கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்: கால்நடைகளுக்கு ஓர் சத்தான தீவனம்!

திரூர் நெல் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் பயிரிடப்பட்டுள்ள கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்.

விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு சத்தான தீவனமாகவும், கால்நடை வளர்ப்பில் உபத் தொழிலாகவும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் விளங்குகிறது.

திரூர் நெல் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் பயிரிடப்பட்டுள்ள கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்

திரூர் நெல் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் பயிரிடப்பட்டுள்ள கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்

தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு என்பது உழவுத் தொழிலின் உபத் தொழிலாக உள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளம், கம்பு மற்றும் மக்காச்சோளத்தின் தட்டை, வேர்க்கடலைக் செடி ஆகியவை முக்கிய உணவாக வழங்கப்படுகிறது. ஆனால் கால்நடைகள் சத்தாகவும், உற்பத்தித் திறன் பெருக்க வேண்டும் என்றால் சத்தான தீவனம் அளிக்க வேண்டும். அந்த வகையில் கால்நடைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்.

 • தீவனப்புல் வகையில் குறைந்த இடத்தில் குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை கம்பு நேப்பியர் புல்லுக்கு உண்டு.
 • இது கம்பு மற்றும் நேப்பியர் ஆகிய 2 புல் இனங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது.
 • கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லின் சிறப்புகள்: அதிக தூர்கள் மற்றும் சாயத்தன்மையுடன் இருத்தல், மிக மிருதுவான இனிப்பான சாறு நிறைந்த தண்டுகள், அதிக இலை தண்டு விகிதம், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அற்றது. ஆண்டுக்கு ஏழு மறுதாம்பு பயிர் அறுவடைக்கு ஏற்றது.

இது குறித்து திரூர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.தேவநாதன் கூறியது:

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் என்பது கால்நடைகளுக்கு சிறந்த சத்தான தீவனமாகும். இங்கு சில ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட கம்பு நேப்பியர் புல்லை குறைந்த செலவில் உப பயிராக விவசாயிகள் இட்டு பயனடையலாம்.

 • நல்ல நீர்ப்பாசன வசதி இருந்தால் இப்புல்லை ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம்.
 • நன்கு உழுது தயார் செய்த நிலத்தில் 50 செ.மீ. இடைவெளியில் பார் அமைத்து, பார்களின் சரிவில் 50 செ.மீ. இடைவெளியில் ஒரு கரணை என நடவு செய்ய வேண்டும்.
 • இதுபோல் நடவு செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் விதைக் கரணைகள் தேவைப்படும்.
 • வயலில் கரணைகளை நடவு செய்யும் முன் 1 ஹெக்டேருக்கு 110 கிலோ யூரியா, 310 கிலோ சூப்பர் மற்றும் 68 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை அடி உரமாக இடவேண்டும்.
 • இதே அளவு உரங்களை ஆண்டுக்கு ஒருமுறை இட்டு வந்தால் நீண்ட நாள்களுக்கு அதிக மகசூல் பெறலாம் என்றார்.

உதவி பேராசிரியர் நிர்மலா கூறும்போது,

 • இத்தீவனப்புல்லை தரையில் இருந்து 15 முதல் 20 செ.மீ. உயரத்தில் வெட்டி கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
 • நடவு செய்து 70 முதல் 80 நாள்களுக்குள் அறுவடை செய்யலாம். மற்ற அறுவடைகளை தொடர்ச்சியாக 45 நாள்கள் இடைவெளியில் செய்யலாம்.
 • மேற்கண்ட முறையில் நன்கு பராமரிக்கப்பட்ட பயிரில் ஒரு ஹெக்டேருக்கு ஒரு வருடத்தில் 300 முதல் 350 டன் வரை அறுவடை செய்ய முடியும்.
 • தரமான சுவையான பசுந்தீவனமாக கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் விளங்குவதால் தற்போது அதிக தேவை ஏற்பட்டுள்ளது

தினமணி செய்தி : 11 Aug 2011 12:26:39 AM IST

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s