ஆர்வம் – தோல்வி – வெற்றி

தொழில் நடத்துதல், வழக்கமாக செல்லும் வழியில் சற்று விலகி யோசித்தல் என்பது சிலருக்கு கிலியை உண்டாக்கும். சிலருக்கு பகட்டு போலி கவுரவம் போன்றவை இதற்குக் குறுக்கே நிற்கின்றன. தொழில் முனைதல் என்பது துணிச்சலான காரியம். அதனை ஆர்வமாக செய்யும் நபர்களைப் பார்க்கையில் நமக்கு ஆர்வம் உண்டாகிறது. சிலருக்கு அந்த ஆர்வம் சிறு பிராயத்திலேயே வந்துவிடுகிறது. சிலருக்கு வாழ்விற்கு வழிதேடிவதில் புலப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் தீ மாதிரி பறக்கிறார்கள். மற்றவரை பாதாளத்தில் தள்ளுகிறார்கள். அவரவர் பாணிகளைப் பொறுத்து அவர்களுக்கு லாபம், தொழில் துறையில் மதிப்பு போன்றவை ஏற்படுகிறது. டாடா குழுமத்திற்கும் அம்பானி குழுமத்திற்கும்தான் எத்தணை வித்தியாசம்?

நேற்று கணேஷ் என்கிற ஒரு தொழில் முனைவோரை ஏதேச்சையாக சந்திக்க நேரிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைகாட்டி அருகில் நண்பர்களுடன் இணைந்து பால் பண்ணை வைத்து நிர்வகித்துக் கொண்டு இருக்கிறார். படிப்பு அதிகமில்லை. பத்தாவது முடித்திருக்கிறார். வாழ்வின் வழிதேடி அமீரகத்திற்கு இருமுறை போய் வந்திருக்கிறார். அமீரகத்தில் ஓய்வு நேரங்களில் வாசிக்கும் பழக்கம் வந்திருக்கிறது. இதழ்கள் வழி விவசாயம் குறித்த கட்டுரைகள் உட்பட பலவற்றை படித்திருக்கிறார்.

நெருப்பில்லாமல் உள்ளத்தைக் கணர வைக்கும் திறன் வார்த்தைகளுக்கு மட்டுமில்ல: வாசிப்பிற்கும் உண்டு. கோ மடம் வைத்திருக்கிறார். நிர்வாகம் சரிபட கைகொடுக்காமல் போக மனம் தளராமல் அதே தொழிலை சில பல மாறுதல்களுடன் நண்பர்களுடன் இணைந்து இந்தத் தொழிலைத் தொடங்கியிருக்கிறார். ஊரில் உள்ள பசு வளர்ப்போருடன் இணைந்து அவர்களிடம் பால் வாங்கி சந்தைப் படுத்தி வருகிறார். ஆரம்பித்த தொழில் சறுக்கினாலும் மாறுதலுடன் திரும்ப அதனைத் தொடங்கி வெற்றி அடைந்திருக்கிறார். இந்த சிந்தணை பலரிடம் இல்லை.

விவசாயம் இருக்கிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று நம் பதிவில் எழுதியிருக்கிறோம். ஆனால் உழுதுண்டு வாழ்வது அவ்வளவு எளிதில்லையே. கூலி கொடுக்க முடியவில்லை. எந்திரங்கள் வந்தாக வேண்டிய நிலைமை. தகுந்தோரை சந்தித்து உரையாடி இருக்கிறார். நெல் கையைக் கடிக்க, பயிர்களுக்கு பதிலாக தேக்கு கோங்கு தென்னை என்று அதிக மனித ஆற்றல் தேவைப்படாத வழியைக் கையிலெடுத்திருக்கிறார்.

அத்துடன் அவர் சொல்வது, நிறைய பேர் பால்பண்ணை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் தண்ணீர் கலக்கவேண்டும் என்ற நினைப்பு வந்த மாத்திரத்தில் அவர்கள் சூனியமாகிறார்கள் என்று பேசுகிறார். தங்கள் பண்ணைக்கு என்று தர நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அந்தத் தரத்தை உறுதி செய்ய கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்கிறார்கள். உறக்கம் விலக்கி வைகரைப் பொழுதை தங்கள் சொந்தமாக்கியிருக்கும் அவர்கள் திரும்ப தூங்க 10, 11 என்று ஆகிவிடுகிறது. ஆனால் பண்ணை, தங்கள் பசு, தரநிர்ணயம், விவசாயம், மரங்கள் என்று ஓய்வில்லாத வாழ்வை தினசரி வாழ்கிறார். நான் சந்தித்த அன்றும் வியாபார நிமித்தமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். தொழில் பண்ணுங்க என்று ஆர்வத்துடன் பேசுகிறார். மற்றவர் அப்படித்தான் தன்னுடன் பேசியதில் இப்படிப்பட்ட ஆர்வம் வந்ததாக சொல்லும் அவர், பிறருக்கு வழிகாட்டுதலையும் செய்து வருகிறார்.

தன் மகளை (முதல் பட்டதாரி) படிக்க வைத்து பொறியியல் கலந்தாய்விற்காகக் காத்திருக்கிறார். தனக்கு ஆண் பிள்ளை என்றாலும், பெண் பிள்ளைகளை ஆண் பிள்ளைகளாக வளர்க்க விருப்பம் என்று சொல்லி புண்ணகைக்கிறார்.

என் ஊரிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. உயர்வோம் கை கொடுப்போம் என்கிற வார்த்தையை அமீரகம் சென்று வந்தவர்களிடம் அடிக்கடி கேட்கிறேன்.

நன்றி.

2 thoughts on “ஆர்வம் – தோல்வி – வெற்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s