ஜீரோ பட்ஜெட்டில் டீலக்ஸ் பொன்னி

ஜீவாமிர்தக் கரைசல் மூலமாக மகசூலை அள்ளியிருக்கும் விவசாயி ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் திரு லோகநாதன்

அவரது குறிப்புகள்
ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் செய்ய ஈரோடு சுபாஸ்பாலக்கரின் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இவர், அதற்குப் பிறகு அந்த தொழில் நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி கரும்பு வாழை நெல் மஞ்சள் என்று பலவகை பயிர்களையும் விளைவித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்தக் கட்டுரை டீலக்ஸ் பொன்னியைப் பற்றியது. (சொர்ண மசூரி)

நுட்பம் – நெல் – டீலக்ஸ் பொன்னி
வயது 120 நாட்கள்.

நடவு
வழக்கமான முறையில் நடவு வயலைத் தயாரித்துக் கொள்ளவேண்டும். அதற்கு முன்பாக விதை நெல்லை பீஜாமிர்தத்தில் ஊறவைத்து விதை நேர்த்தி செய்யவேண்டும். சாதாரண முறை நடவு என்றால் ஏக்கருக்கு 30 கிலோவும், ஒற்றை நாற்று நடவு முறை என்றால் 3 கிலோவும் விதைகள் தேவைப்படும். இவர் சாதாரண முறையில் நடவு செய்திருக்கிறார்.

நாற்றங்கால் தயாரித்து அதில் விதைகளைத் தூவவேண்டும். பாசன நீருடன் வாரமட் ஒரு முறை ஏக்கருக்கு 150 லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்கவேண்டும். 20 முதல் 25ஆம் நாளுக்குள் நாற்றுகளைப் பறித்து வயலில் நடவு செய்துவிடவேண்டும். வரப்புகளில் தட்டைப் பயிறு நடவு செய்தால் நெற்பயிரைத் தாக்கவரும் பூச்சிகள் அங்கே கவர்ந்திழுக்கப்படும். அத்தோடு தட்டைப் பயிறு விற்பனை மூலமாகவும் ஒரு தொகை கிடைக்கும்.

பாசனம்

நாற்றுக்களை நடவு செய்த பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தக் கரைசலைத் தெளிக்க வேண்டும். ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீருடன் பாய்ச்சாமல் கைத்தெளிப்பான் மூலம் இலை வழி தெளிப்பாகக் கொடுக்க வேண்டும். இது பாசனத்தை விட கூடுதல் பலனைக் கொடுக்கும். இப்படித் தெளித்தால் ஒவ்வொரு முறையும் ஏக்கருக்கு 50 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலுடன் 150 லிட்டர் தண்ணீர் கலந்து இலை வழி தெளிப்பாகத் தெளிக்கவேண்டும். ஜீவாமிர்தம் பயிர்களின் மேல் பட்டு பிறகு வயல் நீரில் கலந்து இரண்டு வகையிலும் ஊட்டம் அளிக்கும். ஜீவாமிர்தக் கரைசல் பட்ட பயிர்களைப் புழு, பூச்சிகள் அண்டாது. எனவே பூச்சிக்கொல்லி தெளிக்கவேண்டிய அவசியம் இருக்காது. அது மட்டும் அல்ல. இயற்கை இடுபொருட்களான பூச்சி விரட்டிகளையும் தெளிக்கத் தேவையில்லை. ஆக ஜீவாமிர்தம் ஒன்று போதும், மொத்த சாகுபடிக்கும்!

களையும் அதிகம் வராது. களை வந்தால் அப்படியே பறித்து வயலில் புதைத்துவிடவேண்டும்.

அறுவடை

நடவில் இருந்து 110 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகிவிடும். அவரது அனுபவப்படி ஒரு ஏக்கரில் 9 பொதி (ஒரு பொதி என்பது 65 கிலோ மூட்டைகள் நான்கு) எடுத்திருக்கிறார்.

சாண உற்பத்திக்கு ஒரு நாட்டு மாடும், அதை வயலுக்குச் சுமக்க ஒரு குதிரையும் வைத்து மனநிறைவுடன் விவசாயம் பார்த்து வருகிறார்.

வாழ்த்துக்கள்!

விபரம் – பசுமை விகடன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s