போலி இயற்கை உரங்கள்: விவசாயிகளே உஷார்!

மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா குறைந்த அளவிலேயே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் குறைந்த அளவிலான ரசாயன உரங்களின் பயன்பாடே, தற்போது நமது இயற்கை வேளாண் விஞ்ஞானிகளால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

ஒருகாலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட டி.டி.டி., பி.எச்.சி. பூச்சிக்கொல்லி மருந்துகள், தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. காரணம், டி.டி.டி. மருந்தின் நச்சுக் கழிவுகள், தாய்ப்பாலில் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பல ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சு, கரைந்து போகாமல் தங்கி விடுவதே, மோசமான விளைவுகளுக்குக் காரணம்.

எனவேதான் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்காத தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இயற்கை உரங்களின் பட்டியலில், நுண்ணுயிர் உரங்கள், மண்புழு உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.

இயற்கை உரங்களின் பயன்பாட்டை வலியுறுத்தும் அதே நேரத்தில், இயற்கை உரங்கள் என்ற பெயரில், பல போலிஉரங்கள் உலா வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

எள்ளுப் பிண்ணாக்கு, மணிலா பிண்ணாக்கு ஆகியவற்றில் வேப்பெண்ணெயைத் தெளித்து, வேப்பம் பிண்ணாக்கு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

திரவ வடிவில் அசோஸ்பி, பாஸ்போமிக்ஸ், பொட்டாஷ் ஆக்டிவா, ஜிங்க் ஆக்டிவேட்டர் போன்ற இயற்கை உரங்கள் கவர்ச்சிகரமான பொட்டலங்களில் உரக்கடைகளில் விற்பனைக்கு உள்ளன.

பன்னாட்டு நிறுவனங்களும், உள்ளூரில் சிறிய அளவில் குடிசைத் தொழில்போல் பலரும் இந்த இயற்கை உரங்களைத் தயாரித்து, பயிர் வளர்ச்சி உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற பெயரில் விற்கிறார்கள். ஒரே இயற்கை உரம், பயிர்களுக்கு பல்வேறு சத்துகளை அளிப்பதாக விளம்பரம் செய்கிறார்கள்.

இவற்றைத் தயாரிப்பதற்கான அனுமதியை பெற, ரூ.300 கட்டணம் செலுத்தி, வேளாண்மைப் பல்கைலக்கழகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே. இரசாயன உரங்களுக்குத் தரக் கட்டுப்பாடு உள்ளது. அதற்கான சட்டங்களும் உள்ளன. நுண்ணுயிர் உரங்களில் ஒரு கிராமில் ஒரு மில்லியன் நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும் என்று தரக் கட்டுப்பாடு உள்ளது. அதேபோல் மண்புழு உரங்கள், நகர கம்போஸ்டு உரங்களுக்கும் தரக் கட்டுப்பாடு உள்ளது.

எனவே உரக் கட்டுப்பாடு அலுவலர்கள், அடிக்கடி உரக்கடைகளில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி, தரம் குறைவாக இருந்தால் அத்தகைய உரங்களை தயாரித்தோர், விற்பனை செய்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆனால் சந்தையில் விற்பனையாகும் ஏனைய இயற்கை உரங்களுக்கு எந்தத் தரக்கட்டுப்பாடும், அதற்கான சட்டங்களும் இல்லை என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள். இதனால் விளம்பரங்களை நம்பி இந்த இயற்கை உரங்களை வாங்கிப் பயன்படுத்தினால் பாதிக்கப்படுவது விவசாயிதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குப்பையில் இருந்து  மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்து வரும் பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி இதுபற்றிக் கூறுகையில், “மாதம் 3 முதல் 4 டன்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறோம். காய்கறிச் செடிகளுக்கும், நிறுவனங்களில் புல்வெளிகள் அமைப்போரும் இந்த உரத்தை விரும்பி வாங்குகிறார்கள். அதிக அளவில் பயன்படுத்த இன்னமும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

ஆனால் இயற்கை உரங்கள் என்ற பெயரில் பல டானிக்குகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன. புதுவை மாநிலத்தில் இத்தைகைய இயற்கை உரங்களை அதிகம் தயாரிப்பதாக அண்மையில் என்னை சந்தித்துத் தெரிவித்தனர். ஆனால் அவற்றின் தரம் பற்றி யாருக்கும் தெரியாது” என்றார்.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில், “”இயற்கை உரங்களுக்கு தரக் கட்டுப்பாடு சட்டங்கள் கொண்டுவர வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் அலுவலர்களின் பரிந்துரைப்படி விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடாவது இருக்க வேண்டும்” என்றார் அவர்.

தினமணி தகவல் – த. தேவராஜ், கடலூர்

Advertisements

One thought on “போலி இயற்கை உரங்கள்: விவசாயிகளே உஷார்!

  1. Pingback: செய்தித் தொகுப்பு « வேளாண் செய்திகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s