மலர் சாகுபடிக்கு மானியம்

கடையநல்லூர் வட்டாரத்தில் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலை உதவி இயக்குநர் லி. அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  கடையநல்லூர் வட்டாரத்தில் கேந்தி, பிச்சி, மல்லி, செவ்வந்தி, சம்பங்கி, அரளி போன்ற மலர்கள் விவசாயிகளால் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  இம் மலர் சாகுபடியைச் செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,000 வரை வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,920 அளிக்கப்படும்.

எனவே, மானியத்தைப் பெற விரும்பும் விவசாயிகள்

  • 10-1 சிட்டா நகல்,
  • அடங்கல் படிவம்,
  • குடும்ப அட்டை நகல்,
  • 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

ஆகியவற்றுடன் தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s