வாழையில் அடர் நடவு முறை – செய்தி 2

வாழையில் அடர் நடவுமுறை பற்றி கரூர் விவசாய பொருட்காட்சி கருத்தரங்கில் பேசியதாக செய்திகள் வந்தது. இது போடிப் பக்கம் இருந்து. செய்தியில் விபரங்கள் இருப்பதால் முழுதாகப் பிரசுரிக்கிறோம்.

வாழையில் பொதுவாக ஒரு குழிக்கு ஒரு வாழைக் கன்றை நடவு செய்வதற்குப் பதிலாக ஒன்றுக்கும் மேற்பட்ட கன்றுகளை ஒரே இடத்தில் நடவு செய்வதற்கு அடர் நடவு முறை என்று பெயர்.

அடர் நடவு முறையில், ஒரு வரிசையிலுள்ள இரண்டு கன்றுகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை அதிகரித்தோ அல்லது இரு வரிசைகளுக்கு இடையிலுள்ள இடைவெளியைக் கூட்டிக் குறைத்தோ நடவு செய்யப்படுகிறது. இம் முறையில் கன்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப உரம் பரிந்துரை செய்யப்படுகிறது.

சாகுபடிச் செலவைக் குறைப்பதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்து, அதிக நிகர லாபம் எடுப்பதற்கும் இம் முறை பரிந்துரை செய்யப்படுகிறது. தண்ணீர் மற்றும் இடப்படும் உரங்கள் வீணாகாமல் பயிருக்குக் கிடைக்கிறது. ரொபஸ்டா, குட்டை கேலண்டிஸ், பூவன், ரஸ்தாளி, நேந்திரன் மற்றும் கற்பூர வள்ளி ரகங்கள் இம் முறையில் பரிந்துரை செய்யப்படுகின்றன.

இம் முறை குறித்து கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாதாரண முறையில் ஒரு குழிக்கு ஒரு கன்று நடலாம். அடர் நடவு முறையில் 3 கன்றுகள் நடலாம். சாதாரண முறையில் ஒரு ஹெக்டேருக்கு 2,500 கன்றுகள் நடலாம். அடர் நடவு முறையில் 5 ஆயிரம் கன்றுகள் நட முடியும். சாதாரண முறையில் ஒரு ஹெக்டேருக்கு 28.21 டன் மகசூல் மட்டுமே எடுக்க முடியும் ஆனால், அடர் நடவு முறையில் 38.31 டன் மகசூல் எடுக்கலாம்.   இதன் மூலம் மகசூல் அதிகரிப்பதால், வருவாய் அதிகரிக்கிறது. வாழை அடர் நடவு குறித்து மேலும் தகவல் பெற விருப்பமுள்ளவர்கள் போடி தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்தி: திரு. கெர்சோன் தங்கராஜ், தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர், போடி

செம்மை நெல் சாகுபடி, வாழையில் புதிய நடைமுறை – கரூர் விவசாயக் கண்காட்சி செய்திகள்

செம்மை நெல் சாகுபடி மேற்கொண்டால் இரண்டு மடங்கு பலன் பெறலாம் என்றார் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. திரவியம்.

கரூர் மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலமாக கரூரில் வேளாண் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் செவ்வாய்கிழமை தொடங்கியது.

புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் புழுதேரி வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை) தே. தனசேகர் வாழைசாகுபடி குறித்து பேசியது:

வாழை சாகுபடி செய்யப்படும் பரப்பளவிலும், உற்பத்தியிலும் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எனினும், ஏற்றுமதி வாய்ப்புகள் இங்கு இல்லை. வாழைப்பழம் 20 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவைகள் பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. 350 மெட்ரிக் டன் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

எனினும், வாழைப்பழத்துக்கு வெளிநாடுகளில் அதிக அளவில் தேவை உள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் அதிக தொலைவும், உற்பத்திக்கான செலவும் அதிகரிக்கிறது.

இந்தியாவில் வாழைப்பழம் உற்பத்தி செய்ய ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை செலவாகிறது. வெளிநாடுகளில் கிலோவுக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகிறது.

இந்தியாவில் இச் செலவினைக் குறைக்க தற்போது அடர்நடவு முறை என்ற புதிய நடவு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால், 35 சத கன்றுகள் கூடுதலாகப் பயிரிடப்படுகிறது. இந்த முறையால் 20 சத உற்பத்தி அதிகரிப்பதோடு, 20 சத செலவினங்களும் குறையும். இந்த முறையை குளித்தலை, லாலாப்பேட்டை வட்டாரங்களில் செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

முன்னதாக, செம்மை நெல் சாகுபடி குறித்து வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. திரவியம் பேசியது:

செம்மைநெல் சாகுபடி முறையானது 1983 -ல் கிழக்கு மடஸ்காரில் லனானி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு இம்முறை அறிமுகமானது. இம்முறையில் ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ விதை போதுமானது. பழைய முறையில் 20 முதல் 30 கிலோ வரை தேவைப்பட்டது. மேலும், இயற்கை, இயற்கை உரங்களை பயன்படுத்தினால் அதிக அளவில் சாகுபடி பெறலாம். இதற்காக 6 வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.

நல்ல விதைகளைத் தேர்ந்தெடுத்து நாற்றங்காலில் நடவு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக நிலத்தை நன்றாக உழவு செய்து சுமார் 5 டன் எரு போன்ற உரங்களை தளைச்சத்தாக இட வேண்டும். ஒரு மாதமான நாற்றுகளை பறித்து இடைவெளி விட்டு நட வேண்டும்.  காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் விட வேண்டும்.  கோனோவீடரை பயன்படுத்தி களைகளை எடுப்பத்தால் பயிர்களுக்கிடைய இடைவெளி ஏற்பட்டு காற்றோட்டத்தையும், வேர் விடுவதற்கான சூழலையும் ஏற்படுத்தும்.

பூச்சித்தாக்குதல் குறைவதோடு, வைக்கோலும் அதிகமாகக் கிடைக்கும். இந்த முறையை விளக்க கரூர் மாவட்டத்தில் நெய்தலூர், நச்சலூர், முதலைப்பட்டி, ஒந்தாம்பட்டி ஆகிய கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இயற்கை உரங்களை பயன்படுத்தி செம்மை நெல் சாகுபடி செய்யும் பொழுது இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் மரவள்ளி சாகுபடி குறித்து வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சு. ஈஸ்வரன், கறவைமாடு வளர்ப்பு மற்றும் தீவனப்புல் வளர்ப்பினை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்சி மைய தலைவர் க. செந்தில்வேல், நவீன வேளாண்மையில் பண்ணைக் கருவிகள் குறித்து உழவியல் பேராசிரியர் ச. பன்னீர்செல்வம், உள்நாட்டு மீன் வளர்ப்பு குறித்து மீன் துறை ஆய்வாளர் வ. அப்துல்காதர் ஜெய்லானி, பட்டு வளர்ப்பு குறித்து பட்டுவளர்ச் சித்துறை உதவி இயக்குநர் சு. கோலாசுவாமி, உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து
வேளாண் துணை இயக்குநர் சு. ஷோபா, வனப் பாதுகாப்பு குறித்து வனச்சரகர் அ. நாகராஜன் ஆகியோர் பேசினர்.

தினமணி தகவல் –

திரு. ஜெ. திரவியம், வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர், கரூர்
திரு. தே. தனசேகர், தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை), புழுதேரி வேளாண் அறிவியல் மையம்

வாழையில் தண்டு கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வாழையில் தண்டு கூன்வண்டின் தாக்குதல் 7-வது மாதத்துக்கு மேல் காணப்படும். இதனால் பூ வெளிவருவது மற்றும் காய்கள் முதிர்ச்சியடைவது தடைபட்டு, மகசூல் பாதிப்பு ஏற்படும். கூன்வண்டு புழுக்கள் ஏற்படுத்திய துளைகள் மொந்தன் ரகத்தில் வரிசையாகவும், நேந்திரன் ரகத்தில் பரவியும் காணப்படும். பொதுவாக 5 மாதங்களுக்கு குறைவான பருவத்தில் உள்ள வாழை மரத்தை இப்புழுக்கள் தாக்குவதில்லை.

கூன்வண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரத்தை நீள்வாக்கில் வெட்டிப் பார்த்தால் புழுக்கள், கூட்டுப்புழு, வண்டு, பசை போன்ற திரவம், பூச்சியின் எச்சம் ஆகியவை காணப்படும். தண்டின் உள்பாகம் அழுகி துர்நாற்றம் வீசும். நோய் தாக்கப்பட்ட மரம் காற்றில் எளிதில் ஒடிந்துவிடும்.

ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறை:

காய்ந்த இலைகளையும், இலைப் பட்டைகளையும் மரத்தில் இருந்து நீக்கி அழித்து தண்டுப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தாய் மரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பக்க கன்றுகளை 30 நாளுக்கு ஒருமுறை நீக்க வேண்டும்.

கூன்வண்டு தாக்குதல் உள்ள இடங்களில் தாய் மரத்தை முழுமையாக வெட்டிவிட வேண்டும். இதனால் வண்டுகள் மறுதாம்பு வாழையை தாக்கும் வாய்ப்பு ஏற்படாது. பெண் வண்டுகள் மரத்தில் முட்டை இடாமல் தடுக்க, ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி குளோரிபைரிபாஸ் மருந்து மற்றும் ஒரு மில்லி ஒட்டு திரவம் கலந்து, வாழைத் தண்டில் பூச வேண்டும்.

வாழைக்கு ஊசி மூலம் மருந்து:

தண்டு கூன்வண்டின் சேதாரம் அதிக அளவில் காணப்படும்போது, மானோ குரோட்டபாஸ் மருந்தினை ஊசிமூலம் வாழைத் தண்டில் செலுத்தி கட்டுப்படுத்தலாம். இம்முறையில், 150 மில்லி மானோகுரோட்டபாஸ் மருந்தை 350 மில்லி நீரில் கலந்து, வாழையின் கீழ்பகுதியில் தரை மட்டத்தில் இருந்து 2 அடி உயரத்தில், வாழைக்கு பயன்படுத்தும் ஊசி மூலம் இரண்டு அங்குல ஆழத்திற்கு கீழ் நோக்கி சாய்வாக செலுத்தி மையத்தண்டை பாதிக்காத வகையில் இரண்டு மில்லி மருந்தை செலுத்த வேண்டும். 1500 வாழைகளுக்கு 1.8 லிட்டர் மருந்தை 4.2 லிட்டர் நீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தலாம். இதனால் வாழைத் தண்டில் உள்ள புழுக்கள் மற்றும் வண்டுகள் அழிக்கப்படுகின்றன. இதற்கு குறைந்த செலவு மட்டுமே ஏற்படும்.

வாழையில் பூ வெளிவந்துவிட்ட பருவத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்தக் கூடாது. ஊசி மூலம் மருந்து செலுத்துவதற்கு பதிலாக, வாழை தண்டின் மேல் பகுதியில் மருந்து தெளித்தால், மேற்பரப்பில் காணப்படும் வண்டுகளை மட்டுமே அழிக்க முடியும்.

தினமணி தகவல் – திரு பி. இராஜன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர், உத்தமபாளையம்

வாழை​யைத் தாக்​கும் வண்டு:​ கட்​டுப்​ப​டுத்​து​வது எப்​படி?

வாழை இனக்​க​வர்ச்சி பொறி.​ வாழை​யைத் தாக்​கும் வண்டு.

வாழை இனக் க வர்ச்சி பொறி. வாழை யைத் தாக் கும் வண்டு.

வாழை வரு​மா​னம் தரக்​கூ​டிய தோட்​டக்​கலை பயிர்.​ வாழையை கிழங்கு கூன் வண்டு,​​ தண்டு கூன் வண்டு அதி​கம் தாக்​கு​கின்​றன.​

கி​ழங்கு கூன் வண்டு நடவு செய்​த​தில் இருந்து 5 மாதம் வரை வாழை​யின் கிழங்​குப் பகு​தி​யில் தாக்​கு​தலை ஏற்​ப​டுத்​தும்.​ தாக்​கு​தல் நடத்​தும்​போது கிழங்கை சாப்​பிட ஆரம்​பிக்​கும்.​ அப்​போது கிழங்கு பகு​தி​யில் ஒரு​வி​த​மான சாறு வடி​யும்.​

வாழை தண்டு கூன் வண்டு நடவு செய்த 5 மாதங்​க​ளில் இருந்து ​ 9 மாதங்​கள் வரை தண்​டுப் பகு​தி​யைத் தாக்​கும்.​ வாழை இலை மஞ்​சள் நிறத்​தில் மாறி,​​ வாடிக் காணப்​ப​டும்.​

புதிய தொழில்​நுட்​பம்
தண்டு மற்​றும் கிழங்கு கூன் வண்​டு​க​ளைக் கட்​டுப்​ப​டுத்த புதுச்​சேரி பெருந்​த​லை​வர் காம​ரா​ஜர் வேளாண் அறி​வி​யல் நிலை​யம் புதிய தொழில்​நுட்​பத்​தைக் கண்​ட​றிந்​துள்​ளது.​

இந்த நிலை​யத்​தின் பூச்​சி​யி​யல் நிபு​ணர் என்.​ விஜ​ய​கு​மார் கூறி​யது:​ ​

ஆண், ​​ பெண் இரண்டு கூன் வண்​டு​க​ளின் உட​லில் இருந்து எடுக்​கப்​பட்ட உயிர்த்​தன்​மை​யுள்ள செக்ஸ் ஹார்​மோன் இனக்​க​வர்ச்சி பொறி​யில் வைத்து தொங்க விடப்​ப​டு​கி​றது.​ இந்த செக்ஸ் ஹார்​மோன் வாச​னைக்கு வண்​டு​கள் வந்து சிக்​கிக் கொள்​கின்​றன.​

எங்​கள் வேளாண் அறி​வி​யல் நிலை​யத்​தின் மூலம் கடந்த ஆண்டு 10 விவ​சா​யி​க​ளுக்கு இத் தொழில்​நுட்​பத்தை அளித்து சோதனை செய்​தோம்.​ அதற்கு நல்ல வர​வேற்பு கிடைத்​துள்​ளது.​ இது சுற்​றுச்​சூ​ழல் சார்ந்​தது.​ இதைப் பயன்​ப​டுத்​து​வ​தும் எளிது.​

ஒரு ஏக்​க​ருக்கு 2 இனக்​க​வர்ச்சி பொறி இருந்​தால் போது​மா​னது.​ ஆள் பற்​றாக்​கு​றை​யைச் சமா​ளிக்க இது உத​வும்.​ வாழை நடவு செய்த 3 மாதத்​தில் இருந்து 9 மாதம் வரை இந்​தப் பொறியை வைக்க வேண்​டும்.​ ஓர் இனக்​க​வர்ச்சி பொறி​யின் விலை ரூ.120.​ பூச்சி மருந்​துக்கு ஆகும் செல​வைக் காட்​டி​லும் இது குறைவு.​ எங்​கள் நிலை​யத்​தில் கிடைக்​கும்.​

மே​லும் வண்டு தாக்​கு​தல் அதி​க​மாக இருந்​தால் பெவே​ரியா பேசி​யானா என்ற உயிர் ரக பூஞ்​சா​ணக் கொல்​லியை கூன் வண்​டின் மீது தெளிக்​கும்​போது நோய் உரு​வாகி வண்​டு​கள் இறக்​கும்.​ இது​வும் எங்​கள் நிலை​யத்​தில் கிடைக்​கும்.​

திசு வளர்ப்பு வாழை​யும் எங்​கள் நிலை​யத்​தில் கிடைக்​கி​றது.​ ஒரு வாழைக் கன்​றின் விலை ரூ.10.​ வாழைப் பட்​டையை உறித்து ஒரு அடி நீளத்​தில் வெட்டி அதை பூமி​யில் போட வேண்​டும்.​ ஓர் ஏக்​க​ருக்கு 40 பட்​டை​கள் இப்​படி போட வேண்​டும்.​ வாழைப் பட்​டையி​லி​ருந்து வெளி​வ​ரும் இயற்​கை​யான வேதிப் பொருள் கிழங்கு மற்​றும் தண்டு கூன் வண்​டு​க​ளைக் கவர்ந்து இழுத்து அழிக்​கி​றது.​ இது​வும் ஓர் எளி​தான முறை என்​றார் விஜ​ய​கு​மார்.​

இனக்​க​வர்ச்சி பொறி

இ​னக்​க​வர்ச்சி பொறி ஒரு பிளாஸ்​டிக் கேனில் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது.​ இந்த கேனில் நடுப்​ப​கு​தி​யில் வெட்டி அதி​லி​ருந்து ஒரு பிளாஸ்​டிக் செரு​கப்​பட்​டுள்​ளது.​ அதற்கு மேல் செக்ஸ் ஹார்​மோன் தொங்​கு​கி​றது.​ இந்த கேனைச் சுற்றி கயிறு சுற்​றப்​பட்​டி​ருக்​கும்.​ வண்டு உட்​கா​ரு​வ​தற்கு வச​தி​யாக இந்​தக் கயிறு சுற்​றப்​பட்​டுள்​ளது.​ கேனுக்​குள் 2 லிட்​டர் தண்​ணீ​ரில் 100 மி.லி.​ சோப்பு ஆயில் கலந்து வைக்​கப்​பட்​டி​ருக்​கும்.​ செக்ஸ் ஹார்​மோன் வாச​னை​யால் கவர்ந்து இழுக்​கப்​பட்டு சோப்பு ஆயி​லில் சிக்கி இந்த வண்டு இறக்​கும்.​ இந்த இனக்​க​வர்ச்சி பொறியை வாழைத்​தோட்​டத்​தில் வாழை மரத்​துக்கு அரு​கில் வைத்து பூமி​யில் செருக வேண்​டும்.​ இந்த இனக்​க​வர்ச்சி பொறி 8 மாதத்​துக்கு வேலை செய்​யும் என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

தினமணி