புதிய வீரிய ஒட்டு சூரியகாந்தி கோ.2 (த.வே.ப.க)

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சமீபத்தில் சூரியகாந்தி வீரிய ஒட்டு கோ.2-ஐ விவசாயிகள் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளது.

வயது 85-90 நாட்கள்.

மகசூல்: ஆடிப்பட்டத்தில் 1950கிலோ/எக்டர். (இது சன்பிரட் 275, டி.சி.எஸ்.எச்.1 வீரிய ஒட்டுரகங்களைவிட 13.4, 17.1 சதம் அதிக மகசூலாகும்).

கார்த்திகைப்பட்டத்தில் 2230 கிலோ/எக்டர் மகசூல் கொடுக்கக்கூடியது.

அதிக பட்ச மகசூலாக எக்டருக்கு 3114 கிலோ கொடுக்கக்கூடியது.

பருவம்: ஆடி, கார்த்திகை-மார்கழிப்பட்டம்.

இதன் சிறப்பியல்புகள்:

  • அதிக எண்ணெய்ச்சத்து-39.8 சதம், அதிக கொள்ளளவு எடை கொண்ட விதைகள் (48 கிராம்/100 மில்லி).

பயிரிட உகந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் சூரியகாந்தி பயிரிட ஏற்ற அனைத்துப் பகுதிகள்.

மேலும் விபரங்களுக்கு, விதை, நாற்றுகள் ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

இயக்குனர், ஆராய்ச்சி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.

தினமலர் தகவல் – த.வே.ப.க