தென்னையில் வாடல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

First Published : 24 Jun 2010 10:36:19 AM IST

Last Updated : 24 Jun 2010 12:42:38 PM IST

தருமபுரி, ஜூன் 23: தருமபுரி மாவட்டத்தில் தென்னை மரங்களை பாதித்து வரும் வாடல் நோயை கட்டுப்படுத்தி தேங்காய் விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தருமபுரி வேளாண் இணை இயக்குநர் மனோகரன் கூறியது:

தருமபுரி மாவட்டத்தில் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட சில பகுதியில் 20 முதல் 30 சதவீதம் தென்னை மரங்களில் வாடல் நோய் பாதிப்பு உள்ளது.

பருவமழை தொடங்கியுள்ள இச்சூழலில், தென்னையில் வாடல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தேங்காய் விளைச்சல் மற்றும் கிளைகள் காய்ந்து விவசாயிகளுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும்.

வாடல் நோய் ஒரு வகையான பூஞ்சணத்தால் ஏற்படக் கூடியது. இதைக் கட்டுப்படுத்த  பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

நோய் தாக்கிய மரங்களின் கிளைகள், மட்டைகள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு அல்லது மண் பரிசோதனை செய்து உர நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை மரம் ஒன்றுக்கு 50 கிலோ தொழு உரம், வேப்பம் பிண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும். சூடோமோனஸ் புளுரோசென்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 100 கிராமை நோய் தாக்கப்பட்ட மரத்தைச் சுற்றி  இடலாம்.

தாக்கப்பட்ட மரங்களைச் சுற்றிலும் வேர்ப் பாகத்தை நனையும் விதமாக 0.5 சதம் காப்பர் ஆக்ஸி குளோரைடு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது கார்பன்டசிம் என்ற ஊடுருவிப் பாயும் பூசணக்கொல்லி 2 மில்லியை 100 மில்லி நீரில் கலந்து (சாய்வாக முனை வெட்டப்பட்ட) வேரில் கட்டிவிட வேண்டும்.

இதுபோன்ற செயல்முறைகளின் மூலம் தென்னை மரங்களை வாடல் நோய் பாதிப்பிலிருந்து விவசாயிகள் பாதுகாத்து கொள்ளலாம் என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s