நறுமணப் பயிர்களை பயிரிட வேண்டும்: திருவண்ணாமலை விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேளாண் வணிகத் துறை சார்பில் நறுமணப் பயிர்கள் குறித்த கருத்தரங்கில், ஆட்சியர் பேசியது: திருவண்ணாமலை மாவட்டத்தில் நறுமணப் பயிர்களான பாமரோசா, சிட்ரோனெல்லா, எலுமிச்சை புல் உள்ளிட்டவை 1800 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு வருகின்றன. தண்டராம்பட்டு பகுதியில் நறுமணப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

100 கிலோவில் ஒரு கிலோ எண்ணை பெறுவதற்கு பதில் ஒன்றரை கிலோ எண்ணெய் பெறுவதற்கான வழிமுறைகளை விவசாயிகள் ஆராய வேண்டும். நறுமண எண்ணெய்யை சந்தைப்படுத்த வேளாண் வணிகத் துறை தயாராக உள்ளது. இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  நறுமணப் பயிர்களை எப்படி அறுவடை செய்வது, எவ்வாறு நோய்களில் இருந்து காப்பது, உரங்களை இடுதல் போன்றவற்றை அறிய வேண்டும் என்றார் ராஜேந்திரன்.