விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்!

விவசாயத்தை விட்டு வெளியேறிவருபவர்களை மீண்டும் விவசாயத்துக்கு அழைத்துவரும் வகையில் தெளிப்புநீர் பாசனம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

 • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் ஒருகாலத்தில் வற்றாத ஜீவநதியாக திகழ்ந்தன. இதில் செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் பாலாற்றில் கலந்து மாவட்டம் முழுவதும் பாசனத்தை பலப்படுத்தியது. ஒரு காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தில் நெல் உற்பத்தியில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறந்து விளங்கியது.
 • காலப்போக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் அந்த பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் பெயர் அளவுக்குக்கூட தண்ணீரை பார்த்ததில்லை என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் ஆற்றுப்பாசனம் முற்றிலுமாகத் தடைப்பட்டது.
 • ஆற்றில் நீர்போக்கு தடைபட்டதால், நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றது. இதனால் கிணற்று பாசனமும் கேள்விக்குறியானது. இதில் மின்வெட்டு பிரச்னையும் விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு, விளைநிலங்களையும் விற்பனை செய்துவிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்துவரும் பன்னாட்டு நிறுனவங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

 

தெளிப்பு நீர்ப் பாசனம் மூலம் பயிரிடப்பட்ட தோட்டம்.

தெளிப்பு நீர்ப் பாசனம் மூலம் பயிரிடப்பட்ட தோட்டம்.

நுண்ணீர் பாசனம்: இந்த நிலைமை நாடு முழுவதும் இருப்பதாக நபார்டு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தன. இதைத் தொடர்ந்து முழு மானியத்தில் நுண்ணீர் பாசனங்களான சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனத்திட்டத்தை அறிமுகம் செய்தது.

இதை அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றும் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த நுண்ணீர் பாசனம் இருந்தாலும் அது பெரிய அளவில் விவசாயிகளைச் சென்றடையவில்லை. இப்போது நூண்ணீர் பாசனத் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியப் பகுதியான புரிசை கிராமத்தில் நூண்ணீர் பாசனமான தெளிப்புநீர் பாசனத்தில் ஈடுபட்டு விவசாயி தனஞ்செயன், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

இவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம் சம்பங்கி, ரோஜா, மல்லிகை, கத்தரி, வெண்டை உள்ளிட்ட தோட்டப்பயிர்களை கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயிரிட்டு வருகிறார். இதில் தண்ணீர் மிச்சப்படுத்தப்படுவதுடன், நல்ல மகசூல் கிடைப்பதாகவும், நல்ல விலை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை விட்டுவிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிடலாம் என்று வேலை தேடிவந்தேன்.

அப்போது நுண்ணீர் பாசனம் குறித்து தகவல் அறிந்தேன். விவசாயத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டு தகவல்களைப் பெற்றேன். அதிகாரிகளும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

அதன்படி எனது விளைநிலத்தைப் பார்த்த அதிகாரிகளின் முழு மானியத்தில் தெளிப்பு நீர் பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர். வாய்கால் பாசனத்தின் மூலம் 1 ஏக்கருக்கு பாய்ச்சப்படும் நீரைக் கொண்டு, தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் 6 ஏக்கர் வரை பாய்ச்ச முடிகிறது. இதனால் தண்ணீர் சேமிப்பு, மின்சாரம் சேமிப்பு, பணம் சேமிப்பு ஆகியன சாத்தியமாகின்றன.

பயிரிடும் காய்கறிளைப் சென்னை மாம்பலம் காய்கறிச்சந்தையில் இருந்து நேரடியாக வந்து பெற்றுச் செல்கின்றனர். நல்ல விலையும் கிடைக்கிறது. மேலும் காஞ்சிபுரம் மலர்கள் சந்தையில் இருந்து சம்பங்கி, மல்லி ஆகிய பூக்களை பெற்றுச் செல்கின்றனர்.

இதன்மூலம் தெளிப்புநீர் பாசனம் என் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது என்றார். இவரைப் போலவே அதே கிராமத்தைச் சேர்ந்த முருகவேல், சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் ஆகியோர் தெளிப்புநீர் பாசனத்தில் பயனடைந்துள்ளனர்.

தகவல்

இயற்கை வேளாண்மையில் கத்தரி சாகுபடி

சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடி நீளம், 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். இதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும். காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்பந்தப்பட்ட பூசனக்கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங்காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும். நாற்றங்காலைத் தொடர்ந்து நடவுவயல் தயாரிப்பதற்கு நல்ல கவனம் தரவேண்டும். நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழ வேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும்.

(இரண்டரை x 2 அடி) நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா, ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டுபாசனம் செய்ய வேண்டும். செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும்.

ஹியூமிக் அமிலம் பயிர் வளர்ச்சிக்கு அவசியம் ஆனது. இன்றைய காய்கறி சாகுபடியில் பல சூழ்நிலைகளில் விவசாயிகள் இயற்கை உரத்தை செடிகளுக்கு அதிகமாக இடமுடிவதில்லை. இம்மாதிரி தருணங்களில் மகசூல் குறைந்து, கிடைக்கும் லாபத்தின் அளவு குறைந்து காணப்படுகின்றது. சில விவசாயிகளுக்கு நஷ்டமும் ஏற்படுகின்றது. இதைத் தவிர்க்க ஹியூமிக் அமிலக் கரைசல் இலை வழியாக தெளித்து வருவதால் மகசூல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. (இங்கிருந்து கம்பெனி விளம்பரம் ஆரம்பமாகிறது என்று நினைக்கிறேன் – வே.அ)

அனுகூலங்கள்:

இதை தெளிப்பதால் சத்து குறைந்த பூமியில் நல்ல பலன் கிடைக்கும். ஹியூமிக் அமிலம் தெளித்த செடிகளின் வேர்கள் பூமியில் இடப்பட்ட உரத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையை ஏற்படுத்துகிறது. இதை தெளிப்பதால் இலையில் பச்சையும், சர்க்கரை சத்து மற்றும் அமினோ அமிலம் உற்பத்தி ஆக உதவுவதால் ஒளிச்சேர்க்கை ஏற்பட்டு மகசூல் அதிகரிக்க வழி வகை செய்கின்றது. தெளிப்பதால் பூமியில் இடப்பட்டுள்ள தழை, மணி, சாம்பல், இரும்பு மற்றும் துத்தநாதகம் போன்றவற்றை செடிகள் எளிதில் கிரகித்துக் கொள்ள உதவுகின்றது. இது செடிகளுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்குவித்து மகசூலை அதிகரிக்க வழிவகை செய்கிறது. செடிகளுக்கு பூச்சி, வியாதிகளை எதிர்த்து வளரும் சக்தியை கொடுக்கிறது.

ஜே பண்ணையில் பரிசோதனை:

ஹியூமிக் அமிலத்தின் திறனை அறிவதற்காக கத்தரி சாகுபடியில் இது உபயோகப்படுத்தப் பட்டது. இது பயிரின் 135, 155 மற்றும் 175வது நாளில் தெளிக்கப்பட்டு வந்தது. ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி ஹியூமிக் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு தேவையான 200 லிட்டர் தண்ணீரில் (ஒரு லிட்டர்/ஒரு ஏக்கர்) கலந்து தெளிக்கப் பட்டது. இவ்வாறு தெளிக்கப்பட்ட செடிகளின் இலைகள் பார்ப்பதற்கும் பச்சை நிறத்துடனும் அதிகமான பூக்கள் காய்களுடனும் பசுமையாக காணப்பட்டது.

நடவு நட்ட மூன்று வாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா பாசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்கு வியாதியை உண்டாக்கி கடுவிரைவில் அவைகளை மடியச் செய்து விடுகின்றது. இதைத் தொடர்ந்து இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பூக்களுக்கும் ஏற்படும் பூச்சிகளின் சேதத்தை தவிர்க்க வாரம் ஒரு முறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சிவிரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மில்லி அளவு கலந்து தெளிக்கவும். இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதில் இருந்து காப்பாற்றுகின்றன.

வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி உலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடிகளை சுற்றி பூமியைத் தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம். விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டுவர வேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன.

மேற்கண்ட பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும். இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22,000 ஆகும். காய்கள் விற்பனையில் வரவு ரூ.68,000 கிடைக்கும். சாகுபடி செலவு போக ஏக்கரில் நிகர லாபம் ரூ.46,000 கிடைக்கும்.

ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் சாகுபடி முறையில் சாகுபடி செலவு அதிகரித்துக் கொண்டே வரும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்காது. இயற்கை முறை சாகுபடி தொடர்ந்து செய்யும்போது சாகுபடி செலவு படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்கும். இதனால் சாகுபடியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இனி எதிர்காலத்தில் நீண்ட கால சாகுபடிக்கு இயற்கை முறை சாகுபடிதான் ஏற்றது. அந்த இயற்கை முறை சாகுபடிக்கு சக்தியைக் கொடுப்பது நுண்ணுயிர்களும் உயிர் உரங்களும் ஆகும்.

தினமலர் செய்தி-எஸ்.எஸ்.நாகராஜன்

 

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

கத்தரியில் தண்டுப்புழு

கத்தரியில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தண்டுப் புழுவின் தாக்குதல் இருக்கும். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் இதன் தாக்குதல் அதிகமாக உள்ளது.

கத்தரி செடியில் காய், தண்டுப் பகுதியில் புழுத் தாக்குதல் அதிகம் ஏற்படும். பொதுவாக கத்தரி செடியில் முசினோடஸ்அரிபோனாலிஸ் என்ற புழுத் தாக்குதல் பரவலாக காணப்படும். இதனால்,செடிகள் காய்ந்துவிடும் நிலைக்கு தள்ளப்படும்.

இவை தண்டின் அடியிலும், தண்டிலிருந்து கிளை பிரியும் இடத்திலும் சிறு துளையிட்டு இனப்பெருக்கத்தை தொடங்கும். இப்புழுக்களின் தலை சிவப்பு நிறத்திலும், உடல் வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

 • விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
 • பைரித்திராயட் மருந்து தெளிப்பதை விவசாயிகள் நிறுத்தி வைக்க வேண்டும். இம்மருந்துகள் புழுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடும்.
 • ஏக்கருக்கு 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்க வேண்டும்.
 • கார்பரில் 2  கிராம் அல்லது புரோபனோபாஸ் 1.5 மில்லிகிராம் ஆகியவற்றை செடிகள் மீது தெளிக்க வேண்டும்.
 • இம்மருந்து தெளித்தும், தண்டுப் புழுக்களின் தாக்குதல் குறையவில்லையென்றால், ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பரில் 2 மில்லிகிராம் கலந்து மாலை நேரங்களில் கத்தரி செடியின் வேர்களில் ஊற்றலாம்.

தினமணி தகவல் : திரு ப. ஸ்ரீதர், வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர், பாப்பாரப்பட்டி

இயற்கை வேளாண்மையில் கத்தரி சாகுபடி

காய்கறி சாகுபடியில் இயற்கை முறை நுட்பங்களை கடைபிடித்தல்: தற்போது நாம் செய்யும் காய்கறி சாகுபடியில் முக்கியமானது கத்தரி சாகுபடி. இது பூச்சிகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. இயற்கை சம்பந்தமான உரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் கத்தரி சாகுபடிக்கு எப்படி உதவுகின்றது என்பதை இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

இயற்கை முறை சாகுபடி:

சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடிநீளம், 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். இதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும். காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்மந்தப்பட்ட பூசணக் கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங்காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும்.

நாற்றங்காலைத் தொடர்ந்து நடவு வயல் தயாரிப்பதற்கு நல்ல கவனம் தரவேண்டும். நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும். (இரண்டரை து 2 அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்கு செடி 2 அடி).

நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா, ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும். செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும்.

நடவு நட்ட மூன்று வாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா, பாசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்கு வியாதியை உண்டாக்கி கடுவிரைவில் அவைகளை மடியச் செய்துவிடுகின்றது.

இதைத் தொடர்ந்து இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பூக்களுக்கும் ஏற்படும் பூச்சிகளின் சேதத்தைத் தவிர்க்க வாரம் ஒரு முறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும். இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றன.

வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி உலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடிகளைச் சுற்றி பூமியைத் தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம். விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டுவர வேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன

மேற்கண்ட பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும். இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22 ஆயிரம் ஆகும். காய்கள் விற்பனையில் வரவு ரூ.68 ஆயிரம் கிடைக்கும். சாகுபடி செலவு போக ஏக்கரில் நிகர லபாம் ரூ.46 ஆயிரம் கிடைக்கும்.

இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் சாகுபடி முறையில் சாகுபடி செலவு அதிகரித்துக்கொண்டே வரும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்காது.

இயற்கை முறை சாகுபடி தொடர்ந்து செய்யும்போது சாகுபடி செலவு படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்கும். இதனால் சாகுபடியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இனி எதிர்காலத்தில் நீண்டகால சாகுபடிக்கு இயற்கை முறை சாகுபடிதான் ஏற்றது. அந்த இயற்கை முறை சாகுபடிக்கு சக்தியைக் கொடுப்பது நுண்ணுயிர்களும் உயிர் உரங்களும் ஆகும்.

தினமலர் தகவல் – எஸ்.எஸ்.நாகராஜன்.

திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கத்தரி, மிளகாய் நாற்றுகள் விற்பனை

திருச்சி அருகே சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விதை நெல், கத்திரி நாற்று, மிளகாய் நாற்று உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையத்தில் விவசாயிகளின் நலன்களுக்காக அவ்வப்போது புதிய விஞ்ஞான தொழில்நுட்பங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதைகள், நாற்றுகள் போன்றவற்றையும் உற்பத்தி செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.  தற்போது,

 • கிழக்குக் கடற்கரை நெட்டை (இ.சி.டி.) ரக தென்னை நாற்றுகள் தலா ரூ. 25-க்கும்,
 • ஆந்திர பொன்னி (பிபிடி 5204) விதை நெல் கிலோ ரூ. 20 வீதமும்,
 • ஊர்ச்சி ரக கத்திரி நாற்று (குழித்தட்டு நாற்று) 35 பைசா வீதமும்,
 • பிரியங்கா ரக மிளகாய் நாற்று (குழித்தட்டு நாற்று) 40 பைசா வீதமும்

விற்பனை செய்யப்படுகின்றன.

தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரடியாக அணுகி முன் பணம் செலுத்தி பதிவு செய்தோ அல்லது உடனடியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி தகவல் : அ. சகுந்தலை, நிலைய இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்