மதுரைப்பக்கம் ஈச்சமர சாகுபடி

வறட்சியை தாங்கி வளரக் கூடிய ஈச்சமரங்களின் தாவரவியல் பெயர் ‘போனிக்ஸ் சால்வஸ்ட்ரீஸ்’. தமிழகத்தின் பல இடங்களில் ஈச்சமர சாகுபடி நடக்கிறது. தென்னையை போல் அகன்ற வட்டமான கிளைகள் மற்றும் கரிய முட்களுடன் காணப்படும் ஈச்ச மரம், கோடையில் பூக்கும். பிஞ்சு காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். பழங்கள் கருமை நிறத்தில் காணப்படும். ஈச்ச மரங்களிலிருந்தும் ‘கள்’, ‘பதனீர்’ பெறலாம்.

ஈச்சம் பதனீரிலிருந்து வெல்லம், கற்கண்டும், ஓலைகளை கொண்டு, பாய்கள், பெட்டிகள், துடைப்பம் போன்றவையும் தயாரிக்கலாம். அடிமரம் விறகாக பயன்படுகிறது. மதுரை மாவட்டத்தில், கள்ளிக்குடி, மேலப்பட்டி, ஒடப்பட்டி, சென்னம்பட்டி பகுதிகளில் உள்ள தட்ப வெப்பநிலை, மணல் கலந்த நிலம் ஆகிய காரணங்களால் ஈச்சமரங்கள் அங்கு அதிகமாக வளர்கின்றன. முறையாக பராமரித்தால், தமிழகத்தில் ஈச்சமர சாகுபடி அதிகரிக்கும்.