புதிய ரக நெல் விதை TNAU

த.வே.ப.க. கோ.50:

சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த நெல் ரகம் 130-135 நாட்களில் எக்டருக்கு 6338 கிலோ கொடுக்கவல்லது. இது ஏ.டி.டீ.46 ரகத்தைவிட 10.11 சதவீதம் அதிக மகசூலை தரும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 10662 கிலோ கொடுக்கிறது.

உருவாக்கம்: கோ.43/ஏடிடீ 38 ரகங்களை கலப்பினம் செய்து தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ரகம். பருவம்: பின்சம்பா / தாளடிக்கு ஏற்றது. பயிரிட

உகந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் அனைத்து நெல் விளையும் மாவட்டங்கள்.

சிறப்பியல்புகள்: மத்திய சன்ன அரிசி, நல்ல அரவைத்திறன்; மித அமைலோஸ் மாவுப்பொருள் உடையதால் சமைப்பதற்கும் இட்லி தயாரிப்பதற்கும் ஏற்றது. குலைநோய், இலை உறை அழுகல், பழுப்பு புள்ளி நோய், பாக்டீரியா இலைக்கருகல், துங்ரோ ஆகிய நோய்களுக்கு மிதமான எதிர்ப்புசக்தி கொண்டது.

த.வே.ப.க. நெல் டி.ஆர்.ஒய்.3:

இந்த புதிய ரகம் சமீபத்தில் த.வே.ப.கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. 135 நாட்களில் எக்டருக்கு மகசூலாக 5833 கிலோ கொடுக்கவல்லது. இது ஆடுதுறை 46 ரகத்தைவிட 10.8 சதம் கூடுதல் மகசூலாகும். சி.ஆர்.1009, ஏ.எஸ்டி.16 ஐ விட 22 மற்றும் 13 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 10,966 கிலோ கொடுக்கிறது.

உருவாக்கம்: ஆடுதுறை43/சீரக சம்பா ரகங்களின் இனக்கலப்பு தேர்வாகும்.

பருவம்: சம்பா/ பின்சம்பா / தாளடி.

பயிரிட உகந்த மாவட்டங்கள்: திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம்.

சிறப்பியல்புகள்: இட்லி தயாரிப்பதற்கு ஏற்றது. உவர் நிலங்களிலும் சாகுபடிக்கு ஏற்றது. மத்திய பருமன் அரிசி, அதிக அரவைத்திறன் (71.3 சதம்); அதிக முழு அரிசி காணும் திறன் (66.0 சதம்); அதிக அவல் காணும் திறன் (82.2 சதம்); இலை சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான், புகையானுக்கு எதிர்ப்புத்திறன், குலைநோய், இலை பழுப்பு புள்ளி, இலை உறை அழுகல், இலை உறை கருகல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.

மேலும் விபரங்களுக்கும், விதை கிடைப்பதற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: இயக்குனர், ஆராய்ச்சி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.

தினமலர் தகவல்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s