சலுகைகளை எதிர்நோக்கும் டீசல் என்ஜின் விவசாயிகள்!

இலவச மின்சாரம், பழைய மோட்டாருக்கு பதிலாக புதிய மின் மோட்டார் என்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்தச் சலுகைகளும் இல்லாமல் டீசல் என்ஜினை பயன்படுத்தும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் பெருகி வருகின்றன. இந்நிலையில் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு விற்றுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவருகின்றனர். பாரம்பரியமான விவசாயத் தொழிலை விடமுடியாமலும், விட மனமில்லாலும் பல விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர்.
  • மாவட்ட நிர்வாக கணக்கின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,45,966 ஹெக்டேரில் நெல் விவசாயமும், 7,586 ஹெக்டேரில் கரும்பு விவசாயமும், 28,766 ஹெக்டேரில் வேர்கடலை விவசாயமும் நடைபெறுகிறது. இதில் மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே மின்மோட்டார் வைத்திருந்த விவசாயிகளும் லாபம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து டீசல் என்ஜின் வைத்திருந்த பல விவசாயிகள் ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி புதிய மின் இணைப்புகளை பெற்றனர். இப்போது மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மோட்டாரும் வழங்கப்பட உள்ளது.
  • ஆனால் ரூ. 50 ஆயிரம் செலுத்த முடியாமல் இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்துவிட்டு இன்னும் ஏழை விவசாயிகள் ஊருக்கு ஒன்றிரண்டு பேர் காத்துக் கிடக்கின்றனர். இவர்கள் டீசல் என்ஜினை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
  • அடிக்கடி டீசல் விலை உயரும்போது இந்த விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கெனவே விவசாயத்தில் லாபகரமான சூழல் இல்லாத நிலை உள்ளது. இந் நிலையில் டீசலை என்ஜினை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு இன்னும் கூடுதல் ஆகிறது.
  • மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளைப் போல் டீசல் என்ஜின் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் அரசு உதவ வேண்டியது அவசியம். இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். அல்லது உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படுவதுபோல் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்கின்றனர் இவர்கள்.
  • இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் த.தமிழினியனிடம் கேட்டபோது அவர் கூறியது: டீசல் என்ஜின் வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகளை டீசல் விலையேற்றம் கடுமையாக பாதித்துள்ளது. அவர்களுக்கு ரேஷன் கார்டு போல் ஒரு அட்டை வழங்கி எவ்வளவு நிலம் வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்.
  • இப்போது மின்சாரத் தட்டுப்பாடு உள்ளது. இதுபோன்ற டீசல் என்ஜினை வைத்துள்ள ஏழை விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கக் கூடிய மின் மோட்டார்களை சாத்தியமுள்ள இடத்தில் வழங்க அரசு முன்வர வேண்டும். இதனால் மின்சாரம் இல்லாத நேரத்திலும் மோட்டாரை இயக்க முடியும் என்றார்.

செய்தி – தினமணி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s