ஐ.சி.ஆர்.ஐ.5 புது ஏலக்காய் ரகம்

ஸ்பைசஸ் போர்டின் இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப் பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 200 ஏல விவசாயிகளிடம் 50 தட்டைகள் வீதம் வழங்கப்பட்டு பரிசோதிக்கப் பட்டது. வாகமன் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் வர்கீஸ் என்ற ஏல விவசாயி மேற்கொண்ட சாகுபடி நுட்பங்கள் அமோக விளைச்சலுக்கு அடிகோலியுள்ளது. ஒரு தூருக்கு 90 தட்டைகள் வீதம் வளர்ந்து நிற்கிறது இந்த புதிய ரகம். சரங்களில் 35 முதல் 50 கொத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு கொத்திலும் 3 முதல் 5 பூக்கள் உள்ளன. உருவாகும் காய்கள் 9 எம்எம் அளவில் இளம்பச்சை நிறத்தில் உள்ளன. நல்ல திரட்சியுடன் உள்ள ஏலக்காய்கள் விற்பனையின்போது நல்ல விலைக்கு போகின்றன.

நல்லாணி ரகத்துடன் ஒப்பிடும்போது இதில் துளைப்பான்கள் தாக்குதல் வெகு குறைவாகவே இருப்பதால் பூச்சி மருந்து பிரயோகம் குறைவாக உள்ளது. ஜோசப் தனது தோட்டத்தில் முழுவதுமாக ஐ.சி.ஆர்.ஐ.5 ரகத்தை பயிரிடத் தொடங்கிவிட்டார். இதற்கென ஒரு நாற்றுப்பண்ணையையும் தொடங்கி, சக விவசாயிகளுக்கு ஏலத்தட்டைகளை வழங்கி வருகிறார்.

தினமலர் தகவல் – விஜேஸ்னா வி, கள அதிகாரி, ஸ்பைசஸ் போர்டு, ஏலப்பாறை.