50 சத மானியத்தில் காய்கறி விதை, பழச்செடிகள்

First Published : 24 Jun 2010 09:07:21 AM IST

Last Updated : 24 Jun 2010 11:52:46 AM IST

நாமக்கல், ஜூன் 23:  ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் 50 சத மானியத்தில் காய்கறி விதைகள், பழச் செடிகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலை உதவி இயக்குநர் பி. அசோகன் தெரிவித்துள்ளார்.

÷நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்துக்குட்பட்ட விவசாயிகளுக்காக பவித்திரம் கிராமத்தில் அடிப்படை பயிற்சி வகுப்பு நடந்தது.

இப் பயிற்சி வகுப்பை உழவர் பயிற்சி நிலைய உதவி இயக்குநர் இரா. சுப்ரமணியம் துவக்கி வைத்தார்.

தோட்டக்கலைத்துறை மானியத்திட்டங்கள் குறித்து உதவி இயக்குநர் பி. அசோகன் கூறியது:

÷நுண்நீர் பாசனத் திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 65 சதம் மானியம் வழங்கப்படுகிறது.

ஆத்மா திட்டத்தின் கீழ் வயல்களில் செயல்விளக்கத் திடல் அமைக்க ரூ. 4 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. காய்கறிகள், பழச்செடிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் பழச்செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், தேசிய மூலிகைப் பயிர் இயக்கத் திட்டத்தில் நெல்லி, வேம்பு, கற்றாழை, சர்க்கரைக் கொல்லி, கூர்க்கன் கிழங்கு, புதினா, துளசி, கீழாநெல்லி ஆகிய பயிர்களுக்கு 20 சதம் மானியம், கண்வழிக்கிழங்கு சாகுபடி செலவினத்துக்கு 50 சதம் மானியம், சிவப்பு சந்தன சாகுபடி செலவுகக்து 75 சதமானியம் வழங்கப்படுகிறது.

÷இந்த பயிர்கள் சாகுபடி செய்ய தேசிய வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருக்க வேண்டும்.

அரசு வழங்கும் மானியத் தொகையானது நேரடியாக விவசாயி கடன் பெற்ற வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.

÷எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என பி. அசோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisements

2 thoughts on “50 சத மானியத்தில் காய்கறி விதை, பழச்செடிகள்

    • நன்றி திரு நீலமேகம்
      மின்னஞ்சல் அறிவிப்பு தளத்தில் உள்ளது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s