பீர்க்கன்காய் பயிரில் லாபம் ஈட்டும் விவசாயிகள்

வீ. சீனிவாசன்
First Published : 17 Jun 2010 12:31:56 AM IST

உளுந்தூர்பேட்டை, ஜூன் 16: உளுந்தூர்பேட்டை அருகே தோட்டப் பயிரான பீர்க்கன்காய் பயிரிட்டு விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தநாடு, மட்டிகை, தொப்பையான்குளம், ஆண்டிக்குழி, விருத்தாசலம் வட்டம் பூண்டியாங்குப்பம், மோகாம்பரிக்குப்பம், இருளக்குறிச்சி, மணக்கொல்லை, புதுப்பேட்டை உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கன்காய் உள்ளிட்ட காய்களை பயிர் செய்து வருகின்றனர்.

÷இதில் ஊடு பயிரான பீர்க்கன்காய் விவசாயத்தில் ஏக்கருக்கு 10 டன் முதல் 12 டன் வரை மகசூல் கிடைக்கிறது. டன் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வரை விலை கிடைக்கிறது. ஆக ஒரு ஏக்கர் பீர்க்கன்காய் பயிர் செய்தால் செலவு போக ரூ. 1.40 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது.
பயிரிடும் முறை: நிலத்தை மூன்று (அ) நான்கு முறை புழுதிப்பட உழுது கொள்ள வேண்டும். அதில் 5 அடி தூரம் இடைவெளி விட்டு ஒரு அடி ஆழத்துக்கு குழி தோண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் குழிக்கு தொழுவுரம் (மக்கிய குப்பை), 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிராம் பொட்டாஷ், 25 கிராம் யூரியா, 100 கிராம் வேப்பம்  புண்ணாக்கு ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். பின்னர் அந்த குழிகளில் விதை ஊன்றி நீர் ஊற்றி வரவேண்டும்.

÷25-வது நாளில் குழிக்கு 50 கிராம் யூரியா, 25 கிராம் பொட்டாஷ் இடவேண்டும். இந்தப் பயிருக்கு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். இப்பயிரில் நோய் தாக்கும் தன்மை குறைவு.செடி முளைத்து ஒரு குறிப்பிட்ட உயரம் வளர்ந்தவுடன் கழிகள் நட்டு அதில் கம்பிகளை இழுத்து கட்டி பந்தல் அமைக்கவேண்டும். அவ்வாறு செய்த பின்னர் வளர்ந்த கொடிகள் அந்த பந்தலின்மேல் 50-வது நாளிலிருந்து காய்க்கத்  தொடங்கிவிடும். அதிலிருந்து பீர்க்கன்காயை வாரத்துக்கு  இருமுறை பறித்துகொண்டு இருக்க வேண்டும்.

÷ஊடு பயிரான பீர்க்கன்காயை சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர் செய்ய விவசாயிகள் முன் வந்தால், இலவசமாக விதை வழங்குவதுடன் தோட்டக்கலைத்துறை மூலம் அரசு 60 சதவீதம் மானியம் வழங்குவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயன்கள்: பீர்க்கன்காயில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இரும்புச் சத்து ஹீமோகுளோபின் உற்பத்திக்கும், கால்சியம், பாஸ்பரஸ் எலும்பு வளச்சிக்கும் பயன்படுகிறது. பீர்க்கன்காயின் இலை, காய் மற்றும் வேரில் மருத்துவ குணங்கள் உள்ளன. பீர்க்கன்காயில் பொரியல் செய்வதோடு ஊறுகாய் போடவும் செய்யலாம்.

தினமணி

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Agriculture&artid=257833&SectionID=186&MainSectionID=186&SEO=&Title=%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D