விவசாயப் பொருள்காட்சி தொடங்கியது

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வி.வி.ஏ. ஆறுமுகம் மகாலில் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை விவசாய பொருள்காட்சி நடைபெறுகிறது. இதை மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியை சென்னை டிரேட் ஈவண்ட்ஸ் நிறுவனம் நடத்துகிறது. இதுகுறித்து அந்நிறுவன வணிக இயக்குநர் இரா. இளங்கோ நிருபர்களிடம் கூறியது:

இந்த பொருள்காட்சியில் விவசாயத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை அறிவியல் நிலையம், தென்னிந்திய காட்டன் மில்ஸ் சங்கம், ரோவர்ஸ் விவசாயக் கல்லூரி, பெங்களூர் காபி கழகம், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ், இந்தியன் பொட்டாஷியம் நிறுவனம் ஆகிய துறைகள் கலந்து கொள்கின்றன.

பொருள்காட்சியில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, விவசாய உபகரணங்கள், விவசாய தொழில்நுட்பம், டிராக்டர்கள், நுண்ணிய உயிர் உயர் விளைச்சல் தொழில்நுட்பம், பம்ப்புகள், சொட்டு நீர்ப் பாசனம், செடிகள், விதைகள், தென்னங்கன்றுகள், விவசாயப்  புத்தகங்கள் மற்றும் பல அறிய கண்டுபிடிப்புகளும் இடம்பெறுகின்றன.

இந்த பொருள்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும். எந்த நிலத்தில் என்ன பயிர் செய்யலாம் என்பதற்கு சரியான தீர்வு கிடைக்க இந்த பொருள்காட்சி வழிகாட்டியாக இருக்கும்.

மேலும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் ஒரே இடத்தில் வாங்க, உற்பத்தியாளர்களிடம் நேரடித் தொடர்புக்கு ஒரு பாலமாக இருக்கும். மேலும் இந்த பொருள்காட்சியை பார்வையிட இலங்கை மற்றும் சீனாவிலிருந்து விவசாயக் குழுவினர் வருகை தர உள்ளனர். இதன் மூலம் இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன என்று தெரிவித்தார்.

One thought on “விவசாயப் பொருள்காட்சி தொடங்கியது

  1. Pingback: செய்தித் தொகுப்பு « வேளாண் செய்திகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s