவதைப் பொருத்தே அமையும் என்கின்றனர் வேளாண் ஆர்வலர்கள்.

செம்மை நெல் சாகு​ப​டிக்கு மாற​லாமே!

செம்மை நெல் சாகு​படி முறை​யில் நாற்று நடப்​ப​டும் வயல்.​ செம்மை நெல் சாகு​ப​டி​யால் ஒரு நாற்று பல்​வேறு கிளை​க​ளாக செழித்து வளர்ந்து இருக்​கும் வயல்.

செம்மை நெல் சாகு படி முறை யில் நாற்று நடப் ப டும் வயல். செம்மை நெல் சாகு ப டி யால் ஒரு நாற்று பல் வேறு கிளை க ளாக செழித்து வளர்ந்து இருக் கும் வயல்.

அகில இந்​திய அள​வில் வேளாண் உற்​பத்தி குறைந்து வரு​வ​தாக புள்ளி விவ​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​ தமி​ழ​கத்​தின் பிர​தான சாகு​ப​டிப் பயிர் நெல்.​ நெல் உற்​பத்​தி​யில்,​​ இந்​தி​யா​வில் 7-வது இடத்​தில் தமி​ழ​கம் உள்​ளது.

இந்த நிலை​யில் கிரா​மப்​புற வேலை உறு​தித்​திட்​டம் செயல்​ப​டத் தொடங்​கி​ய​தும்,​​ விவ​சாய வேலை​க​ளுக்கு ஆட்​கள் கிடைப்​பது இல்லை என்ற நிலை உரு​வாகி விட்​டது.​ எனவே விவ​சா​யம் காப்​பாற்​றப்​பட வேண்​டு​மா​னால்,​​ இயந்​திர மய​மாக்​கல் மற்​றும் நவீன தொழில் நுட்​பங்​கள் மூலம் உற்​பத்​தி​யைப் பெருக்​கு​த​லைத் தவிர வேறு வழி​யில்லை.

இ​யந்​தி​ரங்​க​ளைப் பயன்​ப​டுத்தி,​​ நெல் உற்​பத்​தி​யைப் பெருக்​கு​வ​தில் சாதனை ஏற்​ப​டுத்​தி​வ​ரும் திட்​டம்,​​ செம்​மை​நெல் சாகு​ப​டித் திட்​டம் ஆகும்.​ 2000க்கு முன்​னால் தென்​னாப்​பி​ரிக்கா அருகே மட​காஸ்​கர் தீவில் செயல்​ப​டுத்​தப் பட்​டது இத்​திட்​டம்.​ பின்​னர் இந்​தி​யா​வி​லும்,​​ 2003-க்குப் பின்​னர் தமி​ழ​கத்​தி​லும் இத்​திட்​டம் செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.

பா​ரம்​ப​ரிய விவ​சா​யத்​தில் ஒரு கிலோ நெல் உற்​பத்தி செய்ய 3 ஆயி​ரம் லிட்​டர் தண்​ணீர் தேவைப்​ப​டு​கி​றது.​ வேலை ஆட்​க​ளும் அதி​கம் தேவை.

 • உற்​பத்​தி​யைப் பெருக்க,
 • இடு​பொ​ருள் செல​வு​க​ளைக் குறைக்க,
 • நீர்​தே​வை​யைக் குறைக்க,
 • களை​களை உர​மாக மாற்ற,
 • நுண்​ணு​யி​ரி​க​ளின் செயல்​பாட்டை அதி​க​ரிக்க,
 • தழைச்​சத்து தேவை​யைக் குறைக்க,
 • அனைத்​தும் மேலாக அதிக லாபம் அடைய செம்மை நெல் சாகு​ப​டித் திட்​டம் உத​வு​கி​றது.

இத்​ திட்​டத்​தில் விதை நெல் அளவு,​​ ஏக்​க​ருக்கு 30 கிலோ​வில் இருந்து 3 கிலோ​வா​கக் குறை​கி​றது.​ ஏக்​க​ருக்கு நாற்​றங்​கால் ஒரு சென்ட் என்ற அள​வுக்​கும் நாற்​றுக்​க​ளின் வயது 30 நாளில் இருந்து 14 நாட்​க​ளா​க​வும் குறை​கி​றது.

வ​ழக்​க​மான விதை​நேர்த்தி முறை​கள் பின்​பற்​றப் படு​கின்​றன.​ நடவு வய​லில் ஒரு குத்​துக்கு ஒரு நாற்று மட்​டுமே நடப்​ப​டு​கி​றது.​ 22.5 க்கு 22.5 செ.மீ.​ சது​ரத்​துக்கு ஒரு நாற்று நடப்​பட வேண்​டும்.​ இதற்​காக அள​வுச் சட்​டம் ஒன்றை வேளாண் துறையே வழங்​கு​கி​றது.

இ​யந்​தி​ரம் மூல​மாகோ வேலை​ஆள்​க​ளைக் கொண்டோ நடவு செய்​ய​லாம்.​ கோனோ​வீ​டர் இயந்​தி​ரம் மூலம் களை​களை அகற்றி,​​ அங்​கேயே மடித்​துப்​போட்டு உர​மாக்​கும் உத்தி இதில் கையா​ளப்​ப​டு​கி​றது.

நீர்​ம​றைய நீர் கட்டி,​​ பாசன நீர் அள​வைக் குறைக்க ஆலோ​சனை தெரி​விக்​கப்​ப​டு​கி​றது.​ குறிப்​பிட்ட பயி​ருக்கு,​​ பச்சை வண்ண அட்​டை​மூ​லம் தழைச் சத்து நிர்​ண​யிக்​கப்​ப​டு​கி​றது.​ நடப்​பட்ட ஒரு தூரில் இருந்து 60 முதல் 80 செடி​கள் வரை கிளைத்து அவற்​றில் கதிர்​கள் தோன்​று​வ​து​தான் இம்​முறை நெல் சாகு​ப​டி​யின் சிறப்பு அம்​சம்.

க​ட​லூர் மாவட்​டத்​தில் நெல் உற்​பத்தி சரா​சரி அளவு,​​ ஏக்​க​ருக்கு 2800 கிலோ.​ தமி​ழ​கத்​தின் சரா​சரி நெல் உற்​பத்​தி​யும் அது​தான்.​ ஆனால் செம்​மை​நெல் சாகு​படி மூலம் ஏக்​க​ருக்கு 5 ஆயி​ரம் கிலோ நெல் உற்​பத்தி செய்ய முடி​யும் என்​கி​றார்​கள் வேளாண் அலு​வ​லர்​கள்.​ எனி​னும் இதன் இலக்கு ஏக்​க​ருக்கு 7 ஆயி​ரம் கிலோ என​வும் தெரி​விக்​கி​றார்​கள்.

க​டந்த 10 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக,​​ செம்மை நெல் சாகு​படி திட்​டம் விவ​சா​யி​க​ளி​டம் பெரு​ம​ள​வுக்​குப் பிர​சா​ரம் செய்​யப்​பட்டு வரு​கி​றது.​ வட்ட வாரி​யாக செயல்​முறை விளக்க வயல்​கள் அமைக்​கப்​ப​டு​கின்​றன.

இத்​திட்​டத்​தைச் செயல்​ப​டுத்​தும் விவ​சா​யிக்கு,​​ ஏக்​க​ருக்கு ரூ.​ 2,700 மதிப்​புள்ள வேளாண் கரு​வி​க​ளும்,​​ ரூ.​ 700 மதிப்​புள்ள இடு​பொ​ருள்​க​ளும் இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் இத்​திட்​டம் 35 முதல் 40 சத​வீத விவ​சா​யி​க​ளி​டம் மட்​டுமே சென்​ற​டைந்து இருப்​ப​தாக வேளாண் துறை அதி​கா​ரி​களே தெரி​விக்​கி​றார்​கள்.​ எனவே இத்​திட்​டம் மேலும் பல விவ​சா​யி​க​ளைச் சென்​ற​டைய வேண்​டும்.

யோச​னை​கள்: திட்​டம் குறித்து பாசி​முத்​தான் ஓடை விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் தெரி​விக்​கும் ஆலோ​ச​னை​கள்:

 • காவிரி டெல்டா பாச​னக் கடை​ம​டைப் பகு​தி​க​ளில் ஒற்றை நாற்​று​ந​டவு,​​ சற்று பின்​ன​டைவை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ 3 நாற்​று​கள் வரை நடு​கி​றோம்.
 • கார​ணம் கடை​ம​டைப் பகு​தி​க​ளில் வயல்​க​ளில் தண்​ணீர் தேங்​கு​தைக் கட்​டு​ப​டுத்த முடி​யாது.
 • இத​னால் இயந்​தி​ரம் மூலம் நடவு சிர​ம​மா​கி​றது.​ மேலும் ஒற்றை நாற்று எளி​தில் வீணாகி விடு​கி​றது.
 • நாற்று நடு​வோ​ரும் பாரம்​ப​ரிய முறை​யில்,​​ ஒப்​பந்த அடிப்​ப​டை​யில் நடவு செய்​வ​தால்,​​ அவ​சர அவ​ச​ர​மாக நடும்​போது நாற்​றுக்​க​ளின் வேர்ப்​ப​கு​தியை பெரும்​பா​லும் மடித்து நட்​டு​வி​டு​கி​றார்​கள்.​ இத​னால் முளைப்​புத் திறன் குறைந்து விடு​கி​றது.
 • எனவே இத்​திட்​டத்​தில் விவ​சா​யி​க​ளுக்கு பயிற்சி அளிப்​பது போல் நாற்று நடும் பெண்​க​ளுக்​கும் சிறப்​புப் பயிற்சி அளிக்க வேண்​டும்.
 • நி​தா​ன​மாக நாற்று நட்​டால்​தான் ஒற்றை நாற்று முறை வெற்​றி​பெ​றும்.​ எனவே நாற்று நடும் பணிக்​கான செல​வில் ஒரு பகு​தியை விவ​சா​யி​க​ளுக்கு மானி​ய​மாக அரசு வழங்​க​லாம்.
 • காவிரி டெல்டா கடை​ம​டைப் பகு​தி​க​ளில் இத்​திட்​டம் வெற்றி பெற வடி​கால் வச​தியை மேம்​ப​டுத்த வேண்​டும் என்​றார் ரவீந்​தி​ரன்.

தினமணி