மானாவாரி நிலக்கடலைக்கு ஊட்டமேற்றிய தொழுஉரம்

First Published : 03 May 2010 12:09:43 AM IST
Last Updated : 03 May 2010 10:00:24 AM IST

நாமக்கல்,​​ மே 2: ​ நாமக்கல் மாவட்டத்தில் மானாவாரி பயிராக நிலைக்கடை பயிரிடும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து பயன்படுத்துமாறு வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

÷இது தொடர்பாக,​​ நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை உதவி இயக்குநர் இரா.​ சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி:

÷மானாவாரி நிலக்கடை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.​

15 நாட்கள் கழித்து கிளறிவிட்டு மீண்டும் மூட்டம் போட வேண்டும்.

இதன் மூலம் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்துகள் பயிருக்கு கிட்டும் நிலைக்கு வரும்.​ ஒரு மாதம் முடிந்து மானாவாரி நிலக்கடலை விதைக்கும்போது இந்த உரக்கலவையுடன் 9 கிலோ யூரியா மற்றும் 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை கலந்து விதைப்பு சாலில் இட வேண்டும்.

÷ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுவதால் நிலக்கடலை மகசூல் அதிகரிப்பதுடன் மண்ணின் வளமும்,​​ ஈரத்தன்மையும் பாதுகாக்கப்படும்.​ வறட்சியை தாங்கி வளரும் தன்மை பயிருக்கு கிடைக்கும்.​ நிலக்கடலை பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.

விழுதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கூடுதல் மகசூல் பெறமுடியும்.​ வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு மழை பெறப்பட்டவுடன் துவங்கும்.

எனவே,​​ தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும்.​ ஒரு மாதம் மூட்டம் போட்டு வைத்திருந்தால் மட்டுமே முழு பயன் பெற முடியும்.

Advertisements

2 thoughts on “மானாவாரி நிலக்கடலைக்கு ஊட்டமேற்றிய தொழுஉரம்

  1. ஆஹா, விவசாயப்பதிவிற்கு என்ன வரவேற்பு பார்த்தீர்களா?

    • வணக்கம் திரு கந்தசாமி அவர்களே.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      என்னுடைய பின்னாளைய தேவைக்காக வேண்டி பதிந்து வைக்கிறேன். ஆர்வமுடையவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும் என்று. மற்றபடி வரவேற்பு இருக்காது என்பது அறிந்ததே.

      மறுமொழி இட்டமைக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s