மரவள்ளி – மாவுப்பூச்சி, வெள்ளை ஈ தாக்குதல்

அண்ணாகிராமம் வட்டார பகுதியில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இதில் மாவுப்பூச்சி, வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக இலைகள் மஞ்சள் நிறமாகி பழுத்து காய்ந்து விடுகிறது. இது போன்ற அறிகுறி அதிக இடத்தில் தென்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்த

  • டிரை அசோபாஸ் (2 மிலி),
  • பாசலோன் (2 மிலி),
  • புரேபினோபாஸ் 50 இசி (2 மிலி),
  • டைமெத்தோயேட் 30 இசி (2 மிலி),
  • குளோர்பைரிபாஸ் 20 இசி (4 மிலி)

(அடைப்பு குறியில் உள்ளது ஒரு லிட்டர் தண்ணீருக்கு) இதில் ஏதேனும் ஒரு மருத்துடன், வேப்ப எண்ணெய் (5 மிலி) கலந்து இலையின் அடிப்பாகம் நனையும் வரை 10 நாள்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.

மாவுப்பூச்சி மட்டும் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 20 மிலி மற்றும் 5 மிலி சோப்பு கரைசல் கலந்து இலையின் அடிப்பாகம் நனையும்படி தெளிக்க வேண்டும்.

– ஜெ.மல்லிகா, குறிஞ்சிப்பாடி  தோட்டக்கலை உதவி இயக்குநர்
தினமணி

மரவள்ளியில் மாவுப் பூச்சி: கட்டுப்படுத்த வழிமுறைகள்

மரவள்ளியை தாக்கும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக் கலைத் துறை உதவி இயக்குனர் மோகன்குமார் வழிமுறைகள் தெரிவித்துள்ளார்.

÷பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதல் நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவாரி மற்றும் இறவை மரவள்ளி பயிரில் காணப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பயிர்கள் இலை உருமாறி சிறுத்து காணப்படும். பப்பாளி மாவுப்பூச்சி தாக்குதல் தண்டுகள், இலைகளின் அடிப்பாகம் மற்றும் இலைக்காம்பு இடுக்குகளில் இருக்கும். மாவுப் பூச்சிகளின் மெழுகு போன்று மெல்லிய வெள்ளை நிற உறையால் சூழ்ந்து காணப்படும்.

மாவுப்பூச்சிகள் வெளியேற்றம் தேனை உண்ண எறும்புகள் ஊர்ந்து செல்வதை காணமுடியும். இலையின் மேற்பரப்பில் கரும்பூஞ்சாணம் படர்ந்து காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • பயிர் சாகுபடி வயல்களை களையின்றி வைத்துக் கொள்ள வேண்டும். பாதிப்பு மிகக்குறைவாக இருந்தால் ஒட்டுமொத்தமாக அடிவெட்டு செய்து செடிகளை அழிக்க வேண்டும்.
  • அடிவெட்டு செய்த உடன் 0.2 சதவீதம் ப்ரோபனோபாஸ் 50 சதம் இசி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2.மி.லி. வீதம் ஏக்கருக்கு 200 லிட்டர் மருந்து கரைசல் தயார் செய்து, செடியின் அடிக்கட்டை, தண்டு மற்றும் செடியை சுற்றியுள்ள மண் நன்கு நனையும்படி ஒட்டும் கலந்து மருந்து அடிக்க வேண்டும்.
  • முதல் தெளிப்பில் இருந்து 10 அல்லது 15 நாட்கள் கழித்து டைமெதேயேட் 30 சதம் இசி மருந்து 3 மி.லி. மற்றும் அசாடிராக்டின் 1 மி.லி. ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

இது குறித்து மேற்கொண்டு தகவல் பெற தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.