தண்ணீர் சிக்கன பாசன தொழில்நுட்ப முறை

புதுக்கோட்டை: விவசாயப் பணிகளுக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பாசன மற்றும் வேளாண் தொழில்நுட்ப முறையை பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டையில் உலகவங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் தெற்கு வெள்ளாறு மற்றும் பாம்பாறு வடிநிலப் பகுதிகளைச் சேர்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டா பகுதிக்குட்பட்டதாக இருந்தாலும் மாவட்டத்தின் பெரும்பகுதி மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலை உள்ளது. இதனால் விவசாயப் பணிகளுக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக சொட்டுநீர், தெளிப்பு நீர், காய்ச்சலும் பாய்ச்சலும் போன்ற பாசன முறையை விவசாயிகள் பின்பற்றவேண்டும். கிடைக்கின்ற தண்ணீரை சரிசமமாக பங்கீடு செய்து பாசனத்துக்கு பயன்படுத்தவேண்டும்.

செம்மை நெல் சாகுபடி முறையினை பின்பற்றுவதன் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற முடியும். எனவே, செம்மை நெல் சாகுபடியை பின்பற்றவேண்டும். விவசாய விளை நிலங்களின் அருகிலுள்ள ஏரி, பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பதன் மூலம் அதிக வருவாய் ஈட்டலாம். மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். பசுமை குடில் அமைத்து குரோட்டன்ஸ் செடிகள் வளர்ப்பதன் மூலம் அதிகப்படியான வருவாயை ஈட்டலாம். வாழை விவசாயிகள் திசு வாழை சாகுபடி செய்வதன் மூலம் இரட்டிப்பு வருவாய் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் விதமாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிர் சாகுபடி முறைகளை விவசாயிகள் அனைவரும் பின்பற்றவேண்டும் என கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s