துவரையில் போதிய இடைவெளி தேவை

வேலூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் துவரை பயிரிடப்பட்டுள்ளது.

இதனை நாற்று விட்டு நடவு செய்யும் முறையில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் வரிசைக்கு வரிசை 6 அடியும், செடிக்கு செடி ஒரு அடியும் இடைவெளி விட வேண்டும்.

ஊடு பயிராக இருந்தால் வரிசைக்கு வரிசை 8 அடி இடைவெளி இருக்க வேண்டும். இத் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பதால் செடியில் அதிக கிளைகளுடன் வலுவாக செடி வளர்ந்து அதிக எண்ணிக்கையிலான காய்கள் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் சுமார் 1000 முதல் 1200 கிலோ வரை மகசூல் பெறலாம்

தினமணி தகவல் : வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ப.சரவணன்

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்