தென்னையில் வாடல்நோய் கட்டுப்படுத்த ஆலோசனை

First Published : 23 Jun 2010 10:05:10 AM IST

உடுமலை, ஜூன் 22: உடுமலை வட்டத்தில் தென்னையில் தோன்றியுள்ள வாடல் நோயைக் கட்டுப்படுத்த வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

÷இது குறித்து உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் டாம் பி.சைலஸ் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிóப்பு:

÷உடுமலை வட்டத்தில் வேளாண் விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருவமழை தொடங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தென்னையில் வாடல் நோய் ஒரு சில இடங்களில் தோன்றியுள்ளது. இது ஒரு வகையான பூசணத்தால் ஏற்படக் கூடிய நோய் ஆகும். இதனை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது கட்டாயம். நோய் தாக்கிய மரங்களின் கிளைகள், மட்டைகள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு அல்லது மண்பரிசோதனை செய்து உர நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.

÷வருடம் ஒருமுறை மரம் ஒன்றுக்கு 50 கிலோ தொழு உரம், வேப்பம் பிண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும். சூடோமோனஸ் புளுரோசென்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 100 கிராம் தாக்கப்பட்ட மரத்தினைச் சுற்றி இடலாம்.

÷தாக்கப்பட்ட மரங்களைச் சுற்றிலும் வேர்ப்பாகத்தை நனையும் விதமாக 0.5 சதம் காப்பர் ஆக்ஸி குளோரைடு கரைசலை ஊற்ற வேண்டும். அல்லது கார்பன்டசிம் என்ற ஊடுருவிப் பாயும் பூசணக் கொல்லி 2 மில்லியை 100 மில்லி நீரில் கலந்து (சாய்வாக முனை வெட்டப்பட்ட) வேரில் கட்டிவிட வேண்டும்.

தினமணி

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=261143&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s