வேளாண் செய்தித் தொகுப்பு 15-08-2010

வேளாண் பூமியாம் இந்தியாவின் 64ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில அனைவரையும் சந்திப்பதில் மகிழ்வெய்துகிறோம். தவிற வேளாண் துறையை ஊக்குவிக்க பிரதமர் மன்மோகனோ, முதல்வர் கருணாநிதியோ நம் கவனத்தைக் கவரும் அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை என்கிற வருத்தமும் நம் மனதைக் கவ்வத்தான் செய்கிறது.

நூறுநாள் வேலைத்திட்டம் (NREGA) தொடர்பாக அவையில் நடைபெற்ற விவாதம் கவனத்தை ஈர்க்கிறது. நூறுநாள் வேலைத்திட்டம் என்பது நம் நாட்டிற்கு ஒரு கனவுத்திட்டம் போன்றது. அது நீடிக்க வேண்டும் என்பதே நமது ஆவல். அது நடைபெறும் முறையில் மாற்றங்கள் அவசியம் என்பதை நாம் அறியவேண்டும். பொதுவாகவே, அனைத்து பகுதி விவசாயிகளும் குற்றம் சாட்டுவது கூலி ஆட்கள் பற்றாக்குறை. இந்தத் திட்டம் பயிர் அறுவடை காலத்தில் நடைமுறைப்படுத்தப் படாது என்று அறிவித்தாலும் அது பெயரளவே உள்ளது. தவிற கேள்விப்பட்ட வரையில் குறிப்பிட்ட ஒரு நபருக்கு குறிப்பிட்ட நாள் வரை வேலை தந்துமுடித்தாலும், அதே நபருக்கு திரும்ப பணி வழங்கப்படுவதாகத் தெரிகிறது. அது செல்வாக்கோ பிற பிரச்சினைகளோ என்று நாம் அரசியல் பேசாவிட்டாலும், NREGA படி நடக்கும் பணிகளின் தரம் அவ்வாறு இருக்கிறது. நான்கு விரட்கடை தோண்டிவிட்டு குளத்தைத் தூர்வார்வதாக கணக்கு காட்டி இருக்கிறோம். அதற்கு ஆன செலவிற்கு எந்திரத்தின் மூலம் அந்தப் பணியை மேற்கொண்டால் சிறப்பான முறையில் முடிந்திருக்கும் என்பது நமது யோசனை. பணியாளர் நேரங்களில் ஒரு ஒழுங்குமுறை என்பது இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கறைகள் களைவதற்காக கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்று செய்திகளில் படித்தோம். அது பற்றி தெரியவில்லை.

மாறாக, எந்திரத்தையும் மக்கள் சக்தியையும் கலக்க வேண்டும். உதாரணமாக, குளத்தை எந்திரம் தூர்வாரட்டும். தூர்ந்து போன மடைப்பகுதிகளை மக்கள் சரி செய்யட்டும். கரைகளில் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க செடிகள் நடவு மற்றும் பராமரிப்பினை மகளிர் தொழிலாளர்கள் பார்க்கட்டும். திட்டமிட்ட பணிகள் மெற்கொண்டால் பணிகள் சுத்தமாக முடியும் என்பது நமது பார்வை. ஆனால் அது போன்று நடைபெறுவதற்குரிய தலைமை அங்கு இல்லை.

அவை விவாதங்களில் வேலைத்திட்டத்தையும் வேளாண் பணிகளையும் ஒருங்கிணைப்பது பற்றி எதிர்கட்சிகள் பேசியதாக செய்திகள் வெளியாயின. அதாவது வேலைத்திட்டத்தின் சம்பளத்தின் ஒரு பகுதி நிலத்தின் சொந்தக்காரர் வழி பணியாளர்களுக்குப் போகட்டும் என்று யோசனை செய்திரு்ககின்றன. அப்படிச் செய்தால் உழவுக்கு மானியம் கொடுத்தது மாதிரி ஆகிவிடும் என்று அரசு மறுத்திருப்பதாகத் தெரிகிறது. எதிர்கட்சிகள் செய்யும் யோசனையில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போதைய திட்டத்தில் இருக்கும் குறைபாடுகள் இதில் வராமல் பார்த்துக் கொண்டால் வேளாண் பணிகளும் நடைபெறும். அரசாங்கத்தின் நோக்கமும் நிறைவேறும். பணம் என்கிற ஒன்றை நேரடியாகக் கையாளக் கொடுத்தால்தான் பித்தலாட்டங்கள் அரங்கேறும். அதில் கண்டிப்பு மேற்கொண்டு பணிகளில் கவனம் செலுத்தினால் சிறப்பான முறையில் விவசாயமும் பணியாளர்களும் செழிப்பார்கள்.

அரசாங்க வேளாண் அறிவிப்புகள் காதும் காதும் வைத்தாற்போல நடக்கிறது என்று கடந்த வாரம் குறைப்பட்டு இருந்தோம். நம் மனக்குறையை வெளிப்படுத்தும் வகையில் மானியம் பற்றிய திட்டங்கள் வெளியிடுவதில் வெளிப்படையான தன்மை இல்லாததைச் சொல்லி தினமணி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. தனியார் முதலாளிகள் பைகளில் கத்தை கத்தையாக பணம் சேர்க்க FM வானொலிகள், ஊரே குறைசொன்னாலும் வளர்ச்சித் திட்டங்களை புறம் தள்ளி வீட்டுக்கு வீடு பிள்ளையாராக உட்கார்ந்து வரும் இலவச தொலைக்காட்சி (தொலைக்காட்சி என்பது தகவல் பரிமாற்ற சாதனம் என்பதை விட அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அது ஒரு விஷ விதை), தூங்கி வழியும் தோட்டக்கலை மாவட்ட மற்றும் கிளை அலுவலகங்கள் போன்றவை இருந்தும் இந்த எளிய செயலைச் செய்ய யாருக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது. தகவல் பரிமாற்றம் செய்வதைத் தவிற இவர்களுக்கு என்ன வேலை? நாலாவது தெருவில் மாரியம்மன் கோயில் நடந்த விளக்கு பூசை செய்தி நாளிதழ்களில் படத்துடன் வெளியாகிறது. வேளாண் அறிவிப்புகள் எப்ப வெளியாகும் எதில வெளியாகும் என்பதெல்லாம் மர்மமான விஷயமாக இருக்கிறது. விபரம் அறியா சிறு விவசாயிகள் கந்துவட்டி, வங்கி வட்டி என்று கஷ்டத்திலும் நஷ்டத்திலும் உழல்கிறார்கள். பெருவிவசாயிகள் மானியம் உதவியுடன் சைடு வருமானமாக விவசாயத்தைப் பார்க்கிறார்கள். மானியம் என்பதற்கு அர்த்தமே தவறாகப் போகிறது. எனவே வேளாண் அறிவிப்புகள் வெளிப்படையாக வெளியிடப்படவேண்டும்.

புதிய ரகங்கள் அறிமுகம் மற்றும் ஆர்வம் தரும் பயிரிடும் யோசனைகளுடன் இந்த வார செய்திகள் வெளியாகி உள்ளன. உதாரணமாக வாழையில் காற்றடிக்கு நைலான் கயிறு கொண்டு பாதுகாப்புத் தரும் சிந்தனையை செயலாக்கம் செய்து நன்மை அடைந்துள்ளார் இராமாபுரம் ஞானசேகரன் (கடலூர்). புதிய தென்னை, வாழை மற்றும் சூரிய காந்தி ரகங்களை வேளாண் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. தவிற உயிரியல் அடிப்படையில் அமைந்த பருத்திப் பாதுகாப்பும் உற்சாகம் தரும் வகையில் உள்ளது.

இந்த வார செய்திகளை உங்களுக்குத் தொகுத்துத் தருகிறோம்.

நன்றி.

மறைக்கப்படும் மானியத் திட்டங்கள்!

வாழை – காற்றடி பாதுகாப்பு – கம்புகளுக்கு பதிலாக நைலான் கயிறு

புதிய தென்னை ஏ.எல்.ஆர்.2 (த.வே.ப.க.)

புதிய வீரிய ஒட்டு சூரியகாந்தி கோ.2 (த.வே.ப.க)

புதிய கரும்பு ரகம் த.வே.ப.க. கரும்பு எஸ்.ஐ.7

கோடையில் உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் தேமல் நோய்

பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

3 thoughts on “வேளாண் செய்தித் தொகுப்பு 15-08-2010

 1. என்ன இந்த வாரத் தொகுப்பு காரமாய் இருக்கிறதே.

 2. மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
  NREGA விவசாயிகளை பாதிக்காதவகையில் இருக்கவேண்டும். நாலு விரல் அளவுக்குத்தான் எல்லா இடங்களிலும் வேலை நடக்கிறது. இயந்திரங்களை தேவையான இடத்தில் பயன்படுத்திதான் ஆகவேண்டும் , திரும்பவும் கற்காலம் நோக்கி செல்வதுபோல் உள்ளது.

  //வேளாண் துறையை ஊக்குவிக்க பிரதமர் மன்மோகனோ, முதல்வர் கருணாநிதியோ நம் கவனத்தைக் கவரும் அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை //
  ஏன் இல்லை? முதல்வர் கருணாநிதி தன் வழக்கமான “இலவசம்” கொடுக்கிறாராம். மின் மோட்டார்கள்… ஆனால் மின்சாரம் வராது. இலவச மின்சாரம், இவர்களுக்கு சுய தம்பட்டம் அடிக்கத்தான்… 415volt வரவேண்டிய மின்சாரம் 100volt இக்கும் குறைவாகவே வருகிறது, பல நேரங்களில் வருவதே இல்லை. இந்த பிரச்சனையால் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகிறது.

  வேளான் துறையில் எங்குமே முழுமையான தகவல்கள் கிடைப்பது இல்லை. தமிழ்நாடு அரசாங்க இணையதளம் உட்பட…

  • திரு ரெங்கா,
   இலவச மின்மோட்டார் பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன். 🙂

   வருகைக்கும் பதிலுரைக்கும் நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s