வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் டிச.15 -க்குள் சம்பா நெல்லுக்கு காப்பீடு செய்யலாம்

தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிகழாண்டுக்கான சம்பா நெல் பயிருக்கு டிச. 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம். இதுகுறித்து  தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவன மண்டல மேலாளர் சி. அன்பரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“”நிகழாண்டுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு கடன் பெறாத விவசாயிகள் சேர கடைசி தேதி 15.12.2010. ஆகும். எனினும், வெள்ளம் வறட்சி என முன்கூட்டியே தெரிந்துகொண்டு முன்னதாகவே பிரிமியம் செலுத்தினால் அது நிராகரிக்கப்படும்.

எனவே, விவசாயிகள் காலம் தாழ்த்தாமல் இத்திட்டத்தில் சேர முன்வர வேண்டும். சம்பா நெல் பயிரில் ஓர் ஏக்கருக்கு சாதாரண பிரிமியத் தொகை 55 சதவிகிதம் மானியம் போக சிறு,குறு விவசாயிகளுக்கு ரூ.117. ஏனைய விவசாயிகளுக்கு ரூ.130. காப்பீட்டின் மதிப்பு ரூ.13,024.

எனவே, பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்கள் விருப்பத்தின்பேரில் பின்வரும் கூடுதல் பிரிமியத் தொகையைச் செலுத்தினால் அதிக பலனைப் பெறலாம். அதில், ஓர் ஏக்கருக்கு கூடுதலாக

  • சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை ரூ.456,
  • ஏனைய விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை ரூ.507.
  • காப்பீட்டின் மதிப்பு ரூ.11,396.

ஆகவே, சாதாரண மற்றும் கூடுதல் மதிப்பு ஓர்  ஏக்கருக்கு ரூ.24,420.

இந்த இரண்டுக்கும் சேர்த்து சிறு,குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் ஓர் ஏக்கருக்கு ரூ.574.

ஏனைய விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ. 637.

காப்பீட்டுத் தொகையைக் கடைசி தேதிக்கு முன்னதாகச் செலுத்த வேண்டும். வறட்சி, வெள்ளம் குறித்து முன்னதாகவே தெரிந்தால் குறிப்பிட்ட தேதியில் மாற்றம் செய்யப்படும். பயிர்களுக்கு மகசூல் அடிப்படையில் இழப்பீடு ஏதும் இருந்தால் திட்டங்களுக்கு உள்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு,

தேசிய வேளாண் காப்பீட்டுக் கழகம்,(மத்திய அரசு நிறுவனம்),

மண்டல அலுவலகம்,

323 முதல் தளம், ஆந்திரா இன்சூரன்ஸ் கட்டடம்,

தம்புச்செட்டி தெரு,

சென்னை – 600 001

என்ற முகவரிக்கோ 044 – 43403400 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்புகொள்ளலாம்.”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s