கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்

தமிழகத்தில் பால் தேவை எப்போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போதையை பால் உற்பத்தி, நமது தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதாக இல்லை.

பால் தட்டுப்பாடுதான் பல்வேறு கலப்படங்களுக்கும், விலையேற்றத்துக்கும் மூலகாரணம். எனவே பால் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் கலப்படமற்ற, சுத்தமான பாலை நியாயமான விலையில் பெறமுடியும்.

பால் உற்பத்தியைப் பெருக்க தமிழகத்தில் இன்னமும் நிறைய கறவை மாடுகள் வளர்க்கப்பட வேண்டும். நிறைய மாட்டுப் பண்ணைகள் உருவாக வேண்டும். எனவே தான் தமிழக அரசு மாடு வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இலவசமாகவும் மானியத்திலும் கறவைமாடுகள் வழங்கப்படுகின்றன. மாடுகள் அதிக அளவில் வளர்க்க மேய்ச்சல் நிலம் தேவை. ஆனால் மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதனால் மாடுகளுக்கான தீவனப் புல் கிடைப்பதில் பெருமளவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கறவை மாடுகளுக்கு கால் பங்கு வைக்கோல், அரைப் பங்கு பசுந் தீவனம், கால் பங்கு கடைகளில் கிடைக்கும் ஏனைய தீவனங்கள் கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும், நிறைய பாலும் கறக்கும். பராமரிப்புச் செலவும் குறையும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே பால் உற்பத்தியில் தீவனப் பயிர்களின் பங்கு பெரிதும் அங்கம் வகிக்கிறது. 5 மாடுகளுக்கு மேல் வைத்து இருப்பவர்கள் நிச்சயம் தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். அல்லது விலைகொடுத்து வாங்கவேண்டும் என்கிறது கால்நடை பராமரிப்புத்துறை.

வீட்டுக்கு 2 மாடுகள் வைத்திருக்கும் ஐவர் சேர்ந்து, தீவனப் பயிர்களை விளைவிக்கலாம். தீவனப் பயிர்கள் வளர்க்க, கால்நடை பராமரிப்புத் துறை நிறைய மானியம் வழங்குகிறது.

தீவனப்பயிர்கள்

தீவனப் பயிர்களில் முக்கியமானவை

 • தீவன மக்காச் சோளம்
 • தீவனச் சோளம்
 • தீவனக் கம்பு
 • கினியா புல்
 • தீவன தட்டைப் பயறு
 • கம்பு நேப்பியர் புல்

ஆகியவை.

தீவன மக்காச் சோளம்

தீவன மக்காச் சோளத்தில் ஆப்பிரிக்கன் உயரம், டெக்கான், கங்கா, கோ1 என்ற ரகங்கள் உள்ளன. இவற்றுக்கு உரத்தேவை ஹெக்டேருக்கு 40 கிலோ யூரியா, 64 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ். ஹெக்டேருக்கு 16 கிலோ விதை தேவை. விதைத்த 3-ம் நாள் தண்ணீர், பின்னர் வாரம் ஒரு முறை நீர்பாய்ச்சினால் போதும். 60-வது நாள் முதல் பூக்கும் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.

தீவன மக்காச்சோளம்

தீவன மக்காச்சோளம்

தீவனச் சோளம்

தீவனச் சோளம்

தீவனச் சோளம்

தீவனச் சோளம் கோ 11, கோ 27 என்ற ரகங்கள் கிடைக்கின்றன. இவற்றுக்கு ஹெக்டேருக்கு 12 கிலோ யூரியா, 16 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 30-வது நாளில் 12 கிலோ யூரியா இட வேண்டும். விதைத் தேவை ஹெக்டேருக்கு 16 கிலோ. விதைத்த உடன் முதல் தண்ணீரும், 3-ம் நாளில் 2-வது தண்ணீர், பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 60 முதல் 65 நாளில் அறுவடை செய்யலாம்.

தீவனக் கம்பு

தீவன கம்பு

தீவன கம்பு

தீவனக் கம்பு கோ 8 என்ற ரகம் கிடைக்கிறது. இதற்கு ஹெக்டேருக்கு அடியுரமாக 12 கிலோ யூரியா, 96 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 21 கிலோ யூரியா இட வேண்டும். விதை அளவு ஏக்கருக்கு 4 கிலோ. 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 40 முதல 45 நாள்களில் அறுவடை செய்யலாம்.

கினியா புல்

கினியா புல்

கினியா புல்

ஏக்கருக்கு 20:20:60 கிலோ முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்களும், மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவை. வேர்க் கரணை ஏக்கருக்கு 20,640. விதைத்த உடன் முதல் தண்ணீர் 3-ம் நாளும், பின்னர் 15 முதல் 20 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்யலாம்.

தீவன தட்டைப்பயறு

தீவன தட்டைப் பயிறு

தீவன தட்டைப் பயிறு

இதில் கோ 5 ரகம் கிடைக்கிறது. உரத்தேவை ஏக்கருக்கு அடியுரம் 10:16:8 முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 14 கிலோ போதுமானது. விதைத்து 3-வது நாளில் முதல் தண்ணீரும், பின்னர் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாளில் அறுடைக்கு வரும்.

கம்பு நேப்பியர் புல்

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்

என்.பி.21, என்.பி.2, கோ1, கோ2, கோ3 ஆகிய ரகங்கள் கிடைக்கின்றன. விதைக் கரணைகள் ஏக்கருக்கு 16 ஆயிரம் தேவை. அடியுரமாக ஏக்கருக்கு 20:20:16 கிலோ விகிதத்தில் முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இடவேண்டும். முதல் தண்ணீர் நடும் போதும், 2-வது தண்ணீர் நட்ட 3-வது நாளிலும் பாய்ச்ச வேண்டும். பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். முதல் அறுவடை 80 நாள்களிலும், பின்னர் 45 நாள்களுக்கு ஒரு முறையும் செய்யலாம்.

தினமணி
த. தேவராஜ்
First Published : 17 Nov 2011 10:46:41 AM IST

படங்கள் – வேளாண் பல்கலை – கோவை.

6 thoughts on “கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்

 1. i need the detail of where will get theevana pul seeds or karanai am living in desur near vandavasi t v malai dt, if you know the details please reply me

 2. மாட்டு கொட்டகைப் பராமரிப்பு

  மாட்டு கொட்டகைப் பராமரிப்பு

  ஒரு சிறந்த தரமான கொட்டகை வசதியில்லாமல் கால்நடைப் பராமரிப்பு சாத்தியமன்று. கொட்டகை சரியாக திட்டமிடப்படவில்லை எனில் அது வேலைப்பளுவை அதிகரித்து கூலி ஆட்கள் செலவை உயர்த்தி விடும். அதே சமயம் கொட்டகை அமைப்பு ஒவ்வொரு கால்நடைக்கும் நல்ல காற்றோட்டம் வெளிச்சமும் கிடைப்பதாக இருத்தல் அவசியம். கொட்டகையின் வடிகால் வசதி, அமைப்பு சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சுத்தமான பால் உற்பத்தியைப் பெற முடியும்.

  கட்டிடத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தல்

  பண்ணை துவங்குவதற்கு முன் இடத்தை சரியான முறையில் தேர்ந்தெடுத்தல் அதற்காகக் கவனிக்க வேண்டிய கருத்துக்களாவன..
  இடவமைப்பு மற்றும் வடிகால்
  நாம் தேர்ந்தெடுக்கும் இடம் நல்ல வடிகால் வசதி உள்ளதாக இருக்க வேண்டும். பொதுவாக சற்று மேடான பகுதியாக இருப்பது நல்லது. அதனால் மழைநீர் மற்றும் நீர் நன்கு வடிந்து சுற்றுப்புறம் சுகாதாரமானதாக இருக்கும். நிலம் நன்கு சமன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
  மண் வகை
  கட்டிடம் எழுப்பக்கூடிய இடங்களில் மண்ணின் பாங்கு முக்கியம், களிமண் தரை கட்டிடங்களுக்கு உகந்ததல்ல ஏனெனில் களிமண் தரையில் தண்ணீர் தேங்கி நிற்கும். வண்டல் மண், சரளை மண் வகைகள் கட்டிடம் கடட ஏற்றதாகும்.
  காற்று மற்றும் சூரிய ஒளி
  கட்டிடங்களின் திசையமைப்பு நல்ல காற்று வசதி கிடைக்கும். படியாகவும் அதே நேரத்தில் சூரிய வெப்பம் கால்நடைகளை நேரடியாகத் தாக்காதவாறும் அடைய வேண்டும். அதாவது பண்ணைக் கட்டிடங்களின் நீளவட்டம் கிழக்கு மேற்காக அமைவது நல்லது. வேகமாக காற்று வீசும் இடங்களில் மரங்கள் வளர்த்தால் காற்றின் வேகத்தை ஓரளவு குறைக்க உதவும்.
  தொலைவு
  கொட்டகையானது பிரதான சாலையிலிருந்து 100 மீ தொலைவுக்குள் எளிதில் அடையக்கூடியதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் சந்தையை அடைய முடியும்.
  தண்ணீர் வசதி
  சுத்தமான நல்ல குடிநீர் தாராளமாகக் கிடைக்கும் இடமாக இருத்தல் வேண்டும்.
  சுற்றுப்புரம்
  கட்டிடங்களைச் சுற்றியுள்ள இடம் குளிர்ச்சியாய் புல்வெளிகளில் மரம் செடிகள் வளர்க்க ஏற்ற நிலமாக அமைதல் அவசியம்
  வேலை ஆட்கள்
  தினசரித் தேவைக்கேற்ப நல்ல உழைப்புள்ள வேலை ஆட்கள் எளிதில் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். ஆட்களுக்கத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்கள் எப்போதும் கொட்டகை அருகிலேயே இருக்குமாறு வைத்தல் நலம்.
  சந்தை
  கொட்டகையானது எளிதில் நுகர்வோரை அடையுமாறு அமைந்து இருத்தல் நலம். கால்நடைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏற்றவாறு போக்குவரத்து வசதிகள் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
  மின்சாரம்
  பண்ணையில் மின்சார இணைப்பு இருத்தல் மிக அவசியம். அதே சமயம் நமது பொருளாதார வசதிக்கேற்றவாறு மின்சார வசதி செய்துகொள்ள வேண்டும்.
  தீவனம் மற்றும் இதர வசதிகள்
  பண்ணை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் பயிரிடுவதற்கேற்ற நிலமாக இருத்தல் அவசியம். அப்போதுதான் கால்நடைகளுக்கு புதிதான சத்துள்ள தீவனங்கள் கொடுக்க இயலும். மேலும் கொட்டகையில் தீவனம் சேமிக்கவென்று கிடங்கு இருக்க வேண்டும். அப்போதுதான் தீவனத்திற்கு ஆகும் செலவைக் குறைக்க இயலும்.
  பால் கறக்கும் இடமானது கொட்டகையின் மையத்தில் அமைந்திருக்க வேண்டும். அது எப்போது சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

  (ஆதாரம்: பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், AC & RI, Madurai.)

  கொட்டகைகளின் வகைகள்

  கால்நடைகளைப் பராமரிக்க கொட்டகை அமைத்தல் மிக அவசியம் இல்லாவிடில் அவை திறந்த வெளியில் சென்று தேவையற்ற வற்றையும் உண்டு. சூழ்நிலைமாற்றத்தாலும் அவதியுறும். எனவே கொட்டகைப் பராமரிப்பு இன்றியமையததாகிறது. நம் நாட்டில் பொதுவாக இரண்டு விதப் பராமரிப்பின் கீழ் வளர்க்கப்படுகின்றன. அவை
  1.திறந்த வெளி மேய்ச்சல் முறை
  2.தீவிர மற்றும் மிததீவிர முறை என மூன்று வகைகளாகும்.
  இது அந்தந்த இடங்களின் தட்பவெப்பநிலையையும் பணவசதியையும் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

  கொட்டகை அமைப்பு

  கொட்டகையின் சுற்றுச்சுவர் நீள, அகல, உயரம் முறையே 5” அளவு இருக்க வேண்டும். தீவனம் பெட்டு ஒரு கால்நடைக்கு 2லிருந்து 21/2 அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும். தேவையான அளவு குடி தண்ணீர் அளிக்க 10” அளவு அகலமான தண்ணீர்த் தொட்டியில் அமைக்க வேண்டும். மேலும் தண்ணீர் தொட்டி தீவனத் தொட்டிக்கு அருகே அதிக நீர் சேதாரம் ஆகாமலும் இருக்க வேண்டும். அதைத்தாண்டி ஒரு திறந்த நடைப்பாதை 40” x 35”. 5” சுற்றளவுடன் ஒரு கதவுடன் இருக்க வேண்டும். தீவனம் உட்கொள்ளும்போது கால்நடைகள் வடக்கு நோக்கியவாறு இருத்தல் வேண்டும். கோடையில் குளிர்காற்று வீசும்போது சுற்றுச்சுவர் மாடுகளை குளிரிலிருந்து பாதுகாக்குமாறு அமைந்திருக்க வேண்டும்.

  கன்றுகளுக்கான கொட்டகை

  பசுக்கொட்டகையின் ஒரு பக்கத்தில் சுற்றுச் சுவருடன் கூடிய 10″ x 15″ அளவுள்ள கொட்டகை கன்றுகளைக்கென தனியாக அமைக்க வேண்டும். தேவையான அளவு இடவசதி கன்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப இருக்க வேண்டும். இதையடுத்து சுற்றுச்சுவருடன் கூடிய 20″ x 10″ திறந்தவெளி இருக்க வேண்டும். இதில் கன்றுகள் சுதந்திரமாக உலவ விடுதல் நலம்.

  இதேபோன்று கன்று மற்றும் மாடுகளுக்கென 50″ x 50″ பரப்பளவுள்ள கொட்டகை தேவை. இதில் 20 மாடுகள் வரை வளர்க்கலாம். இதற்கு தேவையான பொருளாதார வசதி இல்லையெனில் நமது வசதிக்கேற்ப சாதாரண கட்சா (katcha) சுற்றுச் சுவர் முறையில் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டி சிமென்டினால் போடப்படுவதே சிறந்தது.

  மரபு வழி தானியக் களஞ்சியம்
  இந்த முறை தானியக்கடங்குகள் சற்று விலை உயரந்தது. மேலும் இதன் பயன்பாடு பரவலாகக் குறநை்து வருகிறது. எனினும் இம்முறையில் கால்நடைகள் மோசமான தட்பவெப்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளப் பயன்படுகிறது.
  ஒரு கால்நடைப் பண்ணையில் கீழ்க்காணும் கிடங்குகள் அவசியம்.

  •மாட்டுக் கொட்டகை
  •கன்று ஈனும் கொட்டகை
  •தனிக் கொட்டகை/நோய்ப் பராமரிப்புக் கொட்டகை
  •இளங்கன்று கொட்டகை
  •எருது கொட்டகை
  மேலும் பசுக்களின் பால் உற்பத்தித் திறன் வயது மற்றும் அவைகளின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி அவற்றைத் தனித்தனிக் கொட்டகைகள் அடைப்பது எளிதான பராமரிப்பிற்கு உதவுகிறது.
  மாட்டுக் கொட்டகை
  பால் தரும் பசுக்களைத் தனிக் கொட்டகையில் நன்கு பராமரிக்க வேண்டும். பசுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஒரே வரிசையிலும் எண்ணிக்கை 10ற்கும் மேற்பட்டதாக இருந்தால் இரண்டு வரிசையாகவும் அமைக்கலாம்.

  பொதுவாக ஒரு கொட்டகையில் 80லிருந்து 100க்குள் மட்டுமே பசுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். பால் பண்ணைகளில் மாடுகள் இரண்டு வரிசையாகக் கட்டப்படும்போது அவைகளின் முகங்கள் ஒன்றையொன்று பார்த்தவாறோ அல்லது (head to head) அல்லது பின் பாகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறோ (அருகருகில்) (tail tp tail) அமைக்கலாம்.

  முகப்புறம் அருகருகே உள்ள முறையின் பயன்கள்
  •பசுக்கள் இவ்வாறு அமைந்திருப்பதன் மூலம் சுற்றுப்புறத்தையும் தீவனமிடுவோரையும் காணமுடிகிறது
  •இந்த முறையில் பசுக்கள் எளிதாக உணரும்
  •சூரிய ஒளியானது அதன் வடிகால் பகுதியில் தேவையான அளவு விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது
  •பசுக்களுக்குத் தீவனம் அளித்தல் எளிது
  •குறுகிய கொட்டகைகளுக்கு இம்முறை சிறந்தது

  வால்புறம் அருகே உள்ள முறையின் சிறப்பம்சங்கள்

  சாதாரணமாக ஒரு பண்ணைக்கு வருடத்திற்கு 125லிருந்து 150 ஆட்சுலி தேவைப்படுகிறது. ஒரு ஆராய்ச்சியின் முடிவின்படி கறவை மாடுகளின் பராமரிப்பில் 40 சதவீத நேரம் அதன் முன் பாகத்திலும் 60% நேரம் பின் பகுதியிலும் செலவிடப்படுகிறது.
  எனவே இந்த முறையில் ஆட்களின் நேர விரயம் குறைக்கப்படுகின்றது.

  •பசுவை சுத்தப்படுத்தி, பால் கறப்பது இந்த முறையில் எளிதாகின்றது
  •மாடுகளிடையே நோய் பரவுவது இம்முறையில் குறைவாக இருக்கும்
  •வெளிப்பக்கத்திலிருந்து தூய காற்று கிடைக்கிறது.
  •ஏதேனும் நோய் பரவினாலோ அல்லது பசுக்களில் மாற்றம் தெரிந்தாலோ எளிதில் கண்டு பராமரிக்க இலகுவான முறை
  தரைப்பகுதி

  கொட்டகையின் உட்பக்கத் தரையானது வழுக்கக் கூடியதாக இல்லாமல் அதேநேரம் ஈரத்தை உறிஞ்சாமல் எளிதில் உலரக் கூடியதாக இருத்தல் வேண்டும். நீண்ட திண்டு சிமென்ட் கான்கிரீட் தளங்கள் மிகவும் ஏற்றவை.

  சுவர்கள் மற்றும் கூரைகள்

  கொட்டகையின் உட்புரச் சுவர் சீராக சிமென்ட் கொண்டு பூசப்பட்டதாக இருக்க வேண்டும். அது வெளிப்புற தூசிகளையோ அல்லது ஈரப்பதத்தையோ உள்ளே அனுமதிக்காதவாறு இருக்க வேண்டும். 4 லிருந்து 5 அடி வரை உயரமுள்ள குட்டையான சுற்றுச்சுவரும் கூரையானது இரும்புத் துண்களால் தாங்கப்பெருமாறு அமைத்தால் தூண்களின் இடைவெளியில் காற்று தாங்கப்பெருமாறு ஏற்றதாக இருக்கும்.

  கூரை

  கூரை ஓடுகள் அல்லது ஏஸ்பஸ்டாஸ் (asbestos) கொண்டு வேயப்படுதல் நலம். அல்லது அலுமினியம் பூசப்பட்ட இரும்புத் தகரங்களையும் பயன்படுத்தலாம். வெறும் இரும்புத் தகரங்களை விட இது சூரிய ஒளியை எதிரொளித்து கொட்டகையின் உள்ளே சீரான வெப்பத்தைத் தருகிறது. 8 அடி உயரமும் பக்கங்கள் 15 அடி அளவுள்ள கொட்டகையில் காற்று போதுமான அளவு கிடைக்கும். ஒரு கறவை மாட்டிற்கு 800 கியூபிக் அடி அளவு காற்றானது தேவைப்படுகிறது.

  தீவனத்தொட்டி

  கான்கிரீட் சிமென்ட் தளத்தாலான வெளியேற்றும் அமைப்புடன் கூடிய தீவனத் தொட்டிக்குள் பராமரிப்புக்கு ஏற்றவையாக இருக்கும். சின்ன தொட்டியாக இருந்தால் 1்-4் உயரமும் பெரியதெனில் 6்-9் உயரமும் போதுமானது. பசுவைப் பொறுத்தவரை சின்ன தொட்டிகளே (low front manger) போதுமானது என்றாலும் பெரியதாக இருந்தால் தீவனம் அதிகஅளவு வீணாகாமல் தடுக்கலாம்.

  கழிவு நீர் வடிகால்

  2” அகலமுள்ள சாணி, மற்றும் சிறுநீர் எளிதில் வந்து விழுமாறு தேவையான இறக்கத்துடன் இருக்க வேண்டும். அதேசமயம் மாட்டின் பின் சற்று இடைவெளியுடன் எளிதாக கழிவுகள் வெளியேறுமாறு அமைத்தல் அவசியம்.

  கதவுகள்

  கதவுகள் திறக்கும்போது சுவர் வரை விரிந்தி திறக்குமாறு இருக்க வேண்டும். மாடுகள் ஒரு வரிசைமுறையில் கட்டப்பட்டிருப்பின் கதவு அளவு 5” அகலம் மற்றும் 7” உயரம் கொண்டதாகவும் அதுவே இரு வரிசையெனில் அகலம் 8” ற்குக் குறைவாக இருக்க கூடாது.

  கன்றுஈனும் இடம்

  பால் கறக்கும் இடத்தில் கன்று ஈன அனுமதித்தல் மிகவும் தவறு. கன்று ஈனுவதற்கென்று சுற்றுச் சுவருடன் கூடிய நல்ல காற்றோட்டமான படுக்கை வசதியுடன் கூடிய தனியறை இருப்பது அவசியம். அது 100 லிருந்து 150 சதுர அடி இருக்க வேண்டும்.
  நோய் பராமரிப்புக் கொட்டகை
  ஏதேனும் நோய் தாக்கினால் தாக்கப்பட்ட மாடுகளை தனித்தனிக் கொட்டகையில் மற்ற மாடுகளிலிருந்து பிரித்து வைக்க வேண்டும். அதற்கென 150 சதுர அடிகொண்ட கொட்டில்கள் அமைத்தல் நலம். இக்கொட்டில்கள் மாட்டுக் கொட்டகையிலிருந்து சிறிது தொலைவில் அமைத்தல் வேண்டும். ஒவ்வொரு கொட்டிலும் சரியான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும்.

  இளங்கன்றுக் கொட்டில்கள்

  இளங்கன்றுகளுக்கு நல்ல சுத்தமான காற்று மிக அவசியம். எனவே அவற்றை மாட்டுக் கொட்டகையில் வளர்க்காமல் தனி கொட்டிலில் நல்ல வெளிச்சமும் சுகாதாரமான காற்றும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். மேலும் சிறந்த பாரமரிப்பிற்கு கன்றுகளை
  •பிறந்த இளங்கன்றுகள்
  •காளைக்கன்றுகள்
  •கிடாரி (பெண்) கன்றுகள்
  என வகைப்படுத்தி வேறுவேறு கொட்டிலில் வளர்த்தல் நலம். கன்றுக் கொட்டில் தாய் மாடுகளின் கொட்டகை அருகே இருக்க வேண்டும்.
  ஒவ்வொரு கன்றுக் கொட்டிலின் அருகே ஒரு திறந்த புல்வெளி இருத்தல் நலம். குறைந்தது 100 ச.அடியாவது 10 கன்றுகளுக்குத் தேவை. ஒரு வயதிற்குட்பட்ட கன்றுகளை 3 பிரிவாகப் பிரித்து இடங்களை ஒதுக்கலாம்.
  •20-25 ச.அடி மூன்று மாதம் வயதுள்ள கன்றுக
  ளுக்கு,
  •25-30 ச.அடி 3 லிருந்து 6 மாத வயதுள்ள கன்றுக
  ளுக்கு,
  •30-40 ச.அடி 6 லிருந்து 12 மாத வயதுள்ள கன்றுக
  ளுக்கு,
  •40-45 ச.அடி ஒரு வருடத்திற்குமேற்பட்ட கன்றுகளுக்கு
  இவ்வாறு பிரித்து கன்றுகளுக்கு புல்வெளியில் இடமளிப்பதன் மூலம் கன்றுகள் சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வளரும். புல்வெளியில் அங்கங்கே தண்ணீர் தொட்டிகள் அமைத்தால் சுத்தமான நீரையும் கன்றுகளுக்கு அளிக்க முடியும்.

  எருதுகளின் கொட்டில்கள்

  எருதுக் கொட்டில் அமைக்கும்போது கவனிக்க வேண்டியது கையாள்வதற்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். கரடுமுரடான தரையில் எருதுகளின் கால்கள் நகங்கள் கீரி காயம் உண்டாவதுடன் அதன் இனவிருத்தத் திறனும் குறைந்துவிடும். எனவே கான்கிரீட் சிமென்ட் தளத்தாலான சமமாண தரை அவசியம். மேலும் 15் / 10் பரிமானம் கொண்ட நல்ல காற்று மற்றும் வெளிச்சத்துடன் கூடிய அறையில் தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகள் இருக்க வேண்டும்.

  முடிந்தவரை எருதுக்கு தீவனம் வெளியில் இருந்து வழங்குமாறு கொட்டில் அமைக்கவேண்டும். சுற்றுச் சுவரானது எருது தாண்ட முடியாத அளவு 2” அளவும் உள்ளே எருது சுதந்திரமாக உலவுமாறு இருக்க வேண்டும். அதேசமயம் எருது மற்ற கால்நடைகளைப் பார்க்க இயலுமாறு அமைத்தல் அதன் தனிமையைக் குறைக்க உதவும். இனவிருத்தி செய்யும் இடத்திற்க்குப் பக்கத்தில் அமைத்தல் சிறந்தது (service crate).
  (தகவல்: பால் பிரிஸ்லி ராஜ்குமார், வேளாண்கல்லூரி, மதுரை).

  கொட்டகையைச் சுத்தம் செய்தல்

  கால்நடைப் பண்ணை தினசரி சுத்தம் செய்வது பல நுண்ணுயிரிகள் மூலம் பரவும் தொற்று நோயைத் தடுக்க உதவும். சுகாதாரமான பராமரிப்பிற்கு தினசரி நல்ல தண்ணீர் விட்டு கொட்டகையைக் கழுவுதல், சாணியை சுத்தப்படுத்துதல் முறையான வடிகால் வசதி அமைத்தல் போன்றவை அவசியம். இது வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து காக்க உதவும்.

  பால்பண்ணையின் சுகாதாரம்

  பால் கறக்கும் இடம் எப்போதும் சுத்தமாக இருத்தல் அவசியம். இல்லையெனில் பசுக்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு அவதியுறும். மேலும் பாதிக்கப்பட்ட பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் நீண்ட நேரம் பயன்படுத்த உதவாது. அதை அருந்தும் மனிதர்களும் பாதிக்கப்படலாம். எனவே ஈக்கள், கொசு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாத்து வைத்தல் அவசியம். இல்லாவிடில் பேபஸியோஸிஸ், தெய்லிரோஸிஸ் போன்ற நோய்கள் ஏற்படும்.

  சுகாதார ஊக்கிகள் / தொற்று நீக்குகள்

  சூரிய ஒளி ஒரு சிறந்த தொற்று நீக்கி. தொற்று நீக்குதல் என்பது நோய் பரப்பும் கிருமிகளை அழித்தலே ஆகும். பிளீச்சிங் பவுடர், வாஷிங் சோடா, (washing soda), அயோடின் மற்றும் அயோடோப்பர், சோடியம் கார்பனேட், கால்சியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் ஆக்சைடு மற்றும் பீனால் போன்றவை தொற்று நீக்கிகளாகச் செயல் படுகின்றன.

  பிளீச்சிங் பவுடர்

  இது கால்சியம் ஹைபோ குளோரை: எனவும் அழைக்கப்படுகிறது. இதில் 39% சிறந்த தொற்று நீக்கியான குளோரின் உள்ளது.

  அயோடின் மற்றும் அயோடோப்பர்

  இதில் வினையூக்கியான அயோடின் 1-2% உள்ளது.

  சோடியம் கார்பனேட்: சலவை சோடா

  இதன் 4% சூடான கலவை சோடாக் கரைசலானது வைரஸ் மற்றும் ஒரு சில பாக்டீரியாக்களை அழிக்க வல்லது

  கால்சியம் கலவைகள்

  இந்த கால்சியம் கலவைகள் கொண்டு கழுவும் பொழுது தரை, சுவர் மற்றும் நீர்த்தொட்டிகளை பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கலாம்.

  பீனால்

  பீனால் (அ) கார்பாலிக் அமிலம் பூச்சைக் கொல்லியாக செயல்படுகிறது.
  பூச்சிக்கொல்லிகள்:

  தொழுவங்களில் உணி பேண் போன்ற ஒட்டுண்ணிப் பூச்சிகள் கால்நடைகளின் வளர்ச்சியைத் தடைப்படுத்தும். இவை மண், தொட்டிகள் மற்றும் சுவர்கள் மூலமாகவும் எல்லா இடங்களுக்கும் பரவும். இவற்றைக் கட்டுப் படுத்த சிறிது பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம். நீர்ம நிலையில் உள்ள பூச்சிக்கொல்லிகளை கைவிசைத் தெளிப்பான் மூலமோ பஞ்சு அல்லது எஏதேனும் ஃபிரஷ் பயன்படுத்தலாம். இப் பூச்சி மருந்துகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை. ஆதலால் தண்ணீர் தீவனங்களில் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை:

  •சானங்களை நீக்கி தொழுவத்தை சுத்தப்படுத்திவிட வேண்டும்.
  •தொழுவத்தை சுத்தப்படுத்த சுத்தமான நீரை உபயோகப்படுத்த வேண்டும். தீவனத் தொட்டிகளிலோ சேமிப்புக் கொட்டிலிலோ எந்த தீவனமும் இல்லாமல் மருந்து தெளிக்கும் முன்பு சுத்தமாக வைக்க வேண்டும்
  •நீர்த் தொட்டிகளில் பாசான் (Algae) வளரும் அளவு வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்தல் வேண்டும்.
  •சரியான அளவு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தவும்
  •பால் கறப்பதற்கு முன்பு மருந்துகளைத் தெளித்தல் கூடாது. ஏனெனில் பால் காற்றில் உள்ள விஷத்தன்மையை எளிதில் எடுத்துக் கொள்ளும். எனவே பால் கறந்து முடித்தபின் மருந்து தெளிக்க வேண்டும்.
  வழிமுறைகள்:
  •முதலில் சானம், சிறுநீர் போன்றவற்றை இரும்புச்சட்ி வடிகால் மூலம் வெளியேற்றிவிட வேண்டும்
  •அதேபோல் தழுவனத் தொட்டி சேமிப்புக் கிடங்களில் இருக்கும் தீவனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்
  •நீர் தொட்டியை ஃபிரஷ் வைத்துச் சுரண்டி சுத்தப்படுத்த வேண்டும்
  •நீர்த் தொட்டிகளுக்கு வாரம் ஒருமுறை சுண்ணாம்புப் பூச்சு பூச வேண்டும்
  •மற்ற தரைகளையும் இதேபோல் சுத்தப் படுத்தி நீர்தெளிக்க வேண்டும்
  •சுவர்களில் படிந்துள்ள சானி, அழுக்குகளை நீக்குதல் வேண்டும்
  •பினால் 2%, சலவை சோடா 4% (கரைசல்) மற்றும் பிளீச்சிங் பவுடர் 30% அளவுள்ள கரைசலைத் தெளிக்க வேண்டும்
  •சூரியவெளிச்சம் நன்கு தெழுவத்தில் விழுமாறு செய்ய வேண்டும்
  •பூச்சிக்கொல்லிகளை சீரான இடைவெளியில் (குறிப்பாக மழைக் காலங்களில்) தெளிக்க வேண்டும்
  •அவ்வப்போது பூச்சிக்கொல்லி கலந்த சுண்ணாம்புக் கரைசலை சுவர்களின் விரிசல் மற்றும் இடுக்குகளில் பூசினால் அங்குள்ள உணி, பேண், போன்றவை நீங்கும்.
  பிற தடுப்பு முறைகள்:

  கால்நடைத் தொழுவத்தில் கன்றுகள் பால் கறக்கும் கொட்டில், மாடுகள், காளை மாடுகள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அமைப்புகள் இருக்க வேண்டும். தரை வழுக்குமளவு வழவழப்பாக இல்லாமல் சிமென்டால் பூசப்பட்டு சுத்தம் செய்ய எளிதாக இருக்க வேண்டும். மேலும் நீர், தீவனத்தொட்டிகள், சேமிப்புக் கிடங்குகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படவேண்டும். சிறுநீர் வடிகால்கள் சிறிதளவு குழியாகவும் அதில் ஓடுகள் வைத்து தேவையான போது அகற்றிக்கொள்ளுமாறு இருத்தல் நலம். தொழுவத்தில் ஆங்காங்கே நிழல்தரு மரங்களுடன் எப்போதும் சுத்தமாகக் காட்சியளிக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s