தென்னையில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்தல்

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்ப மிஷன் எனப்படும் திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்குகிறது தென்னை வளர்ச்சி வாரியம். மானியத்தோடு பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்கிறார்கள். அக்மார்க் தரத்தில் தேங்காய் எண்ணெய், தேங்காய் பவுடர் போன்றவை உற்பத்தி செய்து கொட்டாங்குச்சியை (சிரட்டை) பயன்படுத்தி பொருட்கள் செய்து ஆக்டிவேட்டட் கார்பன் தயாரிப்பது, இளநீரில் வினிகர் தயாரிப்பது, இளநீரை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது, தேங்காய் உலர்த்தும் இயந்திரம் வாங்குவது என்று பல்வேறுவிதமான செயல்களுக்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது.

மேற்சொன்னவை தவிர, புதிதாக தென்னை சார்ந்த பொருட்களை யார் தயாரிப்பதாக இருந்தாலும் நிதி உதவி கிடைக்கிறது. அதிக பட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியமாக வழங்குகிறார்கள். தனிப்பட்ட விவசாயிகளுக்கும் விவசாய குழுக்களுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் விவசாயிகளின் பண்ணையை நேரடியாக பார்வையிட்டு உரிய தகுதிகள் இருக்கும் பட்சத்தில் நிதி உதவி வழங்குவார்கள். தென்னை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், கருத்தரங்கு மற்றும் கண்காட்சிகளில் அரங்கு அமைத்து அவற்றை விற்பனை செய்யவும் நிதிஉதவி வழங்கப்படுகிறது. தனி விவசாயிக்கு ரூ.10 லட்சம் வரையிலும், விவசாயக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.25 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் நிதி உதவி பெற விரும்புபவர்கள் கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தை தொடர்பு கொள்ளலாம்.

சேர்மன், கோகனட் டெவலப்மென்ட் போர்டு, கேரளா பவன், கொச்சின்-682 011.
0484-237 6265, 237 7267, 237 6553, 237 5266.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s