எலி தொல்லையைக் கட்டுப்படுத்த புதிய பொறி

ந. குப்பன்
First Published : 17 Jun 2010 12:30:56 AM IST

புதுச்சேரி, ஜூன் 16: வீட்டில் பூனை வளர்த்தால் எலிகளின் தொல்லை குறையும். பூனை வளர்க்க வேண்டுமென்றால் அதற்குப் பராமரிப்பு செலவு மற்றும் பராமரிப்புப் பணி என்பது பெரிய வேலையாக இருக்கிறது. அதனால் எலியைப் பிடிக்கும் பூனை வளர்ப்பு என்பது இப்போது வீடுகளில் குறைந்து வருகிறது.

÷வயல்களில் கட்டுக்கடங்காத நிலையில் எலிகள் உலா வருகின்றன. வயல்களில் எலிகள் வலை தோண்டி தானியங்களைச் சேகரித்து வைத்துக் கொள்கின்றன. குறிப்பாக நெல் வயல்களில் கதிர்களைக் கடித்துக் கொண்டு போய் வலைகளில் சேகரித்து வைத்துக் கொள்கின்றன.

÷வளை எலி, புல் எலி, கெர்பில் எலி, வயல் சுண்டெலி என்று 4 வகையான எலிகள் இருக்கின்றன. இதைத் தவிர வீட்டு எலி என்றும் இருக்கிறது. எலியைப் பிடிக்கப் படாத பாடுபட வேண்டும். அது எப்படியாவது ஏமாற்றிவிட்டு தப்பிவிடும். அதனால்தான் மற்றவர்களை ஏமாற்றிச் சாப்பிடுவர்களையும் பெரிச்சாலி என்று அழைக்கிறோம்.

÷புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் உயிரியில் பரிசோதனைக் கூடம் அயல்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஓர் எலி பொறியை மேம்படுத்தி அதை விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

÷இந்த நிலையத்தின் பூச்சியல் கட்டுப்பாட்டு நிபுணர் என். விஜயகுமார்
கூறியது: இந்த எலி பொறி பிளாஸ்டிக் பொருளால் ஆனது. 2 தட்டு மாதிரி இருக்கும். இது இரண்டையும் பிரிக்கலாம். ஒவ்வொரு தட்டிலும் ஹைட்ராக்சி காவுமைரின் என்ற வேதித்தன்மை உள்ள கலவை தடவி இருக்கும். இதை வீட்டில் இருக்கும் எலியையும், வயலில் இருக்குóம் எலியையும் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

÷ஓர் அறையில் சுவற்றை அணைந்தார்போன்று இந்தப் பொறியை வைக்க வேண்டும். இரவு நேரங்களில் இதில் தடவி இருக்கும் கலவையின் வாசனைக்காக வீட்டு எலிகள், சுண்டெலிகள் ஓடி வந்து அதன் மீது ஏறி அமரும்போது அந்தப் பசை போன்ற பொருளில் எலியின் நகங்கள் ஓட்டிக் கொள்ளும். அந்த எலி அங்கிருந்து எழும்ப முடியாது. கலவை காலில் உள்ள தோலில் படுóம்போது அது நரம்பு மண்டலத்தை அடைவதால் எலி செயலிழந்து மாய்ந்துவிடும். மறுநாள் கையில் கையுறை அல்லது பழைய துணியைக் கொண்டு அகற்ற வேண்டும்.

÷ஓர் அறைக்கு ஒரு பொறி போதும். இதைக் குழந்தைகள் கைப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைப் பயன்படுத்தும்போது கையுறை வேண்டும். இதை 5 தடவை பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால் வீரியம் குறையும். இதை மேம்படுத்தி பல முறை பயன்படுத்த யோசித்து வருகிறோம். இதனால் மனிதனுக்குத் தீங்கில்லை.
இதைப் பயன்படுóத்தினால் சோப்புப் போட்டு கைகழுவ வேண்டும். இதன் விலை ரூ. 180. எலியைப் பிடிக்க எலி போன் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும்போது கம்பியை நீக்கி வைக்க வேண்டும்.

÷அப்போது கை மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் வைக்க வெங்காயம், கருவாடு, தேங்காய் போன்ற பொருள்களைத் தேட வேண்டும். சிலர் எலி மருந்து வைக்கிறார்கள். எலி வலையில் அலுமினியம் பாஸ்பேடு என்ற மருந்தை ஓர் எலி வலைக்கு அரை மாத்திரை வீதம் வைத்தால் போதும். தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் பகுதியில் எலியைப் பிடிக்க வில் கிட்டி வைக்கிறார்கள். இவை எல்லாம் பயன்படுத்துவதற்குச் சிரமமானது. இப்போது கண்டறியப்பட்டுள்ள இந்தப் பொறி பயன்படுத்துவதற்கு எளிமையானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s