ஜப்பானிய காடை வளர்ப்பு

வீட்டில் ஒரளவு இட வசதி இருந்து அதன் மூலம் வருமானம் ஈட்ட நினைக்கும் பெண்கள், இளைஞர்கள் ஜப்பான் காடைகளை வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் போதிய அளவு வருமானம் ஈட்ட முடியும் என திரூர் வேளாண் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி தெரிவித்தார்.

காடை வளர்ப்பு குறித்து அவர் கூறியது: காடைகள் பொதுவாக இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது. எந்த பறவைகளை வீடுகளில் வளர்த்தாலும் அதனைப் பார்த்து ரசிப்பதன் மூலம் பலருக்கு மன அழுத்தம் குறையும்.

தமிழகத்தில் அதிகளவில் வளர்க்கப்படுவது ஜப்பானிய காடைகளே. இவை 5 முதல் 6 வாரத்துக்குள் முழு வளர்ச்சி அடைந்து விற்பனைக்கு தயாராகின்றன. ஜப்பானிய காடைகளுக்கு 6 வார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்வதால் செலவும் குறைவு.

காடைகளை இரும்பு கூண்டுகள் அல்லது தரையில் தனித் தனி அறைகள் போல் தடுப்பு அமைத்தும் வளர்க்க முடியும்.

காடை இறைச்சியில் அதிகப்புரதமும் (20.5 சதவீதமும்) குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் (5.8 சதவீதம்) இருப்பதால் அதிகளவு மக்கள் காடை இறைச்சியை உட்கொள்கின்றனர்.

காடைகள் 7 வாரத்திலேயே முட்டை இடுவதால் அதன் மூலமும் அதிகளவு உற்பத்தி பெருகும். ஒரு காடை பராமரிப்புச் செலவு 7.50 ரூபாய் வரை ஆகும். ஒரு காடை 10 ரூபாய் வரை விற்கப்படுவதால் காடை வளர்ப்பு மூலம் போதிய அளவு வருமானம் ஈட்டுவதுடன் வீட்டினுள் இயற்கைச் சூழலும் நிலையாக இருக்கும் என்றார்.

காடை வளர்ப்பு குறித்து மேலும் விளக்கம் பெற திரூர் வேளாண் நெல் ஆராய்சி நிலையத்தை நேரிலும், 27620705 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம் என்று நிர்மலாதேவி கூறினார்.

தினமணி தகவல் – நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர், வேளாண் நெல் ஆராய்ச்சி நிலையம், திருவள்ளூர்

11 thoughts on “ஜப்பானிய காடை வளர்ப்பு

 1. Pingback: ஜப்பான் காடைக்குத் தடை – மத்திய அரசின் அடுத்த அதிரடி « வேளாண் அரங்கம்

 2. காடை குஞ்சு தேவை என்றல் என்னை தொடர்பு கொள்ள 9944324510 மேலும் ஆஸ்திரேலிய வாத்து (Australian goose) நிறைய ஜோடிகள் வைத்திருக்கும் நபர் எனக்கு தெரியப்படுத்துங்கள். எங்களிடம் கோழி குஞ்சு பொரிப்பகம் உள்ளது .இதில் எல்லா
  முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்கலாம். நாட்டு கோழி, கிரிராஜா, வாத்து,காடை, வான்கோழி,கினி கோழி முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்கலாம். நீங்கள் எங்களிடம் முட்டைகள் கொடுத்து பொரிக்கலாம்

 3. என்னுடைய பெயரை சரவணன் எனது ஊர் நாமக்கல் .
  எங்களிடம் காடை .காடை குஞ்சுகள்
  வாத்து. வாத்து குஞ்சு
  நாட்டு கோழி . நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
  குஞ்சு பொரிக்கும் இயந்திரம் 100 முட்டை இருந்து 10000 முட்டை வரை குஞ்சு பொரிக்கும் இயந்திரம் செய்து தரப்படும்
  contact number 78 71 67 13 12
  second number 73 73 93 83 03

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s