செஞ்சி வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நாற்று நடும் இயந்திரம்

நாற்று நடும் இயந்திரத்தின் மூலம் அதிக மகசூலை பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு கடந்த மாதம் செயல் முறை விளக்கமளிக்கப்பட்டது. செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

செஞ்சி பகுதி விவசாயிகள் பயன்படும் வகையில் செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரூ 18 லட்சம் மதிப்புள்ள நாற்று இயந்திரத்தை வாங்கியுள்ளது. இது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த வங்கி செயலர் என்.ரவிச்சந்திரன் கூறியது:

  • இந்த இயந்திரத்தின் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூலை பெற முடியும்.
  • சாதாரணமாக நாற்று நடுவதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ 3 ஆயிரம் முதல் ரூ 4 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் இயந்திரத்தின் மூலம் நாற்று நடுவதால் ஒரு ஏக்கருக்கு ரூ 1300 மட்டுமே செலவாகும். மேலும் ஒரே மணி நேரத்தில் வேலை முடிந்து விடும். இதனால் பணம் மற்றும் கால நேரம் மிச்சமாகிறது.
  • ஒரு ஏக்கரில் நெல் பயிர் வைக்க சாதாரண முறையில் 30 கிலோ நெல் விதைகள் தேவைப்படும். ஆனால் நவீன முறையில் ஒரு ஏக்கரில் 19 கிலோ விதை நெல் போதுமானது.
  • மேலும் இந்த முறையில் நெல் விதைகளை தரம் பிரித்து விதைக்க வேண்டும். நெல் விதைகளை உப்புக்கரைசலில் கரைத்தால் தரமான விதைகள் தண்ணீருக்கு அடியில் நிற்கும். தரமற்ற விதைகள் நீரில் மிதக்கும். அவற்றை அப்புறப்படுத்தி விட்டு தரமான விதைகளை மட்டுமே விதைக்க வேண்டும்.
  • மேலும் இயந்திரத்தின் மூலம் நடப்படும் நாற்று இட்டும், விட்டும் நேராகவும், சீராகவும் காணப்படுவதால் கதிர் அதிக அளவில் கொத்து பிடித்து அதிக மகசூலை தரும். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெல் விளைச்சலில் அதிக பயன் அடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s