இயற்கை உரத்தில் காய்கறி தோட்டம் – அவிநாசி பேரூராட்சி மும்முரம்

அவிநாசி பேரூராட்சி சார்பில், இயற்கை உரங்கள் மூலமாக காய் கறி விளைவிக்கப்பட்டு, விற் பனை செய்யப்படுகிறது. முற்றிலும் இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகளை வாங்க, பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவிநாசி பேரூராட்சி உரப் பூங்கா, கைகாட்டிப்புதூரில் 2.75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பேரூராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரம்  தயாரிக்கப்படுகிறது. மண் புழு உரம், இயற்கை உரம் என்ற இரு வகையான உரத்தை வாங்க விவ சாயிகள் ஆர்வம் காட்டி வருகின் றனர். இயற்கை உரம் கிலோ ரூ.6க்கும், மண்புழு உரம் கிலோ ரூ.5க்கும் விற்கப்படுகிறது.

உரப்பூங்காவின் ஒரு பகுதியில் அரை ஏக்கரில் காய்கறி தோட்டமும் அமைக்கப்பட் டுள்ளது. முற்றிலும் இயற்கை உரத்தை கொண்டு பீர்க்கங்காய், சுரைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், வெண்டைக்காய், பாகற்காய், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளும், செங்கீரை, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளும் விளைவிக்கப் படுகின்றன. சோதனை முயற்சியாக மேற் கொள்ளப்பட்ட இத்தோட்டத் தில் இருந்து காய்கறிகளை வாங்கிச்செல்ல பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அவிநாசி பேரூராட்சி தலைவி புஷ்பலதா, செயல் அலுவலர் கதிரவமூர்த்தி, சுகாதார ஆய் வாளர் கேசவராஜன் ஆகியோர் கூறியதாவது:அவிநாசி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட் டத்தில் அமைக்கப்பட்டுள்ள உரப்பூங்காவில், இயற்கை உரத்தை பயன்படுத்தி, காய்கறி தோட்டம் அமைக்கப்பட் டுள்ளது. இங்கு காய்கறிகள் முற்றிலும் இயற்கை விவசாய முறையில் இயற்கை உரமிட்டு வளர்க்கிறோம்.

இதனால், நல்ல சுவையும், உடலுக்கு கூடுதல் ஆரோக்கியமும் கிடைக்கும். காய்கறிகளைத் தவிர, உரப் பூங்காவில் ஐம்பது தென்னை மரங்கள், 30 முருங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. குப் பையை கொண்டு உரம் தயாரித்து, பயன்படுத்துவதால், செயற்கை உரம் தெளித்து வளரும்  செடிகளை காட்டிலும், காய்கறி செடியில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பதற்கு பதிலாக, “தசகவ்யா’ கரைசலை தெளிப்பதால், மாவுப்பூச்சி உள்ளிட்ட எந்தப்பூச்சி, வண்டின் தாக்குதலும் கிடையாது. தற்போது, இயற்கை முறை விவசாய காய்கறிகளை சந்தைப் படுத்துவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறோம். இதை வாங்க பண்களிடம் ஆர்வம் காணப்படுவதால், தோட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில், காய்கறி தோட்டம் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் ஏற்பட் டுள்ளது. தினமும் காலை 6.30 மணியிலிருந்து 7.00 மணி வரை பேரூராட்சியில் காய்கறி விற்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s