வெள்ளைப்பொன்னி சாகுபடி

தமிழகத்தில் பச்சரிசி தரும் ரகங்களில் வெள்ளைப் பொன்னியும் ஒரு சிறந்த நெல் ரகமாகும். இதன் அரிசி சன்னமாகவும் சமைப்பதற்கு ஏற்றதாகவும் உள்ளது. இந்த நெல்லுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு சாகுபடியில் நல்ல லாபம் கிடைக்கும். இதன் சாகுபடி முறைகள் விவசாயிகள் நலனுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாகுபடி முறைகள்:

  • ஏக்கருக்கு 30 கிலோ விதை பயன்படுத்த வேண்டும்.
  • எட்டு சென்ட் பரப்பில் நாற்றங்கால் தயார் செய்து நாற்று நடவேண்டும்.
  • நாற்றங்காலுக்கு 8 சென்ட் பரப்பில் 16 கிலோ டி.ஏ.பி. உரம் இடப்படுகின்றது. இதோடு மக்கிய தொழு உரம் 8 சென்ட் பரப்பிற்கு 20 கூடை இடப்படுகின்றது.

நாற்று செழிப்பாக வளரும். இலைப்பேன் தாக்குதல் வரும். இதற்கு தக்க பயிர் பாதுகாப்பு செய்து நாற்றின் நுனி இலை பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்.

நடவு வயல்:

விவசாயிகள் நடவு வயலுக்கு அதிக அளவு இயற்கை உரங்கள் இடுகிறார்கள். இதற்கு நான்கு டிராக்டர் டிரெய்லர் லோடு மக்கிய தொழு உரத்தை இடுகின்றனர். இதற்கு ரூ.2000 வரை செலவாகின்றது. இந்த செலவைக் குறைக்க வயலில் பசுந்தாள் உரச் செடியான தக்கைப்பூண்டினை நெருக்கமாக விதைத்து உழுதுவிட்டு சாகுபடி செய்யலாம். இம்மாதிரி இயற்கை உரம் இடுவதற்கு செலவு ரூ.400தான் ஆகும்.

வெள்ளைப் பொன்னிக்கு அவுரி விதைத்து உழுதுவிடுவதும் சிறந்தது. குறிப்பாக தக்கைப்பூண்டினை விட சிறந்தது. ஆனால் அவுரி பூமியில் 6 மாதங்கள் நிற்க வேண்டும். பின்தான் அதனை மடக்கி உழுது நாற்று நடலாம். அவுரியை உழுது செய்யும் சாகுபடியில் ரசாயன உரங்கள் இடுவதில் சேமிப்பு காண முடியும். அவுரியின் காரணத்தினால் களைச்செடிகள் வீரியமாக வராது. அதனால் களைச்செலவு மிகவும் குறைவு. மேலும் பயிர் பாதுகாப்பு செலவும் குறைவு. மொத்த சாகுபடி செலவில் ரூ.2000 வரை குறையும். ஆனால் அவுரியை இரு போக நஞ்சை நிலங்களில் விதைத்து உழ முடியாது. ஒரு போக நஞ்சை நிலங்களில் உபயோகிக்கலாம். வெள்ளைப்பொன்னி பொதுவாக இரு போக நஞ்சை நிலங்களில் சாகுபடி செய்வதால் தக்கைப் பூண்டினை இயற்கை உரமாக உபயோகிக்கலாம்.

வெள்ளைப்பொன்னி சாகுபடிக்கு இயற்கை உரங்களோடு ரசாயன உரங்களையும் இட்டால்தான் ஏக்கரில் 20 மூடைகளுக்கு அதிகமாக மகசூல் கொடுக்கும். இதனால் வயலுக்கு அடியுரமாக டி.ஏ.பி. யூரியா மற்றும் பொட்டாஷ் (டி.ஏ.பி., அரை மூடை, பொட்டாஷ் அரை மூடை, யூரியா 5 கிலோ) இவைகளை இடவேண்டும். நடவு வயலில் சரியாக அண்டை வெட்டி வெகு சீராக பரம்படித்து நிலத்தை சமன்செய்ய வேண்டும்.

சமன்செய்த நிலத்தில் ஏக்கரில் 12 கிலோ ஜிங்க் சல்பேட்டினை தேவையான ஆற்று மணலுடன் கலந்து வயலின் மேல் (1 ஏக்கர் பரப்பு) சீராகத் தூவ வேண்டும். நாற்றினை வேர் அறுகாமல் பறித்து வந்து நடவு வயலில் வரிசை நடவு போடவேண்டும். வரிசைக்கு வரிசை 9 அங்குலமும், வரிசையில் குத்துக்கு குத்து 9 அங்குலமும் இடைவெளி விட்டு 30 நாட்கள் நாற்றினை குத்துக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவேண்டும. அதிக இடைவெளி கொடுத்து நடும்போது பயிர் ஓரளவிற்கு கீழே சாயாமல் நின்று வளர்ந்து நல்ல மகசூல் தரும். நட்ட பயிருக்கு இரண்டு முறைகள் களையெடுக்கவேண்டும். நடவு நட்ட 25 நாட்கள் பிறகு மேலுரமாக யூரியா 15 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 3 கிலோ இடவேண்டும். சாகுபடி சமயம் வரக்கூடிய பூச்சிகள் பூஞ்சாள நோய்களைத் தடுக்க வேண்டும். (செலவு ரூ.150) பயிரினை நன்கு கண்காணிப்பு செய்து லாபம் எடுக்க வேண்டும்.

தினமலர் செய்தி : எஸ்.எஸ்.நாகராஜன்

Advertisements

One thought on “வெள்ளைப்பொன்னி சாகுபடி

  1. Pingback: செய்தித் தொகுப்பு « வேளாண் செய்திகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s