மார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்

நண்பர்களே,

2012ல் விளையாட்டாக தொடங்கியது இந்த தளம். இன்று நிறைய தரவுகளை நாங்கள் உள்ளீடு செய்துள்ளோம் என்று நினைக்கையில் மகிழ்வாக இருக்கும் அதே வேளையில், இன்னும் சேர்க்கவேண்டிய விபரங்கள் எவ்வளவோ உள்ளன.

சில தொழில்நுட்ப தகறாறுகளால் பல மாதங்களாக இயங்காதிருந்த இந்த தளம் பொங்கல் சமயத்தில் திரும்ப இயங்கத்தொடங்கி உள்ளதும் மகிழ்ச்சி தருகிறது.

நீங்களோ உங்கள் நண்பர்களோ பின்வரும் துறைகளில் இயங்கிக் கொண்டிருந்தால் அவர்கள் விபரத்தைத் தெரியப்படுத்தவும். பிறருக்கும் சென்று சேரும்.

  • வேளாண் ஆலோசகர்கள்
  • வேளாண் பொறியாளர்கள்
  • வேளாண் கருவிகள் ரிப்பேர் மற்றும் சர்வீஸ்
  • வேளாண் பொருட்கள் முகவர்கள் மற்றும் வியாபாரிகள்

அனுப்ப வேண்டிய முகவரி – velanarangam@grassfield.org

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

screenshot

மார்க்கெட் – வேளாண் கருவிகள், விற்பனையாளர்களின் தொகுப்பு

இந்த வலைப்பூவில் மட்டுமல்ல. பல்வேறு வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், பத்திரிகைகள் புதிதாக வெளிவரும் வேளாண் கருவிகளைப் பற்றியும் அவற்றை விற்பவர்கள் பற்றியோ தகவல்களை வெளியிடுகின்றன. அவற்றை ஒரேஇடத்தில் தொகுக்க யாதொரு தளங்களும் தமிழில் இல்லை. பொதுவாக yellowpages தளங்கள் இந்த வேலையைச் செய்தாலும் அவற்றிடம் விற்பனையாளர்களின் மின்னஞ்சலையோ அலைபேசி எண்ணையோ பெற உங்களது விபரங்களைத் தந்தாக வேண்டும். அப்படித் தந்தீர்கள் என்றால் தொலைந்தீர்கள் என்று அர்த்தம். குப்பைக் கடுதாசிகளும் குப்பைக் குறுஞ்செய்திகளும் கண்ட கண்ட நேரத்தில் வீணான அழைப்புகளும் வரத் தொடங்கும். இதைத் தடுக்க இயலாது.

மேலும் பல சமயத்தில் குறிப்பிட்ட சில கருவிகளுக்காக (தென்னை மரம் ஏறும் கருவி, தென்னைக் கழிவுகளைத் தூளாக்க shredder) தேடும் போது தேவையான தகவல்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்காகக் கிடைக்கும் தகவல்களைப் பதிந்து வைக்க ஒரு தளம் தேவைப்பட்டது. அதுதான் வேளாண்அரங்கம் – மார்க்கெட்http://market.grassfield.org/

இத்தளத்தில் உலாவ உங்கள் பயனர் கணக்கோ மின்னஞ்சலோ தேவையில்லை. உங்களுக்குத் தேவையான விபரத்தை எடுத்துக்கொள்ள இதனைப் பயன்படுத்தலாம். நேரம் கிடைக்கையில் தகவல்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறேன். கூடிய விரைவில் நீங்களே தகவல்களைச் சேர்க்க வசதிகள் ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

முழுக்க முழுக்க இலாபநோக்கற்ற முறையில் நிறுவப்படும் இந்தத் தளத்தில் தவறான தகவல்கள் இருப்பின் சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறோம்.

இணைய சேவி வசதி தரும் நண்பர் தமிழ்பயணி சிவக்குமார் அவர்களுக்கு நன்றி.

வேளாண் பொருள் வகைகள்

அனைத்தும்
அறுவடை
ஆலோசகர்
இணையதளம்
உயிர் உரம்
உரம்
கறவை எந்திரம்
கலப்பை
கால்நடை
கொள்முதல்
சமூக வலைப் பதிவு
சாக்கு – பை
சூரிய விளக்கு
டிராக்டர் – பவர்டில்லர்
தானியம் அறவை
தார்பாய் – விரிப்பு – கூடாரம்
தீவனம்
தூளாக்கும் எந்திரம்
தேனி வளர்ப்பு
நடவு எந்திரம்
பயிற்சி
பாசனம்
பூச்சிக் கொல்லி
பூமி அகழ்வு
மற்றவை
மோட்டார் பம்ப்
ரம்பம்
வலை – வேலி
வளர்ச்சி ஊக்கி
விசைத்தெளிப்பான்
விதை – நாற்றங்கால்
வீடர் – பவர் வீடர்
வேளாண் கருவிகள்

மாவட்ட வாரியாக


அரியலூர்


ஈரோடு


கடலூர்


கரூர்


காஞ்சிபுரம்


கிருஷ்ணகிரி


கொச்சி


கோயமுத்தூர்


சிவகங்கை


சென்னை


சேலம்


ஜல்கான்


தஞ்சாவூர்


திண்டுக்கல்


திருச்சி


திருப்பூர்


திருவண்ணாமலை


திருவள்ளூர்


தேனி


நாகப்பட்டிணம்


நாமக்கல்


நீலகிரி


புதுக்கோட்டை


புதுடெல்லி


பெரம்பலூர்


மதுரை