கோழி பராமரிப்பு
ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு மாதம் ஒரு முறையும், கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறையும் குடற்புழு நீக்கம் செய்யப்பட வேண்டும்.
குடற்புழு நீக்கம் செய்யப்பட்ட கோழிகளுக்கு தேவைப்பட்டால் அழர்ச்சி மருந்துகளைக் கொடுக்கலாம்.
18வது வாரத்தில் கோழிகளில் காணப்படும் ஒட்டண்ணிகளை ஒழிக்க மருந்துக்குளியல் செய்யவேண்டும்.
18ஆம் வாரம் தொடங்கி கோழிகளுக்கு கிளிஞ்சல்கள் கொடுக்கப்படவேண்டும். இது முட்டையின் ஓடு உறுதியாக இருக்க!
(தமிழக விவசாயி உலகம்)
உங்கள் கோழியின் முட்டையிடுத் திறன் சோதிக்க!
ஆழ்கூளம் ஈரமாகிக் கெட்டியாக இருத்தல், கோழிகளுக்குப் போதிய அளவில் கிளிஞ்சல்களை அளிக்காமல் இருத்தல். சரியான எண்ணிக்கையில் தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுக்கள் இல்லாமல் இருத்தல். போதிய இடவசதி தராதது, தகுந்த காற்றோட்டம் வெளிச்சம் இல்லாமல் போதல். கோழிகளில் ஏற்படும் அடைகாக்கும் பழக்கம் போன்றவற்றால் முட்டையிடும் தன்மை குறைகிறது.
(தமிழக விவசாயி உலகம்)
how do make new agri busniesss