கத்தரியில் தண்டுப்புழு

கத்தரியில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தண்டுப் புழுவின் தாக்குதல் இருக்கும். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் இதன் தாக்குதல் அதிகமாக உள்ளது.

கத்தரி செடியில் காய், தண்டுப் பகுதியில் புழுத் தாக்குதல் அதிகம் ஏற்படும். பொதுவாக கத்தரி செடியில் முசினோடஸ்அரிபோனாலிஸ் என்ற புழுத் தாக்குதல் பரவலாக காணப்படும். இதனால்,செடிகள் காய்ந்துவிடும் நிலைக்கு தள்ளப்படும்.

இவை தண்டின் அடியிலும், தண்டிலிருந்து கிளை பிரியும் இடத்திலும் சிறு துளையிட்டு இனப்பெருக்கத்தை தொடங்கும். இப்புழுக்களின் தலை சிவப்பு நிறத்திலும், உடல் வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
  • பைரித்திராயட் மருந்து தெளிப்பதை விவசாயிகள் நிறுத்தி வைக்க வேண்டும். இம்மருந்துகள் புழுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடும்.
  • ஏக்கருக்கு 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்க வேண்டும்.
  • கார்பரில் 2  கிராம் அல்லது புரோபனோபாஸ் 1.5 மில்லிகிராம் ஆகியவற்றை செடிகள் மீது தெளிக்க வேண்டும்.
  • இம்மருந்து தெளித்தும், தண்டுப் புழுக்களின் தாக்குதல் குறையவில்லையென்றால், ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பரில் 2 மில்லிகிராம் கலந்து மாலை நேரங்களில் கத்தரி செடியின் வேர்களில் ஊற்றலாம்.

தினமணி தகவல் : திரு ப. ஸ்ரீதர், வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர், பாப்பாரப்பட்டி