அதிக லாபம் தரும் கொத்தமல்லி சாகுபடி

குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது.

கொத்தமல்லி மசாலா வகைப் பயிர்களில் முக்கியமானது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகள் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

உலக அளவில் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 2009-10-ம் ஆண்டில் கொத்தமல்லி (தனியா) 3.6 லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு 2.37 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் 2008-09-ம் ஆண்டில் 14.4 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டு 4.80 ஆயிரம் டன் கொத்தமல்லி (தனியா) உற்பத்தி செய்யப்பட்டது. கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது.

பருவம்

ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது.

குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது. கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் விவசாயிகள் கொத்தமல்லியில் அதிக மகசூல் எடுக்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கொத்தமல்லி பெருமளவில் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது. இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் லாபம் பெறலாம்.

சாகுபடி முறைகள்:

நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும். பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும். நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும். கோடை பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் தேவையில்லை.

முளைத்த 20-ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும். இலைவழி உரமாக 19:19:19-ஐ 30-வது நாளில் தெளிக்க வேண்டும். விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும். பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.

முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூ.10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ.60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ.11,600 போக லாபம் ரூ.48,400 ஆகும். ஆண்டு முழுவதும் பயிரிட்டால் வருடத்திற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

கொத்தமல்லி கீரை 50 நாள்களில் அறுவடைக்கு வரும். நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும். ஆனால் 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும். நல்ல விலை கிடைக்கும். சில்லறையாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும்.

கொத்தமல்லி விதை (தனியா) உற்பத்தி, கொத்தமல்லித் தழையை விட கூடுதல் வருவாய் தரும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச் 2012-ல் (அறுவடையின் போது) கொத்தமல்லி குவிண்டாலுக்கு ரூ.3,100 முதல் ரூ.3,300 வரை விலை நிலவும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் விலை முன் அறிவிப்பு செய்துள்ளது.

மானாவாரி சாகுபடி – KOTHAMALLI

மல்லியை கீரைக்காக மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.

வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் தாண்டினாலோ, மிக அதிக மழை பெய்தாலோ செடியின் வளர்ச்சி குன்றும்.

விதைப்பு

நிலத்தை இரண்டுக்கும் மேற்பட்ட முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிருக்கு பாத்திகள் அமைத்தும், மானாவாரிப் பயிரை விதை விதைப்பான் மூலமும் வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும்.

விதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும். இறவையில் ஹெக்டேருக்கு 10 முதல் 12 கிலோ கொத்தமல்லி விதை தேவை. விதைகளை மானாவாரியாக விதைத்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 கிலோ தேவை.

மானாவாரியாக சாகுபடி செய்யும்போது விதைகளை தூவும் முறையில் விதைத்து, நாட்டுக் கலப்பை மூலம் மூடிவிட வேண்டும்.

விதை நேர்த்தி

மானாவாரி கொத்தமல்லி விதைகளை பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கலந்த நீரில் 16 மணி நேரம் ஊற வைத்து விதைத்தால் வறட்சியை தாக்குப் பிடித்து வளரும்.

ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் மருந்து கலந்து ஊற வைத்து விதைப்பது சிறந்தது.

பின்னர் ஒரு ஹெக்டர் விதைக்கு 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் டிரைக்கோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். பிறகு உலர்த்தி விதைத்தால் வாடல் நோய் வராது.

நீர்ப்பாசனம்

விதைத்த 8 முதல் 15-வது நாளில் விதை முளைக்க தொடங்கும். எனவே விதைத்தும் ஒரு முறையும், பிறகு 3-ம் நாள் ஒரு முறையும், 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

உர நிர்வாகம்

கடைசி உழவின்போது ஒரு ஹெக்டேருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும். சூப்பர் பாஸ்பேட் உரம் ஹெக்டேருக்கு 188 கிலோ இட்டு கொக்கி கலப்பை மூலம் கடைசி உழவு செய்ய வேண்டும்.

இறவை பயிருக்கு மேல் உரமாக விதைத்த 30-ம் நாளில் ஹெக்டேருக்கு 22 கிலோ யூரியா இட வேண்டும்.

களைகள் முளைக்கும் முன்பு புளுக்ளோரலின் ஹெக்டேருக்கு 700 மில்லி மருந்தை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்படும்போது களையெடுக்க வேண்டும்.

கீரை அறுவடை

விதைத்த 30-ம் நாளில் இளங்கீரையாகவும், 60 மற்றும் 75-ம் நாள்களில் 50 சதவீதம் இலைகளையும் அறுவடை செய்யலாம்.

விதை அறுவடை

விதைத்த 90 முதல் 110 நாள்களுக்குள் விதைகளை அறுவடை செய்ய முடியும். காய்கள் நன்கு முதிர்ந்து பச்சை நிறத்தில் இருந்து பொன்னிறமாக மாறும்போது அறுவடை செய்வது நல்லது.

தினமணி தகவல் – வேளாண் துறை அலுவலர் இளங்கோவன் – வேலூர்.

மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி

மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி செய்யலாம்

மல்லியை கீரைக்காக மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் தாண்டினாலோ, மிக அதிக மழை பெய்தாலோ செடியின் வளர்ச்சி குன்றும்.

விதைப்பு

நிலத்தை இரண்டுக்கும் மேற்பட்ட முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிருக்கு பாத்திகள் அமைத்தும், மானாவாரிப் பயிரை விதை விதைப்பான் மூலமும் வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும்.

விதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும். இறவையில் ஹெக்டேருக்கு 10 முதல் 12 கிலோ கொத்தமல்லி விதை தேவை. விதைகளை மானாவாரியாக விதைத்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 கிலோ தேவை.

மானாவாரியாக சாகுபடி செய்யும்போது விதைகளை தூவும் முறையில் விதைத்து, நாட்டுக் கலப்பை மூலம் மூடிவிட வேண்டும்.

விதை நேர்த்தி

மானாவாரி கொத்தமல்லி விதைகளை பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கலந்த நீரில் 16 மணி நேரம் ஊற வைத்து விதைத்தால் வறட்சியை தாக்குப் பிடித்து வளரும்.

ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் மருந்து கலந்து ஊற வைத்து விதைப்பது சிறந்தது.

பின்னர் ஒரு ஹெக்டர் விதைக்கு 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் டிரைக்கோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். பிறகு உலர்த்தி விதைத்தால் வாடல் நோய் வராது.

நீர்ப்பாசனம்

விதைத்த 8 முதல் 15-வது நாளில் விதை முளைக்க தொடங்கும். எனவே விதைத்தும் ஒரு முறையும், பிறகு 3-ம் நாள் ஒரு முறையும், 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

உர நிர்வாகம்

கடைசி உழவின்போது ஒரு ஹெக்டேருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும். சூப்பர் பாஸ்பேட் உரம் ஹெக்டேருக்கு 188 கிலோ இட்டு கொக்கி கலப்பை மூலம் கடைசி உழவு செய்ய வேண்டும்.

இறவை பயிருக்கு மேல் உரமாக விதைத்த 30-ம் நாளில் ஹெக்டேருக்கு 22 கிலோ யூரியா இட வேண்டும்.
களைகள் முளைக்கும் முன்பு புளுக்ளோரலின் ஹெக்டேருக்கு 700 மில்லி மருந்தை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்படும்போது களையெடுக்க வேண்டும்.

கீரை அறுவடை

விதைத்த 30-ம் நாளில் இளங்கீரையாகவும், 60 மற்றும் 75-ம் நாள்களில் 50 சதவீதம் இலைகளையும் அறுவடை செய்யலாம்.

விதை அறுவடை

விதைத்த 90 முதல் 110 நாள்களுக்குள் விதைகளை அறுவடை செய்ய முடியும். காய்கள் நன்கு முதிர்ந்து பச்சை நிறத்தில் இருந்து பொன்னிறமாக மாறும்போது அறுவடை செய்வது நல்லது.

தினமணி செய்தி : 22 Sep 2011 02:24:17 PM IST
வேளாண் துறை அலுவலர் இளங்கோவன்

கொத்தமல்லி பயிரிடும் முறை

கொத்தமல்லி இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலையில் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவதற்கும், சிறந்த மருத்துவ குணமுள்ள பயிராகவும் உள்ள கொத்தமல்லியை சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.

மக்களின் அன்றாட சமையல் தேவையில் முக்கிய பங்கு வகிப்பது கொத்தமல்லி. சில மாதங்களாக மார்க்கெட்டில் கொத்தமல்லிக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. 400 கிராம் எடை கொண்ட ஒரு கொத்தமல்லி கட்டு ரூ. 15 முதல் ரூ.60 வரை நாளுக்கு ஒரு விலை விற்கிறது. விவசாயிகள் முறையாக கொத்தமல்லி சாகுபடி செய்தால் அதிக லாபம் கொழிக்கலாம்.

கொத்தமல்லி எல்லா பருவத்துக்கும் ஏற்ற சாகுபடி தன்மை கொண்டது. தாமதமாக பூத்து அதிக மகசூலை தரக்கூடியது. செடியின் அடி பாகத்தில் இருந்து அதிக அளவு தூர் வெடிக்கும் தன்மை கொண்டது. அதிக கிளைகளை கொண்டிருப்பதால் பூப்பதற்கு முன்னதாகவே அறுவடைக்கும் ஏற்றதாக உள்ளது. செடிகள் பூத்த பின்னும் பக்கக் கிளைகளில் உள்ள இலைகள் சமையலுக்கு பயன்படுகிறது.

ஒரே முறையாக ஏக்கர் கணக்கில் பயிரிடாமல் 20 முதல் 25 சென்ட் வரை பிரித்து 15 தினங்களுக்கு ஒரு முறை விதைத்தால் ஆண்டுதோறும் அறுவடை செய்து லாபம் ஈட்ட முடியும். விதைத்த 30 முதல் 40 நாளில் அறுவடைக்கு தயாராவதால் குறுகிய கால பணப் பயிராகவும் கொத்தமல்லி கருதப்படுகிறது.

பருவம்:

மருத்துவ குணத்துக்காக பயிரிட்டால் ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஏற்றதாகும்.

சமையல் தேவைக்காக பயிரிடுவதென்றால் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரி பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 கிலோ விதைகள் விதைக்க வேண்டும்.

மண் வகை:

மணல் சார்ந்த செம்மண், வண்டல் மண் உகந்ததாகும்.

விதைப்பு:

பொதுவாக விதை தூவி சாகுபடி செய்யலாம். இருப்பினும் மேட்டுக்கால் பாத்தி அமைத்து 20 செ.மீ. ஷ் 15 செ.மீ. இடைவெளி விட்டு அந்த இடைவெளியில் உடைக்கப்பட்ட விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த 8 முதல் 15 தினங்களில் முளைக்கத் தொடங்கும்.

விதை நேர்த்தி:

மானாவாரி பயிருக்கு பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் என்னும் வேதிப்பொருளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கரைத்து விதையை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பாஸ்போ பேக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் என்ற உயிர் உரங்கள் 600 கிராம் என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கான விதைகளுக்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

உரமிடுதல் (அடி உரம்):

தொழு உரம் ஒரு ஹெக்டேருக்கு 10 மெட்ரிக் டன், தழைச்சத்து 10 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ இட வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு யூரியா 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ, பொட்டாஷ் 33 கிலோ இடவேண்டும்.

மேலுரம்:

10 கிலோ தழைச்சத்து மற்றும் 22 கிலோ யூரியா விதைத்த 30 நாளில் இட வேண்டும்.

நீர்ப்பாசனம்:

விதைத்த உடன் 1 முறை, விதைத்து 3 நாளில் ஒரு முறை அதை தொடர்ந்து 7 முதல் 10 நாள்கள் வரை நீர்பாசனம் செய்ய வேண்டும்.

களைக்கொல்லி இடுதல்:

ப்ளூகுளோரிலின் 700 மில்லி லிட்டர் அளவை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து இட வேண்டும். விதைத்த 30 நாளில் ஒரு குத்துக்கு 2 செடிகளை விட்டு விட்டு மீதமுள்ள செடிகளை பிடுங்க வேண்டும்.

இதுபோன்ற முறைப்படி, விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்தால் அதிக லாபம் பெற முடியும்.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக் கலை அலுவலர் பாபுவை 94442 27095 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

தினமணி தகவல்